ஹைக்கூ கவிதை இலக்கணம்
ஹைக்கூ கவிதை இலக்கணம் ஹைக்கூ கவிதை என்றதும் அங்கங்கே வார இதழ்களிலும் நாளிதழ்களிலும் மாத இதழ்களிலும் படித்த மூன்று வரி கவிதைகள்தான் கண்முன் வந்து நிற்கும். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்ற தொல்காப்பியரின் கருத்தை ஏற்று புதியனவற்றை நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம். இந்த கணினி யுகத்தில் உட்கார்ந்து சாப்பிடவே நேரமில்லை. கையில் அங்கங்கே கிடைப்பதை வாங்கி அங்கேயே நின்று சாப்பிட்டுவிட்டு கையைக் கழுவியும் கழுவாமலும் பேப்பரில் துடைத்துப் போட்டுவிட்டு அப்படியே ஓடிக் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும்போது படிப்பதற்கு எங்கே நேரம் இருக்கிறது? என்று கேட்போர் தான் அதிகம். இப்படிப்பட்ட சூழலில் இராமாயணம் ,மகாபாரதம், சிலப்பதிகாரம் , பாஞ்சாலி சபதம் போன்ற காப்பியங்களைப் படிக்க நேரம் இருக்கப்போகிறதா என்ன? அறுசீர் கழிநெடிலடி எழுசீர் கழிநெடிலடி எண்சீர் கழிநெடிலடி என்று மிகவும் நீளமான கவிதை வரிகளை வாசிக்கும் அளவுக்கு யாருக்கும் பொறுமை இல்லை. போகிற போக்கில் ஏதோ ஒன்றிரண்டு வரி கவிதைகளை வாசிக்கும் பழக்கம்தான் பெரும்பாலோரிடம் உள்ளது. அதனால்தான் என்னவோ இரண்டு வ...