ஒட்டா ஒருமதி கெட்டாய்
ஒட்டா ஒருமதி கெட்டாய் போட்டியும் பொறாமையும் நிறைந்ததுதான் உலகம். ஐந்தறிவுள்ள விலங்குகள் உணவுக்காக மட்டுமே போட்டி போடுகின்றன. ஆனால் ஆறறிவுள்ள மனிதன் மட்டும்தான் பெருமைக்காக போட்டி போட்டுக் கொள்கிறான். தான்தான் பெரியவன் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக போட்டி போடுகிறான். போட்டி ...பொறாமை.... சண்டை... சச்சரவு.... இவை எல்லாம் சாதாரண மக்களிடையே காணப்படும் அன்றாட நிகழ்வு. அப்படி இருங்கள் ....இப்படி இருங்கள் என்று அன்றாடம் அறிவுரை கூறும் பெருமதியாளரிடம் அவை காணப்படும்போது அது நம்மை சற்று அதிர்ச்சி அடைய வைக்கிறது. இந்தப் போட்டியும் பொறாமையும் புலவர்களையும் விட்டு வைக்கவில்லை. குறை கண்டு பிடிப்பதிலேயே சிலர் குறியாக இருப்பர். இந்தக் குணம் ஔவையிடம் நிரம்பவே இருந்தது. எப்போதும் ஔவைக்குத் தனது புலம...