முயற்சி திருவினையாக்கும்.....
முயற்சி திருவினையாக்கும்.... " முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் " குறள். : 616 முயற்சி _ முயலுதல் திருவினை _ செல்வம் ஆக்கும் _ உண்டாக்கும் இன்மை _ இல்லாதிருத்தல் புகுத்திவிடும் _ சேர்த்துவிடும் முயற்சி செய்து கொண்டிருப்பவனிடத்தில் செல்வம் பெருகிக்கொண்டே இருக்கும்.எந்தவித முயற்சியும் செய்யாமல் இருப்பவன் வீட்டில் வறுமை குடி கொண்டுவிடும். விளக்கம் : செயல்பட வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் போதும். தொடர்ந்து செயல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். அந்த உழைப்பானது செல்வத்தைப் பெருகச் செய்யும். வெற்றிகளைக் கொண்டு வந்து சேர்க்கும். பாடுபட்டு உழைப்பவனுக்கு அந்த உழைப்புக்கு ஏற...