Posts

Showing posts with the label அன்னமிட்டகை

அன்னமிட்டகை

  அன்னமிட்டகை பெற்றோர் பெயர் சொல்ல  கற்ற கல்வி உற்ற துணையிருக்க  பெற்ற பதவி பேரருளால் வந்திருக்க  நித்தம் பசியென வாடுவோர்   கண்முன் வந்து நிற்க  பசிப்பிணி போக்கிடும்   வைத்தியன் யானிருக்க  புசிப்பதற்கு இல்லை  என்ற நிலை இல்லையாகுகவென  யாசிப்பதற்கு முன்பே யோசிக்காது   மும்பைவாசிகளுக்கு உதவிக்கரம் நீட்டிய  அன்பு உள்ளங்கள் நினைவு  ஞாலம் உள்ளவரை   எம் நெஞ்சில் நிறைந்திருக்கும்  அய்யா அன்பழகன் அன்னமிட்டகை தொட்டு    எம்கரம்  என்றும் வணங்கி நிற்கும்  யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும்  கணியன் பூங்குன்றன் வாக்கை  நெஞ்சில் நிறுத்தி உதவிடும் பாங்கை   நாளைய வரலாறு பேசும்   வயிற்றுக்குச் சோறிட வேண்டும்   வாழும் மனிதருக்கெல்லாம்    எனும் மந்திரத்தைக் கையிலெடுத்து   நற்சோறு உண்டிட வழி செய்தீர்   காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்   ஞாலத்தின் மாணப் பெரிது எனும்   குறள் உமக்கு மகுடம் சூட்டி   காலமெல்லாம்  வாழ்த்தி நிற்கும். ...