அஞ்சறைப் பெட்டி
அஞ்சறைப் பெட்டி உணவே மருந்து" நாம் உண்ணும் உணவு மருத்துவ குணம் கொண்டதாக இருந்தால் எளிதில் எந்த நோயும் நம்மை அண்டாது. அதற்காகத்தான் நம் முன்னோர்கள் உணவுப் பொருட்கள் தயாரிக்கும்போது சில மருத்துவ குணம் உள்ள மசாலாக்களையும் சேர்த்து உணவு தயாரிப்பர். அந்த பாரம்பரிய முறைப்படி தான் பெரும்பாலான உணவுப்பண்டங்கள் இன்றுவரை நம் வீடுகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சில குறிப்பிட்ட மசாலாப் பொருட்கள் எப்போதும் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் வைத்திருக்கும். அஞ்சறைப் பெட்டியா? அது என்ன அஞ்சறைப் பெட்டி என்கிறீர்களா? டிரங்கு பெட்டி, கொட்டாப் பெட்டி மரப் பெட்டி, கடாப் பெட்டி கிண்ணிப் பெட்டி வண்ணப்பெட்டி நார்ப் பெட்டி ஓலைப் பெட்டி பிளாப் பெட்டி இப்படி பெட்டிப் பெட்டியாப் பயன்படுத்தி இன்று எல்லாவற்றையும் மறந்து , இல்லை...இல்லை தொலைத்து ,அஞ்சறைப் பெட்டி என்றால் என்ன என்று கூகுளில் பொருள் தேடும் நிலைமையில் இருக்கிறோம். அஞ்சறைப் பெட்டி என்றதும் பழைய நினைவுகள் எல்லாம் கண்முன் வந்து நின்று மலரும் நினைவுகளாகி மகிழ்ச்சி தருகின்றன. அஞ்சறைப் பெட்ட...