Posts

Showing posts with the label அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல- மூதுரை

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவை போல

Image
அற்ற குளத்தின் அறுநீர்ப்பறவை போல... நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாக இருப்பவர்கள் உறவுகள். " கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி  பெறும் " என்று தனது தனிப்பாடலில் சொல்லித் தந்தார் ஔவை . அப்படிச் சொன்ன ஔவை யார் உறவினர் என்று சொல்லித் தருகிறார். ஔவையின் பாடல்கள் பொழுதுபோகாமல்  எழுதப்பட்டவை அல்ல. அனுபவச் சாறு பிழிந்து கொடுக்கப்பட்ட வாழ்வியல் விருந்து. எக்காலத்தினரும் அருந்தி இன்பம் காணவல்ல அருமருந்து. மூதுரையின் ஒவ்வொரு பாடலும் தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்களை நடத்திச் செல்லும். இன்றைய மூதுரை விருந்து இதோ: "அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் - அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும்  நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு "                                   -  மூதுரை விளக்கம் : நீர்ப்பறவைகள் குளத்தில் நீர் நிறைந்திருக்கையில் அதைச் சுற்ற...