ஈரிரவு தூங்காது என் கண்
ஈரிரவு தூங்காது என் கண் இந்த உலகில் தோல்வியைத் தழுவாதவர் எவரும் இருக்க முடியாது. வெற்றி பெற்றவர்களின் வரலாற்றினைப் புரட்டிப் பார்த்தால் இந்த உண்மை புரியும். தோல்வியடைந்து விட்டோமே என்று விரக்தியில் முட்டைக் கட்டிக்கொண்டு முடங்கிக் கிடந்தால் சமூகம் நம்மைத் திரும்பிப் பார்க்காது . காலமும் கண்களை மூடிக்கொண்டு எங்கேயோ ஓடிவிடும். தோல்வியடைந்து விட்டாயா? துடைத்துப் போட்டுவிட்டு மறுபடி ஓடு. மறுபடி தேடு. தேடலும் ஓயா ஓட்டமும் நம்மை சிகரத்தில் கொண்டு நிறுத்தி அழகு பார்க்கும். இது எல்லாத் துறைகளிலும் நடக்கும் நடந்து கொண்டிருக்கும் வெற்றிக்கான போராட்டம்தான். இது படைப்பாளிகள் அனைவருமே போராளிகள் தான். போராளிகள் எந்த இடத்திலும் தோற்றுப் போக விரும்புவதில்லை. போராளிகளிடம் மட்டும்தான் அந்தப் பண்பு இருக்கிறதா? தனிமனிதனிடமும் அந்தப் பண்பு உண்டு. யாரும் இன்னொரு மனிதனிடம் தோற்றுப்போக விரும்புவதில்லை. அப்படித் தோன்றும்போவது தன் தன்மானத்திற்கு இழுக்கு என்று நினைப்பர். அதுவும் தன்னைவிட வயதில் சமூக நிலையில் பொருளாதாரத்தில் அறிவில் குறைந்தவர்களிடம் தோற்றுப் போவதற்கு மனம் எந்த இடத்திலும் இடம் கொட...