இறைவனை எப்போது தொழ வேண்டும்
இறைவனை தொழுவதற்கு உகந்த நேரம் எது? "என்று பாலன் தன் தன் நண்பன் மதிவண்ணனிடம் கேட்டான். "அதிகாலை நேரம் அதுதான் இறைவனைத் தொழுவதற்கு உகந்த நேரம் "என்று பதிலளித்தான் நண்பன். "அமைதியான அந்தக் காலைப் பொழுதுதான் மனதை ஒருமுகப்படுத்தி பிராத்தனையில் ஈடுபட முடியும் .வெளியுலக குறுக்கீடு எதுவும் இல்லாத அமைதியானச் சூழல் பிராத்தனைக்கு ஏற்ற நேரம்தான். ஆனால் என்னால் அது முடிவதில்லையே" என்றார் பாலன். "நீ சொல்லுவதும் சரிதான். வேலை வேலை என்று எப்போதும் கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடுவதால் கடவுளைத் தொழ நேரம் கிடைப்பதே அரிதாக இருக்கிறது" புலம்பினான் மதி வண்ணன். " இப்படி ஆளுக்கொரு சாக்கு போக்குச் சொல்லிக் கொண்டிருந்தால் இறைவனைத் தொழுவதற்கு கால நேரமே கிடையாதா ? ஒரு மனிதன் எப்போதுதான் இறைவனை வணங்குவது? " ஒரே குழப்பமாக இருக்கிறது. கையைப் பிசைந்தபடி ஏதோ சிந்தனையில் அமர்ந்தான் பாலன். "இன்று இதற்கு ஒரு தீர்வு கண்டே ஆக வேண்டும்." " யாரிடம் போனால் இதற்குத் தீர்வு கிடைக்கும் ?" இப்படி எனக்குள் கேள்விகள் எழ ஆரம்பித்தன. "வாருங்கள...