வேலொடு நின்றான்....
வேலொடு நின்றான்..... "வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு " குறள். : 552 வேலொடு _ (கையில்)ஆயுதத்தோடு நின்றான் _ நின்றவன் இடு_ தா , கொடு என்றது _ கேட்டல் ,வேண்டுதல் போலும் _ போன்றது கோலொடு _ ஆட்சி அதிகாரத்தோடு நின்றான் _ நிற்பவன் ,இருப்பவன் இரவு _ வேண்டுதல் ஆட்சிக்குரிய கோலை ஏந்தி அரசாளும் மன்னன் குடிமக்களிடம் பொருள் கேட்பது என்பது கையில் வேல் ஏந்தி வரும் கள்வன் தா என்று பொருளைப் பிடுங்கிச் செல்வதற்கு ஒப்பானதாகும். விளக்கம் : ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மன்னன் குடிமக்களைக் கட்டாயப்படுத்தி வரி வசூல் செய்தல் கூடாது. இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துதல் வழிப்பறி கொள்ளைக்குச் சமமாகும். கொள்ளையன்தான் கையில் இருப்பதை எல்லாம் கொடு என்று கத்தியையோ இல்லை பிற ஆயதங்களையோ காட்டி மிரட்டுவான். அப்படி ஒரு நிர்ப்பந்தத்தை ஒருபோதும் ஆட்சியாளர்கள் குடிமக்களுக்குக் கொடுத்தல் கூடாது. ஆட்சியாளர்கள் கொள்ளையர்களாக மாறிவிடக் கூடாத...