வினாவிடைப் பாடல்கள்
வினாவிடைப் பாடல்கள் "பாடல் இல்லாத விளையாட்டு பருப்பு இல்லாத கூட்டு போன்றது." என்பார்கள். சுவை இருக்காது. சிறுவர்கள் விளையாட்டில் கண்டிப்பாக பாடல் இருக்கும்.இருக்க வேண்டும். பாடல்கள் பாடிக்கொண்டே விளையாடுவதில் சிறுவர்களுக்கு ஓர் அலாதி இன்பம். பள்ளிப் பருவம் பாடி மகிழ்ந்த பருவம் .கூடி விளையாடிய பருவம். குதுகலமாய் இருந்த பருவம். பள்ளிப் பருவத்தில் படித்தவை தான் இன்றுவரை நம் கூடவே நடை பயிற்றுவித்துக்கொண்டிருக்கின்றன. நடத்திக் கொண்டிருக்கின்றன என்பதை யாரும் மறுக்கவும் முடியாது. மறக்கவும் முடியாது. விளையாட்டுப் பாடல்கள் உலக அறிவை ஊட்டுகின்றன. மொழித்திறனை வளர்க்கின்றன. சொல்லாட்சித் திறனைப் பெருகுகின்றன. அதிலும் வினா விடைப்பாடல்கள் மொழிப்பயிற்சி, நாப்பயிற்சி,அதிக சொற்கள் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு போன்றவற்றை வளர்ப்பதற்கு நல்வாய்ப்பாக இருக்கும். நண்பர்களோடு சேர்ந்து விளையாடும்போது சிறுவர்கள் தம்மையும் அறியாமலேயே அதிகமாக கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. புத்தகத்தையும் தாண்டி மேலும் அதிகமான சொற்களைக் கையாளும் திறனும் வளர்கிறது.சிந்திக்கும் ஆற்றல் ஏற்படுகிறது...