ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே...
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே... கடமையில் தவறக்கூடாது. உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது. இரண்டும் சமமாகப் பேணப்பட வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் நமது கடமைகள் என்ன ? உரிமைகள் யாவை ?என்பதெல்லாம் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும். இந்தியா விடுதலை அடைந்த பின்னர்தான் கடமையைப் பற்றி பேசப்படுள்ளதா....இருக்காதே. நமது முன்னோர்கள் பேரறிவாளர்களாயிற்றே! அவர்கள் சொல்லாத கருத்துக்களா... அறியாத உண்மைகளா... அப்படியானால் அவர்களிடமும் கடமையைப் பற்றி சிறிது கேட்டு அறிந்து கொள்வதில் தப்பில்லையே.... வாருங்கள்.பொன்முடியார் என்ற புலவர் யார்யாருக்கு என்னென்ன கடமை உள்ளது என்று சொல்கிறார். அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்வோம். ஒரு மகன் பிறந்ததில் இருந்து அவனை ஒரு வெற்றிவீரனாக பார்ப்பதுவரை யார் யாருக்கு என்னென்ன கடமை இருக்கிறது என்பதை பொன்முடியார் என்ற இந்தப் பெண்பாற்புலவர் புறநானூற்றுப் பாடலில் அழகாகப் பாடியிருப்பார். ஒரு பெண்ணுக்கு என்ன கடமை தெரியுமா ? ஆண் மகவைப் பெற்றுத்தர வேண்டுமாம். ஆண் மகனைப் பெற்றுத் தந்துவிட்டேன் என்று பூரித்துப் போய் கணவனைப் பார்க்கிறாள் மனைவி. உன் கடமையை நீ சர...