கொங்கு மண்டலம்
கொங்கு மண்டலம் கொங்கு தமிழ் என்பது கோயம்புத்தூர் வட்டார மக்கள் பேசும் வட்டார வழக்கு மொழி. . ஏனுங்கோ .... வாங்கோ என்ற வீட்டுல சாப்புட்டுபுட்டு போங்கோ என்று மரியாதையாகப் பேசுவார்கள். அப்பச்சி என்று தாய்வழித் தாத்தாவை அழைப்பதும் அப்பத்தாள் என்று அப்பாவழி பாட்டியை அழைப்பதும் இவர்கள் வட்டார வழக்கு. கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் , சேலம், தர்மபுரி, நீலகிரி, கரூர், கிருஷ் ணகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. மொத்தம் 61 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.10 நாடாளுமன்ற தொகுதிகள் உண்டு. சோழர் ஆட்சியில்தான் இது கொங்கு மண்டலம் என்று அழைக்கப்பட்டது. " சோழநாடு சோறுடைத்து " என்று சொல்வார்கள். மலையும் மலைசார்ந்த குறிஞ்சியும் காடும் காடு சார்ந்த முல்லையும் வயலும் வயல் சார்ந்த மருதமும் விரவிக் கிடக்கும் அருமையான வளமான நிலப் பகுதி அமைந்திருப்பது சோழ மண்டலத்தின் வளமைக்குக் இயற்கை தந்த கொடை என்றே சொல்ல வேண்டும். வேறு எந்தப் பகுதியிலும் இத்தனை வளங்கள் ஒருங்கே அமைத்திருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல முடியும்.. ஆனால் கொங்கு மண்டலம் தான் எல்லா வள...