Posts

Showing posts with the label பொன்னின் குடம் உடைந்தால் -மூதுரை

பொன்னின் குடம் உடைந்தால் ...

பொன்னின் குடம் உடைந்தால் ....  " கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" என்று சொல்லித் தந்த ஔவைக்கு அத்தோடு நம்மை விட்டுவிட மனமில்லை. சங்கு எத்தனை பேருக்குத்  தெரியுமோ என்ற ஐயம் ஔவையின்  மனதில் எழுந்தது.  தெரிந்தவர்கள் நான் சொன்ன  உவமை மூலம் சொல்ல வந்த  கருத்தைப் புரிந்திருப்பார்கள். தெரியாதவர்களுக்கு   புரிய வைக்க வேண்டுமே!  அதற்கு என்ன செய்வது?  எல்லாருக்கும் புரியும்படியான  இன்னொரு பொருளைக் கையிலெடுத்து  விளங்கும்படியாகச் சொல்லி வைப்போம்.  அப்படியாவது புரிகிறதா என்று  பார்ப்போம் என்று நினைத்தார்   ஔவை.  நாமும் பல நேரங்களில் சிலர் பேசும்போது   புரிந்து போல தலையை ஆட்டுவோம்.  ஆனால் ஒன்றும் புரிந்திருக்காது.  சரி போகட்டும் இவர் பேச்சே இப்படித்தான் என்று  அப்படியே கடந்து  வைத்திருப்போம்.   திரும்பத்திரும்ப சொல்லித்தரும்போதுதான் புரிந்து கொள்வோம். அல்லது  கேட்ட மறுநிமிடமே மறந்துவிட்டு கண்டும் காணாமல் போய்விடுவோம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக...