Posts

Showing posts with the label ஔவை பாடல்

தாயோடு அறுசுவை போம்

Image
                தாயோடு அறுசுவை போம் "தாயில் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ஆயிரம் உறவில் பெருமைகளில்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை" பாடலில் மனதைப் பறி கொடுக்காதோர் எவரும் இருக்க முடியாது. பாடியவர் குரலும் பாடலின் கருத்தும் திரும்பத் திரும்ப வந்து நம்மைத் தட்டி எழுப்பும்.  கணக்குப் போடாமல் தருபவள் தாய். பெற்றோருக்கு   கணக்குப் போட்டு மாதம்  ஒரு மகன் என்று கஞ்சி ஊற்றும்  பிள்ளைகள் உள்ள காலம் இது. பங்குபோட்டுக் கொடுத்தாலும் தன் பங்கையும்  பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டு  மிச்சம் இருப்பதை உண்பவள் தாய்.  தான் உண்ணும் உணவு கஞ்சியாக இருந்தாலும் ... பிள்ளைகளுக்கு சுவையாக சமைத்துக்  கொடுத்து பிள்ளைகள் உண்பதைக்  கண்டு  இன்பம் காண்பவள் தாய். அம்மாவின் சாப்பாட்டுக்கு அடிமை ஆகாதவர் எவரும் இலர். சிறு பிள்ளையில் இருந்தே அம்மா தயாரித்துத் தந்த உணவுக்கு நம் நாக்கு அடிமைபட்டுப் போனது.  சுவையான உணவு சாப்பிட வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசை.  சுவை இல்லாமல் சப்பென்று இருக்கு...

கற்றது கைம்மண்ணளவு

Image
                            கற்றது கைம்மண்ணளவு எல்லோருக்கும் நன்றாக படித்துப் பட்டம்  வாங்க வேண்டும் என்று ஆசை.  அதற்காகத்தான் ஓடி ஓடி படிக்கிறோம். ஒரு எப்படியாவது ஒரு பட்டப்படிப்பை படித்து முடிக்க வேண்டும் என்பது பலரது கனவாகவே இருக்கும்.  ஆறேழு பட்டங்களை  வாங்கி வைத்து அழகு பார்க்க நினைப்பவர்களும் உண்டு.  இப்படி எத்தனைப் பட்டங்களை வாங்கியவர்களாக  இருந்தாலும் அப்பாடா....நான் எல்லாம் படித்து  முடித்துவிட்டேன். இனி படிப்பதற்கு  எதுவும் இல்லை என்று  எவராலும் கூற முடியுமா? ஒருவராலும்  அப்படி கூற முடியாது இல்லையா?  ஒரு துறையில் புலமை வாய்ந்தவருக்கு  இன்னொரு துறையில் புலமை இருக்க வாய்ப்பு குறைவு.  பெற்றோருக்கு தம் பிள்ளைகளை நன்றாக  படிக்க வைக்க வைண்டும் என்று ஆசை.  அப்பா அடிக்கடி சொல்லும் ஒரு வார்த்தை  என்னைப்போல் நீயும் படிக்காமல்  கஷ்டப்படக்கூடாது என்பதுதான். நீ படித்தால்தான் நாளொரு சேலை கட்டலாம் இது என் அம்மாவின் ஆசை. இப்படி ...