Posts
Showing posts from June, 2026
குறமகள் இளவெயினி
- Get link
- X
- Other Apps
குறமகள் இளவெயினி தமக்கு வேண்டியவர் தவறு செய்தால் அதனைப் பொறுத்துக்கொள்ளும் பண்பு எத்தனை பேரிடம் இருக்கும்? வேண்டியவராகவே இருந்தாலும் தவறு செய்தால் வெட்டிவிட்டு ஓட நினைப்போம். பிறர் தவறு செய்தால் அதற்காக நாம் வருந்துவோமா? இப்படி ஒரு தவறு நடந்து விட்டதே என்று வெட்கப் படுவோமா? எல்லா இடத்திலும் வீரத்தை வெளிக்காட்ட நம்மால் கூடுமோ? பிறர் செய்யும் தவறுக்காக தான் நாணும் பண்பு எத்தனை பேரிடம் இருக்கும்? படைக்கலப் பணியில் வீரர்கள் இருந்தால் போதும் என்று நினைக்காது தானும் அவர்களுக்கு இணையாக தன் திறமையைக் காட்டும் பண்பு எத்தனை வேந்தரிடம் இருக்கும்? அவையில் பெருமிதத்துடன் நடந்து கொள்ளுதல் எல்லா மன்னர்களிடமும் இருக்குமா? இவை எல்லாம் சாதாரணமாக யாரிடமும் இல்லாத இயலாத பண்புகள். ஆனால் பெருமக்களே! எம் அரசன் ஏறைக்கோன் இவை எல்லா பண்பும் ஒருங்கே பெற்றவன். ஏறைக்கோன் என்னும் மன்னனின் பெருமையை மற்றொரு மன்னனிடம் கூறுவதாக ஒரு பெண்பாற் புலவர் பாடலொன்று பாடியுள்ளார். யாரந்த புலவர் என்று கேட்கிறீர்களா? குறமகள் இளவெயினி தான் இந்த ஏறைக்கோன் பெருமைகளைப் பற்றிப்...
தண்ணீர் நிலநலத்தால்
- Get link
- X
- Other Apps
தண்ணீர் நிலநலத்தால்.... ஒருவருடைய குணத்தை எப்படி அறிந்துகொள்வது? பழகிப் பார்த்தால் தெரிந்துவிடும். ஆனால் அனைவரிடமும் பழகிப் பார்க்க முடியுமா? முடியாதல்லவா? ஒருவர் சார்ந்திருக்கும் இடத்தைப் பொருத்து அவர் குணநலன் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். சிலருடைய செய்கைகள் அவருடைய குணத்தைக் காட்டிக் கொடுத்துவிடும். அதுதான் அவருக்குப் பெருமையாகவும் அமையும். யார் யாருக்கு எது எது பெருமையாக அமையும் என்பதைக் கூறுகிறது ஒரு நல்வழிப் பாடல். பாடல் உங்களுக்காக தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால் கண்ணீர்மை மாறாக் கருணையால் – பெண்ணீர்மை கற்பழியா ஆற்றல் கடல்சூழ்ந்த வையகத்துள் அற்புதமாம் என்றே அறி" நன்னெறி பாடல் 16 கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் தண்ணீரின் குணம் அது இருக்கும் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப அறியப்படும். நல்ல மனிதர்களின் குணம் அவர்கள் செய்யும் தர்ம காரியங்களால் அறியப்படும். கண்ணின் பெருமை கருணை பொங்கும் விழிகள் மூலம் அறியப்படும் .ஒரு பெண்ணின் சிறந்த குணம் அவளின் கற்பு நெறி மாறாப் பண்பினால் அறியப்படும். நீருக்குப் பெருமை நிலத்தால் மனிதர்களுக்குப் ப...
காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே
- Get link
- X
- Other Apps
காதற்ற ஊசியும் வாராது காண் தமிழகத்தில் வாழ்ந்த எத்தனையோ சித்தர்களுள் பட்டினத்தார்க்கு என்று தனிச்சிறப்பு உண்டு. பட்டினத்தார் என்றதும் வாழ்வின் நிலையாமை பற்றி நிறையப் பேசியவர். ஆசைகளை அறுக்கச் சொன்னவர். அதிலும் பெண்ணாசை பெருந்தீங்கென்றவர் என்பதுதான் நினைவுக்கு வரும். கூடவே அவர் துறவியாகவே வாழ்ந்தவர். எளியவர் என்ற நினைப்பு நமக்குள் வந்துவிடும். ஆனால் அவருடைய வாழ்க்கை வரலாறு சுவாரசியமானது யாரும் எதிர்பாராத பல திருப்பங்களைக் கொண்டது. பட்டினத்தார் வசதி மிக்க வணிகர் குடும்பத்தில் பிறந்தவர். தந்தையோடு சேர்ந்து வணிகத்தில் ஈடுபட்டு ஓடியாடிப் பெரும் பொருள் சேர்த்தவர். திருமணம் செய்து மகிழ்ச்சியாக இல்லறம் நடத்தியவர். செல்வமும் மகிழ்ச்சியும் ஒருபோதும் அவர் இல்லத்தில் குறைந்திருக்கவில்லை. ஆனால் இந்தத் தம்பதியருக்குக் குழந்தைச் செல்வம் இல்லாதது பெருங்குறையாக இருந்தது. ஆண்டுகள் கடந்தன. ஒரு குழந்தையைத் தத்து எடுத்து வளர்க்க நினைத்தார். அவர் நினைத்தது போலவே இறைவன் திருவருளால் ஒரு பிராமணர் மூலம் ஓர் ஆண்குழந்தை கிடைத்தது. அக்குழந்தைக்கு மருதவாணன் என்று பெயர்...
பொய் சொன்னால் என்ன நடக்கும்
- Get link
- X
- Other Apps
பொய் சொன்னால் என்ன நடக்கும் பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது என்பார்கள். பொய் சொன்னால் சாப்பாடு கிடைக்காது. பொய் சொன்னால் பட்டினி கிடக்க வேண்டியதுதான். ஆதலால் உண்மை பேசுக என்று பெரியோர் சொல்லித் தந்திருக்கிறார்கள். ஏன் உண்மை பேச வேண்டும்? அதற்குப் பதிலாக வள்ளுவர், "யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற" வாய்மையைத் தவிர வேறெதுவும் நன்மை பயக்கக் கூடியது அல்ல என்று வள்ளுவர் ஆணித்தரமாகச் சொல்லி விட்டார். இப்படியொரு பெருமையோடு நிமிர்ந்து பார்க்க, "பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனில் " என்ற குறள் கண் முன்னர் வந்து நின்று பொய்க்கு பரிந்துரை வழங்கி சிரித்துக்கொண்டு நின்றது. "என்ன பொய் சொல்லலாமா?" என்று நாமும் திருப்பி கேட்க "ஆமாம் ...பொய் சொல்லலாம். நாம் சொல்லும் பொய்யால் ஒருவர்க்கு நன்மை பயக்குமானால் மட்டும் பொய் சொல்லலாம்" என்று ஒரு நிபந்தனையோடு பொய் சொல்ல ஒப்புதல் அளித்து விட்டார் வள்ளுவர். அதனால் வள்ளுவரே அனுமதி அளித்து விட்டார் என்று பொய் சொன்னவர்கள் நல்லதுக்குத்தானே பொய் சொன்னேன் என்று சமாத...
ஆவாரை யாரே அழிப்பார்
- Get link
- X
- Other Apps
ஆவாரை யாரே அழிப்பார் நாம் நினைத்தபடி வாழ்க்கையில் எல்லாம் அமைந்துவிடுகிறதா? ஒருவருடைய வாழ்க்கை வசதி வாய்ப்போடு நன்றாக இருக்கிறது. அதற்குக் காரணம் முன்னோர் சேர்த்து வைத்த பொருளாக இருக்கலாம். புண்ணியமாக இருக்கலாம். உழைப்பாக இருக்கலாம். ஏதோ ஒரு காரணம் ஒருவரின் வளர்ச்சிக்குத் துணையாக இருந்திருக்கிறது. மாறாக இன்னும் ஒரு சாரார் வாழ்க்கை வயிற்றுக்கான போராட்டமாகவே கடந்து போகிறது. அவர்கள் உழைக்கவில்லையா? அவர்கள் பெற்றோர் புண்ணியம் செய்யவில்லையா? ஆனால் அவர்கள் எது செய்தாலும் தடை. முன்னேற முடிவதில்லை. இதற்கான காரணம் என்ன? சிலர் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது கடவுளைப் பார்த்தால் நிற்க வைத்துக் கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றும். மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ள வாழ்க்கை நிகழ்வுகள் கண் முன் வந்து நின்று ஏதேதோ எண்ண வைக்கின்றன. யாரையெல்லாமோ கேள்வி கேட்க வைக்கின்றன. யாரை கேள்வி கேட்டு என்ன பயன்? இந்த நிகழ்வுகள் எல்லாம் அவரவர் வாங்கி வந்த வரம் என்று சொல்லி சிலநேரங்களில் ஒதுங்கிக் கொள்ள வேண்டியதாகத்தான் இருக்கிறது. எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டுதான் ஆ...
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- Get link
- X
- Other Apps
தீதும் நன்றும் பிறர் தர வாரா "தீதும் நன்றும் பிறர் தர வாரா"என்று எங்கேயோ கேட்டக் குரல். எப்போதோ படித்த வரி. பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என விட்ட வரி. ஆனால் முதல் வரியான "யாதும் ஊரே யாவரும் கேளிர் "மட்டும் உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஐநா சபை வாயிலில் நின்று அனைவரையும் வரவேற்கிறது. தமிழின் பெருமையே அந்த ஒற்றை வரியில்தான் அடங்கி இருக்கிறது என்று உரத்தக் குரலில் கூறிக் கொண்டிருக்கிறோம். முதல் வரி என்பதால் அதை உறுதியாகப் பற்றிக் கொண்டோமா? அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் எவ்வளவு கனமான மதிப்புமிக்க கருத்தைச் சுமந்து நிற்கிறது என்பது அடுத்தடுத்த வரிகளை வாசிக்கும்போது புரியும். பாடலை முழுவதுமாக வாசித்துப் பாருங்கள். எவ்வளவு கருத்தாழமிக்கப் பாடல் இது. ஒவ்வொரு வரியும் உயிரோட்டம் மிக்க உலக உண்மைகளை உரக்கச் சொல்லி வருவது. காலத்தால் அழியாத கருத்தோவியங்களைச் சுமந்து நிற்பது. பாடல் இதோ உங்களுக்காக.. யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா ; நோதலும் தணிதலும் அவற்றோரன்ன ; சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதெனின மகிழ்ந்தன்றும் இலமே ;முனிவின் இன்...
ஈக்கு விடம் தலையில்
- Get link
- X
- Other Apps
ஈக்கு விடம் தலையில் ஒரு சிலருக்கு உடம்பெல்லாம் விஷம் என்று சொல்வார்கள். அவர்கள் நாடி நரம்பு எல்லாம் கெட்ட சிந்தனை ஊறிக் கிடக்கும். யாருக்கு உலை வைக்கலாம் யாருக்கு எதிராகப் பேசலாம் யார் வீட்டைக் கெடுக்கலாம் என்று கங்கணம் கட்டித் திரிவர். பொய் புரட்டு பொறாமை வஞ்சகம் என்று அத்தனை கெட்ட குணத்தையும் மொத்தமாக குத்தகைக்கு வாங்கி வைத்துக் கொண்டு திரிவர். இவர்களைத்தான் துஷ்டர்கள் என்று சொல்வார்கள். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்று சொல்லித் தந்திருக்கிறார்கள். அப்படி ஒட்டும் இல்லாமல் உறவும் இல்லாமல் ஒதுங்கிச் செல்லச் சொல்வதற்கான காரணம் என்ன? நல்லோர் நிறை உலகில் ஒரு சிலர் மட்டும் இப்படி மாறுபட்ட வேறுபட்ட சிந்தனையோடு இருப்பர். சுயநலம் தான் எல்லாவற்றிற்கும் மூலகாரணமாக இருக்கும். இப்படி ஒரு நினைப்போடு கடந்து செல்ல நினைத்தபோது மெதுவாக ஒரு ஈ வந்து கையில் உட்கார்ந்தது. பட்டென்று அடித்து விட்டேன். உடனே படித்த ஒரு பாடல் நினைவுக்கு வர சற்று நேரம் அந்தப் பரிதாபத்திற்குரிய ஈயைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். இப்போது பாடல் இதோ உங்களுக்காக... " ஈக்கு விடம் தலையில் எய்தும் இரும் தேளுக்கு ...
கொம்புளதிற்கு ஐந்து முழம்
- Get link
- X
- Other Apps
தள்ளு.. தள்ளு ....தள்ளு குரல் எழுப்பியபடி குறும்புக்கார சிறுவன் ஒருவன் ஓடி வந்தான். எந்தப் பக்கம் தள்ளுவது ? எதற்காகத் தள்ள வேண்டும்? இப்படிக் கேள்விகளோடு அந்தச் சிறுவனை நிமிர்ந்து பார்ப்பதற்கு முன்னர் அவன் என்னைக் குப்புறப் தள்ளிவிட்டு ஓடிவிட்டான். எழுந்து முழங்கையைத் தடவியபடி அந்தச் சிறுவனை முறைத்துப் பார்த்தபடி நின்றிருந்தேன். தள்ளி நில்லு ....தள்ளி நில்லு தெருவில் நின்றபடி வாய்ப்பார்த்துக் கொண்டிருந்தால் வருவோர் போவோர் எல்லாம் குப்புற தள்ளிவிட்டுத்தான் போவார்கள் என்று சொல்லி வாயைப் பொத்திபடி சிரித்தாள் தங்கை. அப்படியே அடித்தேன் என்றால்....கையை ஓங்கினேன். கையை மடக்கிப் பிடித்த அண்ணன், " கொம்புள திற்கைந்து குதிரைக்குப் பத்துமுழம் வெம்புகரிக் காயிரந் தான் வேண்டுமே வம்புசெரி துர்ச்சனர் கண்ணிற் படாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி." -நீதிவெண்பா என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள் என்றான். ஆமாம்.... ஆமாம் தாங்கள் அறிந்ததை உணர்ந்ததை முன்னோர்கள் நறுக்குத் தெறித்தாற்போல நான்கு வரிப் பாடல்களாகத் தந்து விட்டுப்போய் இருக்கிறார்கள். அனுப...
எள்ளற்க யாரும் எளியரென்று
- Get link
- X
- Other Apps
எள்ளற்க என்றும் எளியரென்று பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று நான்மணிக்கடிகை. இந்நூலை இயற்றியவர் விளம்பி நாகனார். இந்நூலிலுள்ள பாடல்களின் மொத்த எண்ணிக்கை 106 ஆகும். ஒவ்வொரு பாடலிலும் 4 மணி மணியான கருத்துகள் இடம்பெற்றிருக்கும். அறிவுரைகள் ,அறவுரைகள் என்று மொத்தப் பாடல்களும் படிக்கப் படிக்கத் திகட்டாத தெள்ளமுதாக இனிக்கும். நான்கு வகை மணியான கருத்துகளைச் சொல்லும் நூல் என்பதால் ‘நான்மணிக்கடிகை’ என்று அழைக்கப்படுகிறது. ‘கடிகை’ என்றால் துண்டம் என்று பொருள்படும். எனவே, நான்மணிக்கடிகை என்னும் சொல் நான்கு ரத்தினத் துண்டங்கள் கொண்டது என்று பொருள்படும். நான்மணிக்கடிகையின் முதல் பாடல் உங்களுக்காக.. " எள்ளற்க என்றும் எளியரென்று; என்பெறினும் கொள்ளற்க கொள்ளார்கை மேற்பட; உள்சுடினும் சீறற்க சிற்றில் பிறந்தாரை; கூறற்க கூறு அல்லவற்றை விரைந்து. " "செல்வச் செழிப்பில்லாத ஏழை வறியவர் என்பதற்காக ஒருபோதும் ஒருவரை இகழ்ந்து பேசக்கூடாது. எதன் பொருட்டும் எதைப் பெறுவதற்காகவும் தகாதவர்கள் கை மேலாகவும் தம் கை கீழாகவும் இருக்கும்படி எதையும் பெற்றுக் கொள்ளக்கூடாது. வறுமையில் வாடும்...
கண்ணதாசன் கவிதைகளில் இலக்கியம்
- Get link
- X
- Other Apps
கண்ணதாசன் கவிதைகளில் இலக்கியம் "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல " அதற்காக முற்றிலுமாக பழைமையைப் புறந்தள்ளிவிட்டுச் சென்றுவிட முடியாது. பழைமையை புதிய கண்ணோட்டததில் எடுத்துச் செல்வது புத்திசாலித்தனம். அந்தவகையில் பழைய இலக்கியப் பாடல்களின் கருத்தாளுமையைத் தங்களது திரையிசைப் பாடல்களில் புகுத்திய பெருமை திரைப்பட பாடலாசிரியர்களுக்கு உண்டு. முன்னைப் பழைமைக்கும் இன்றைய புதுமைக்கும் பாலமாக இருந்து எழுதியப் பாடல்கள் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. சொல்லப் போனால் பழைய இலங்கியங்களில் உள்ள கருத்துக்களை மக்களிடையே கொண்டு சேர்த்த பெருமை திரைப்படப் பாடலாசிரியர்களுக்கு உண்டு. அவர்களில் முக்கியமானவர்கள் என்று கவியரசு கண்ணதாசன் , கவிப் பேரரசு வைரமுத்து, வாலி என்று ஒரு சிலரை மட்டும் குறிப்பிட்டுவிட்டு கடந்து போக முடியாது. நிறைய பாடல்கள் எழுதிய கவிஞர்களின் பாடல்களில் மட்டுமல்ல. ஒரு சில பாடல்கள் எழுதிய கவிஞர்களின் பாடல்களிலும் கண்டிப்பாக இலக்கிய தாக்கம் இ...
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல
- Get link
- X
- Other Apps
அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல "கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும் " என்று கோடியை அள்ளி விட்டு அவர் பாட்டுக்குப் போய்விட்டார் ஔவை. ஔவை இப்படிச் சொல்லி விட்டாரே என்று நமக்கும் உறவுகளோடு ஒட்டி வாழ ஆசைதான். ஆனால் எப்படித்தான் ஒட்டநினைத்தாலும் தாமரை இலை மேல் நீர் போல ஒட்ட மறுப்பவர்களை என்ன செய்வது? அப்படி ஒட்ட மறுப்பதற்குக் காரணம்? உங்கள் குணமா? அல்லது உங்களிடம் இல்லாத பணமா? என்று சிந்தித்துப் பார்த்தால் இந்த விலகலுக்குக் காரணம் பணமாகத்தான் இருக்கும். "பணம் இருப்பவன் பின்னால் பத்துப்பேர் பதவி இருப்பவன் பின்னாலும் பத்துப்பேர் "என்ற பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த பத்துப்பேர் யார் யார்? என்று பட்டியலிட்டுப் பாருங்கள். அதில் உறவுகளும் இருக்கும். உங்களிடம் பொருள் இல்லாதபோது உறவுகள் உறவினர் என்று சொல்லிக்கொள்ள விருப்பப்பட மாட்டார்கள். இதுதான் எதார்த்தம். ஒன்றிரண்டு உறவுகளுக்கு மட்டும் விதிவிலக்கு இருக்கலாம் . மற்றபடி பெரும்பான்மை பணத்தின் பக்கம்தான் நிற்கும். ஒட்டி நின்று நலம் விசாரிப்பதோடு நிறுத்திக் கொள்வர். அதனால்...
சென்ற இடமெல்லாம் சிறப்பு
- Get link
- X
- Other Apps
சென்ற இடமெல்லாம் சிறப்பு பேரும் புகழுமாய் வாழ வேண்டும். சீரும் சிறப்பும் பெற வேண்டும். பணம் மிகுதியாய்க் குவிய வேண்டும். பதவி வந்து அணி செய்ய வேண்டும். இவைதான் அனைவரின் ஆசையாக இருக்கும். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? "ஏழையையும் நல்ல பணக்காரன் ஆக்கும் படிப்பு" என்றார் பாரதி தாசன். பணக்காரன் ஆக வேண்டுமா? படியுங்கள் என்று சொல்லித் தந்துவிட்டார் . பணக்காரன் என்ற ஒன்றை மட்டுமா தரும் கல்வி? சீரும் சிறப்பும் தருவதும் கல்வி இல்லையா? பணக்காரன் உள்ளூர்விட்டு வெளியில் சென்றுவிட்டால்... யாருக்குத் தெரியும்? நாலுபேருக்குத் தெரிய வேண்டும். நல்லவர் மதிக்க வேண்டும். என்று சொன்னால் கல்வி வேண்டும். கல்வி இருந்தால் ... எங்கே சென்றாலும் மதிப்பு கிடைக்கும். பணம் இருந்தால் மதிப்பு இல்லையா? இல்லை. நிலபுலன் ஏராளம் இருந்தாலும்? ஆமாம்...அப்படியானால் மன்னனுக்குமா? ஆமாம்...மன்னனாக இருந்தாலும் இதேநிலைதான். உள்ளூரில் மன்னனை மதிக்கலாம். ஆனால் அவன் நாட்டைவிட்டு வெளியேற சென்றுவிட்டால்.... அவன் மன்னனுக்கு இருந்தாலும் மதிப்பு இல்லை. மன்னனுக்கே மதிப்பு இல்லை என்றால்... வேறு யாருக்குத்தான் ...
முறைமைக்கு மூப்பு இளமை இல்
- Get link
- X
- Other Apps
முறைமைக்கு மூப்பு இளமை இல் குற்றத்திற்கான தண்டனை எப்படி வழங்கப்படுகிறது? நீதி முறையாக சட்டத்திற்கு உட்பட்டு வழங்கப்படுகிறதா இல்லை ஒருவர் சமூகத்தில் எந்த நிலையில் இருக்கிறார் என்ற பின்புலம் ஆராயப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறதா? சில நேரங்களில் இப்படிப்பட்ட கேள்விகள் எழாமலில்லை. ஒரே குற்றத்திற்கு வெவ்வேறு மாதிரியான தண்டனை வழங்கப்படுகிறது. சட்டம் அனைவருக்கும் சமம் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் கொடுக்கப்படும் நீதிதான் வேறுபடுகிறது. ஏன் இத்தனை முரண்பாடுகளும் வேறுபாடுகளும்.? " ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. (குறள்: 541) என்கிறார் வள்ளுவர். "நிகழ்ந்த குற்றத்தினை ஆராய்ந்து, விருப்பு வெறுப்பின்றி, சார்புநிலையைத் தவிர்த்து, நீதி வழங்கப்பட வேண்டியதுதானே நியாயம் "என்கிறார் வள்ளுவர். ஒருவர் ஒரு குற்றம் செய்துவிட்டால் முதியவர் அல்லது இளைஞர் எனக் குற்றவாளியின் வயதினைக் கருத்தில் கொண்டு, சார்பு நிலையுடன் நீதி வழங்கப்படுவது சரியல்ல என்கிறார் இன்னொருவர். யாரிவர்? எதற்காக இப்...
போம்போது அவளோடு போம்
- Get link
- X
- Other Apps
போம் போது அவளோடு போம் "வா என்றால் வராது போ என்றால் போகாது" இது போலவே ஒரு பாடல் வரி. கண்ணில் பட்டது. "போம்போது அவளோடு போம்" போகும் அவளை என்ன செய்வது? எப்படி அழைத்து வருவது? யாரைத் தூது அனுப்பலாம்? கையேந்தி நிற்கிறேன் கையோடு அழைத்து வா என்று கேட்டுத்தான் பார்க்கிறேன். கேட்பாரில்லை..... தூதுபோக துணையாக வர எவருமில்லை. வேறு வழியின்றி விலகி நிற்கிறேன். வழியெல்லாம் விழியாய் மணித்துளிகளை விரயமாக்கி காத்துக் கிடக்கிறேன் விழி பூத்துப் போனது விண்மீனும் கண் சிமிட்டி வீண் கதைப்பேசி கடந்து போனது. காது கொடுத்துக் கேட்க ஆளில்லை கருணை மனு கையிலேந்தி நிற்கிறேன். சட்டென்று ஒரு சலசலப்பு சட்டென்று என் கையிலிருந்த மனு விருட்டென்று பறந்து போனது எட்டும் தூரத்தில் உள்ள ஒரு தடுப்பில் தட்டி படத்துக் கிடந்தது தொட்டுவிட எண்ணி எட்டிக் கை வைத்தேன் கட்டிப்பிடித்தது ஒரு கை தட்டிப் பறிக்க வந்தவர் எவரோ? தடுமாறும் வேளையில் தடையிட முட்டுக்கட்டையிட முந்தி வந்து நிற்பவர் எவரோ ? ஓரக்கண்ணால் பார்த்தேன் நாவல் மரத்தின்கீழ் நின்று சுட்டகனி கேட்ட சுடரொளியாள் மெல்லச் சிரித்தாள். தக்க ...
தந்தையர் தினம்
- Get link
- X
- Other Apps
தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வழக்கம் எப்படிப் பழக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டது என்பதில் ஒரு சுவாரசியமான கதை உண்டு. அம்மாவின் முதல் அறிமுகம் அப்பா. தோளைக் குறுக்கி தோள்மீது சுமந்து தோழனாய் உடன் நடந்து தொடர் பயிற்சி தந்து நன்மை தீமை அறிய வைத்து காலமெல்லாம் கை கோத்துக் தலையெழுத்தைக் கொடுத்து தலைநிமிர வைக்க தன்னால் இயன்றவரை உழைப்பவர் அப்பா. அப்பாவின் உயிர்துடிப்பில் இயங்குவது குடும்பம் அப்பாவின் சமபாதி அம்மா அன்பில் சமபாதி கிடைக்காத ஆதரவற்ற குழந்தை அப்பா அம்மாவிற்கு கிடைக்கும் அன்பு அதற்கு அப்பாவுக்கு மறுப்பு அப்பா என்பவர் கண்டிப்பு. அதனால் அப்பாவுக்கு எப்போதும் எதிர்ப்பு அப்பா ஓர் அபூர்வ ராகம் விலகியே நிற்பார். விழிகளால் பேசுவார். தொடர்பு எல்லைக்கு அப்பால் தொலைவில் இருக்கும் தொலைத்தொடர்பு சாதனம் அப்பா. கையில் கிடைத்ததைக் கை நனைக்க விரும்பாமல் கையோடு கொண்டு வந்து தந்து கடைசிவரை உண்பதைக் கண்குளிர பார்த்திருப்பார். விரல்கள் காய்த்...
சொர்க்கத்துக்குச் செல்லும் வழி
- Get link
- X
- Other Apps
சொர்க்கத்துக்குச் செல்லும் வழி சொர்க்கத்திற்குப் போக யாருக்குத்தான் ஆசை இல்லை. அனைவர்க்கும் ஆசை இருக்கிறது. அதற்கான வழியைத்தான் சொல்லித் தருவார் இல்லை. என்னவெல்லாமோ செய்து பார்க்கிறேன் . தான தர்மம் செய்கிறேன். ஏழை எளியோருக்கு அன்னதானம் செய்கிறேன்.ஆனாலும் சொர்க்கத்துக்குப் போவேனா மாட்டேனா என்று ஒரு குழப்பமாக இருக்கிறது. இப்படி குழம்பிய மனநிலையில் இருக்கிறீர்களா? ஒன்றுக்கும் கவலை வேண்டாம். சொர்க்கத்துக்குத் தானே போக வேண்டும். சரியான வழி இது என்று காட்டுகிறார் ஒரு புலவர். வாருங்கள் அந்த வழிதான் என்ன என்று பார்த்துவிடுவோம். குளந் தொட்டுக் கோடுபதித்து வழிசீத்து உளந்தொட்டு உழுவயலாக்கி வளந் தொட்டுப் பாடுபடும் கிணற் றோடென்றிவ்வைம் பாற்படுத்தான் ஏகுஞ் சுவர்க்கத் தினிது - சிறுபஞ்ச மூலம் பொருள் புரிகிறதா? இல்லையா? சொர்க்கத்திற்குப் போக வேண்டுமா? இதைச் செய்யுங்கள் என்கிறார் காரியாசான். என்ன செய்ய வேண்டும்? நீர்நிலைகளை உருவாக்குங்கள். சொர்க்கம் கிட்டும் என்கிறார் . குடிநீர் தேங்கும் குள...
எத்தனுக்கு எத்தன்
- Get link
- X
- Other Apps
எத்தனுக்கு எத்தன் எதிர்பார்ப்பு இருந்தால் ஏமாற்றம் நிச்சயம் இருக்கும். ஒருவர்மீது அதிதீவிர நம்பிக்கை வைத்து விட்டோம். அதனால் அவர்மீது எதிர்பார்ப்பும் அதிகமாக வைத்து விடுவோம். அந்த எதிர்பார்ப்பு நடைபெறாதபோது விரக்தி ஏற்படுகிறது. ஏமாற்றமடைந்து புலம்ப ஆரம்பித்துவிடுவோம். அதிக நம்பிக்கை வைப்பதுகூட பல நேரங்களில் ஆபத்தாக முடிவதுண்டு. குடும்பத்தில் சண்டை வருவதற்கான முதற்காரணமே இந்த எதிர்பார்ப்புதான். நீ இன்னது தந்தால் நானும் உனக்குப் பதிலுக்கு ஏதாவது செய்வேன். செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகுந்து விடுகிறது. அது பல இடங்களில் பொய்த்துப் போய்விடுகிறது. அதனால் எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது என்பதல்ல. எதிர்பார்ப்பு இல்லாமல் எந்தச் செயலும் நிகழாது.ஊதியம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான் வேலை நடைபெறுகிறது. ஊதியம் கிடைக்காது என்று தெரிந்தால் யாருமே எந்த வேலையும் செய்ய முன்வர மாட்டார்கள். அந்தக் காலத்தில் புலவர்கள் மன்னர்களைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்றுச் செல்வர். மன்னர் எதுவுமே கொடுக்கமாட்டார் என்றால் யார் பாடுவார்? இப்படித்தான் ஒரு மன்ன...
நீர்கிழிய எய்த வடுப் போல
- Get link
- X
- Other Apps
நீர் கிழிய எய்த வடுப்போல சினம் என்ன செய்யும் என்று சொல்லித் தந்த வள்ளுவர், "தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம் " என்றார். ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள விரும்பினால் கோபம் வராமல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அப்படிக் காத்துக்கொள்ளாவிட்டால் அந்தக் கோபமே அவனை அழித்துவிடும். அப்படியானால் கோபப்படக் கூடாதா? கோபம் இவ்வளவு பெரிய தீமையைச் செய்ய வல்லதா? கோபப்படாமல் ஒரு சாதாரண மனிதனால் இருக்க முடியாதா என்ற கேள்விகள் எழாமல் இல்லை. "ரௌத்திரம் பழகு "என்றார் பாரதி. அதுவும் ஒருவிதத்தில் கோபம் தானே. அதை மட்டும் பழகு என்று பாரதி சொல்லியிருக்கிறாரே இப்படிப்பட்ட கேள்விகள் எழாமலில்லை. சினம் சேர்ந்தாரைக் கொல்லி என்று படித்திருக்கிறோம். "தன்னை அடக்கி, கோபத்துக்கு ஆட்படுத்தாமல் இருப்பவனே மாவீரன்" என்பார் நபிகள் நாயகம். "கோபத்தோடு எழுபவன் நட்டத்தோடு அமருவான்" என்பது பழமொழி. இப்படி கோபத்தைப்பற்றி ஏராளமாகக் தெரிந்து வைத்திருந்தாலும் இன்னும் அறிய ஆசை. வேறு யாரிடம் கேட்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோது ஔவை மூதுரையில் சொன்ன பாட...