இன்னா செய்யாமை
இன்னா செய்யாமை முன்னுரை : " தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும் " என்பார் வள்ளுவர். தீயைவிட அச்சம் தருவது தீமை. அச்சம் தரும் ஒரு செயலை செய்வது நம்மையும் அச்சத்தோடு வாழும் நிலைமைக்குத் தள்ளிவிடும்.தீயவை தீமை தருவதால் தீயவற்றிலிருந்து விலகியிருப்போம்.அதுதான் அறம். அதனைப்பற்றி இக்கட்டுரையில் காண்போம். இன்னா என்றால் என்ன? "எவற்றையெல்லாம் பிறர் உனக்குச் செய்யக்கூடாது என்று நீ நினைக்கிறாயோ எவை எல்லாம் உன்னை துன்பப்படுத்தும் என்று எண்ணுகிறாயோ அவை எல்லாம் இன்னாததாகவே கருதப்படும். உன்னைத் துன்பப்படுத்தும் செயல் அடுத்தவரையும் துன்பப்படுத்தும். உன்னைக் காயப்படுத்தும் சொற்கள் பிறரையும் காயப்படுத்தும். அவைதான் இன்னாதவை. இன்னா செய்யாமை என்பது யாதொரு உயிர்க்கும் தீங்கு செய்யாதிருத்தல் என்பதாகும். பொறாமையின் வெளிப்பாடு: இன்னா என்பது எதனுடைய வெளிப்பாடாக இருக்கும் என்ற ஆய்வு மேற்கொண்டால் பெரும்பாலும் அது பொறாமையின் வெளிப்பாடு என்பதன்றி வேறொன்றுமில்லை. " கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாற்றார் கோள் " என்பது வள்ளுவர்...