Posts

Showing posts with the label கோபம் வேண்டாம்

கோபம் வேண்டாம்

                      கோபம் வேண்டாம் சாக்ரட்டீஷ் உலகின் தலை சிறந்த தத்தவ ஞானி.கோடிக்கண மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருந்தாலும் மனைவியிடம்  நல்ல பெயர் எடுக்க முடியவில்லை. அவர் தன் எழுத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை வீட்டிற்குக் கொடுப்பதில்லை என்பது மனைவியின் குற்றச்சாட்டு. வீட்டில் என்ன இல்லை ...என்ன இருக்கிறது.. எதையுமே அவர் கண்டு கொள்ளவே மாட்டார். ஒருமுறை இப்படித்தான் வெகுநேரமாக தன் நண்பரோடு பேசிக் கொண்டிருந்தார். பலமுறை மனைவி அழைத்துப் பார்த்தார். அவர் பேச்சை நிறுத்துவதாக தெரியவில்லை. வீட்டில் உள்ள பொருட்களை அங்கும் இங்கும் வீசி தன் கோபத்தை வெளிப்படுத்திப் பார்த்தார். அப்போதும் அவர் கண்டு கொள்ளவே இல்லை. மாடிக்குச் சென்றார். ஆத்திரத்தில் ஒரு வாளி தண்ணீரை மொண்டு வந்து அப்படியே சாக்ரட்டீஷ் தலை மீது ஊற்றினார். நண்பர் அப்படியே வாயடைத்துப் போனார். சாக்ரட்டீஷ் முகத்தைப் பார்த்தார். அவரோ ஒன்றுமே நடக்காதது போல இதுவரை இடி இடித்தது. இப்போது மழை கொட்டுகிறது "என்று தமாசாக பதிலளித்தார். இப்படித்தான் கோபம் வந்தால...