Posts

Showing posts with the label பழமொழி

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

                      ஆறிலும் சாவு நூறிலும் சாவு வாழ்க்கை நிலையற்றது. இன்று இருப்பது நிஜம்.   நாளை இருப்பது பொய்.   இன்று செத்தால் என்ன?   நாளை செத்தால் என்ன?  ஆறு வயதிலும் சாவு வரலாம்.   நூறு வயதிலும் சாவு வரலாம்.  இப்படி ஒரு கண்ணோட்டத்தில்தான் இந்தப்  பழமொழியைச் சொல்லியிருப்பார்கள்  என்றுதான் தோன்றும். மேலோட்டமாக பார்த்தால் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. அப்படித்தான் இருக்குமோ? இருக்காது....இதைச் சொல்வதற்குஒரு பழமொழியா? அப்புறம் வேறு என்னவாக  இருக்கும் என்று நினைக்கிறீர்கள்.? நாங்கள் நினைப்பது இருக்கட்டும. நீங்கள் நினைப்பதை எழுதுங்கள் என்பீர்கள். நான் நினைப்பதும் வேண்டாம். நீங்கள் நினைப்பதும் வேண்டாம். மகாபாரதத்தில் கர்ணன் என்ன சொல்கிறார் என்பதைக் கேளுங்கள். மகாபாரதத்தில் குருசேத்திர போர் நடைபெறப்  போகின்ற வேளை. அப்போதுதான் குந்திதேவிக்கு தனது  மூத்த மகன்தான் கர்ணன் என்ற உண்மை தெரிய வருகிறது. குந்திதேவி தன் மக்கள் ஐவரோடும் சேர்ந்து கௌரவர்களை எதிர்த்துப் போரிடும்படி கர்ணனி...

பணம் பத்தும் செய்யும்

Image
                          பணம் பத்தும் செய்யும்    " பணம் பந்தியிலே  குணம் குப்பையிலே" என்பார்கள். "  கல்லானே ஆயினும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்    எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் இல்லானை     இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாய் வேண்டாள்     செல்லாது அவன் வாயிற் சொல்" என்கிறார் ஔவை. பணம் இல்லாதவரை ஈன்றெடுத்த தாயே விரும்ப மாட்டாளாம். என்ன கொடுமை இது? பணம் இல்லை என்றால் கட்டிய மனைவி மதிக்க மாட்டாள். பெற்ற தாய் விரும்ப மாட்டாள். சமூகம் மதிக்காது. அவனுடைய பேச்சு சபையில் எடுபடாது.  இதுதான் உலக எதார்த்தநிலை. " பணமில்லாதவன் பிணம்" பணமில்லாதவன் செயலிழந்தவன் ஆகிவிடுவானாம். உண்மைதாங்க... பணம் இல்லாமல் என்ன நடந்துவிடப் போகிறது.? நீங்களே சொல்லுங்கள். " பணம் உள்ளவன் பின்னாலும் பத்து பேர் பதவி உள்ளவன் பின்னாலும் பத்து பேர்" பணம் இருந்தால்தான் பின்னால் நாலுபேர் வருவார்கள். பணம் இல்லையா? அப்படியானால் பதவியாவது இருக்க வேண்டும். அதுவும் இல்லையா? நம்மை யார் கண்டு கொள்வார்கள்...