Posts

Showing posts from January, 2026

சங்கத்தமிழ் மூன்றும் தா

சங்கத்தமிழ் மூன்றும் தா எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர் இறைவனைத் தொழுவது நமது வழக்கம். இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே நாம் செய்யப் போகும் காரியம் வாய்க்கும் என்ற நம்பிக்கை எல்லோருக்குள்ளும் இருக்கும். ஔவை மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? நம் தொழில் நன்றாக நடக்க வேண்டும். படிப்பில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்க வேண்டும். நல்ல வேலை கிடைக்க வேண்டும். நோய்நொடி இல்லாத நலமான வாழ்வைத் தர வேண்டும் என்று இறைவனிடம் கேட்போம். நல்ல அறிவைக் கொடு என்று கேட்போம். கீர்த்தியும் புகழும் வந்து சேரட்டும் என்று கேட்போம். கேட்டதைக் கொடுப்பவன் இறைவன் என்ற நம்பிக்கை நம்மில் பெரும்பாலோனோர்க்கு உண்டு. சாதாரண மக்களுக்கு இருக்கும்  இதே நம்பிக்கை ஔவையிடமும் இருந்தது. அதனால் ஔவையும் தனது நல்வழி பாடல்களை எழுதத் தொடங்குவதற்கு முன்பாக  இறைவனை வணங்கினார்.  வணங்குவதோடு மட்டுமல்லாமல் இறைவனிடம் ஒரு கோரிக்கையும் வைக்கிறார். அப்படி என்ன கோரிக்கை வைத்திருப்பார் ஔவை? வயிறார உண்ண நல்ல  உணவு வேண்டும் என்று கேட்டாரா? எழுதி முடிக்கும் வரை போதிய உடல் நலம் வேண்டும் என்று  கேட்டாரா? நினைவாற்றல் வேண்டும் எ...

கண்ணதாசனை வளைத்த கம்பர்

கண்ணதாசனை வளைத்த கம்பர்  "பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளி வைத்த சத்தான கம்பனுக்கு ஈடு இன்னும்  வித்தாகவில்லை என்று பாடு"என்பார் கண்ணதாசன் இந்தப் பத்தாயிரம் மட்டும்தானா.? இன்னும் உண்டு சத்தானப் பாடல்கள். தனிப்பாடல் திரட்டிலிருந்து கம்பர் முத்தாக அள்ளி வைத்த பாடல்கள் பல உண்டு. அவற்றிலிருந்து  இதோ உங்களுக்காக ஒரே ஒரு பாடல். தன் மகள் காதல் வயப்பட்டு விட்டாள். அதனால் அவள்  உடல் மெலிந்தாள்.கைவளை கழன்று காணாமல் போனது. இதற்குக் காரணம் யார்? யாரைப் பார்த்தாள்? யார் மீது காதல் கொண்டாள்? வேறு எங்கும் செல்லவில்லையே...அப்படியானால்.... அப்படியானால்.... யாராக இருக்கும்? தாயின் மனம் கலக்கத்தில் கண்டபடி ஏதேதோ புலம்பத் தொடங்குகிறது. அன்றொருநாள் அவள் பார்த்த அவன் அவனேதான். அவன் ஆகத்தான் இருக்க வேண்டும் . யாராக இருக்க வேண்டும் என்கிறாள்? தாய் தன் மகளின் காதல் பற்றிச் சொல்கிறாள். கேளுங்கள். தவளை தத்திப் பாயும்போது  தவளையின் கால்கள் பூவில் பட்டு அதில் இருக்கு தேன் மழைபோல்   கீழே சொரியும் . அப்படிப்பட்ட வளமுடைய  பொன்னியாறு பாயும் வளநாடு.  அங்கு மாதத்தன் என்பவன்...

கண்ணதாசன் பாடல்களில் இலக்கியம்

கண்ணதாசன் பாடல்களில் இலக்கியம்  "பழையன கழிதலும்  புதியன புகுதலும் வழுவல " அதற்காக முற்றிலுமாக பழைமையைப் புறந்தள்ளிவிட்டுச் சென்றுவிட முடியாது. பழைமையை புதிய கண்ணோட்டததில் எடுத்துச் செல்வது புத்திசாலித்தனம். அந்தவகையில் பழைய இலக்கியப் பாடல்களின் கருத்தாளுமையைத் தங்களது திரையிசைப் பாடல்களில் புகுத்திய பெருமை திரைப்பட பாடலாசிரியர்களுக்கு உண்டு.  முன்னைப் பழைமைக்கும் இன்றைய   புதுமைக்கும் பாலமாக இருந்து எழுதியப்  பாடல்கள் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.  சொல்லப் போனால் பழைய இலங்கியங்களில்   உள்ள கருத்துக்களை மக்களிடையே கொண்டு   சேர்த்த பெருமை திரைப்படப் பாடலாசிரியர்களுக்கு   உண்டு.  அவர்களில் முக்கியமானவர்கள் என்று கவியரசு  கண்ணதாசன் , கவிப் பேரரசு வைரமுத்து, வாலி  என்று ஒரு சிலரை மட்டும் குறிப்பிட்டுவிட்டு  கடந்து போக முடியாது.  நிறைய பாடல்கள் எழுதிய கவிஞர்களின்  பாடல்களில் மட்டுமல்ல.  ஒரு சில பாடல்கள் எழுதிய கவிஞர்களின்  பாடல்களிலும் கண்டிப்பாக இலக்கிய தாக்கம்  இருக்கும்....

கரிக்காய் பொரித்தாள்

கரிக்காய் பொரித்தாள்  ஆசுகவி காளமேகம் புலவர் எந்தப் பொருளில் பாடல் பாடச் சொன்னாலும் பாடுவார். எந்தச் சொல் கொடுத்து அந்தச் சொல்லில் மட்டுமே பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாலும் உடனடியாகப்  பாடி முடிப்பார். அதனால் அவரைச் சீண்டிப்பார்க்க வேண்டும் என்றே ஒரு கும்பல் சுற்றிக் கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு சொல்லையோ எழுத்தையோ கொடுத்துப் பாடும்படி கேட்டுக் கொண்டே இருக்கும். காளமேகமும் கேலியும் கிண்டலும் நையாண்டியுமெனப் பாடி முடித்துவிடுவார். இப்படித்தான்  ஒருமுறை பெண் ஒருவர் கரி என்று தொடங்கி உமி என முடியும் படியாகப் பாடல் பாடும்படியாகக் கேட்டுக்கொண்டார். உமி கரியாகும். கரி எங்காவது  உமியாகுமா? கரியில் தொடங்கிப் பாடச் சொன்னால் புலவர் திகைத்துப் போய்விடுவார் என்ற எண்ணம் அந்தப் பெண்ணுக்கு. தன்னை வம்புக்கு இழுக்கவே இந்தப் பெண்  கரி என்று தொடங்கி உமி என்று முடிக்கும்படி பாடக் கூறுகிறார். போகட்டும்....அவள் மூஞ்சில் கரியைப் பூசுகிறேன் என்று நினைத்துக் கொண்டு காளமேகம் பாடிய பாடல் இதோ உங்களுக்காக... " கரிக்காய் பொரித்தாள் கன்னிக்கா யைத்தீய்த்தாள் பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள...

அன்னக்கிளி அக்கா

அன்னக்கிளி அக்கா  விசயத்தைக் கேள்விப்பட்ட நேரத்தில் இருந்து அழுது கொண்டே இருந்தாள் அன்னக்கிளி. "நிஜமாத்தான் சொல்லுறீயளா... யாரு சொன்னா...மாப்பிள்ளை  சொன்னாவளா அவுங்க ஆத்தாகாரி சொன்னாவளா..." அப்பா வந்து சொன்ன நேரத்தில் இருந்து அப்பாவை கேள்வி கேட்டுக் கேட்டு  குடைந்து எடுத்து விட்டார் அம்மா. " என்ன ....யாதுன்னு சொல்லிபுட்டேன்ல்ல... இனி ஆக வேண்டியதைப் பாரக்க வேண்டியதுதான்" சொல்லிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டுவிட்டு வாசலை நோக்கி நடந்தார் அப்பா. "என்ன சொல்றிய...சட்டியா?  பானையா? உடனே மாப்பிள்ளை சொல்ற மாதிரி மாத்துகிறதுக்கு...." வார்த்தைகளைக்  குறுக்கே போட்டு அப்பாவைப் போக விடாமல் தடுத்தார் அம்மா. "பின்ன என்னை என்ன  செய்யச் சொல்லுற..." அப்பாவின் குரலில் ஒரு இயலாமை தெரிந்தது.கூடவே இனி பேசி என்ன ஆகப்போகுது என்ற விரக்தியும் இருந்தது. என்ன செய்ய முடியும்? வேறு எப்படித்தான்  சொல்ல முடியும் ? அன்னக்கிளி அவரு பெத்த புள்ளதானே வருத்தம் இல்லாமலா இருக்கும்...? கடனவுடன வாங்கி கட்டிக் கொடுத்துவிட்டு கடனை அடைத்து இன்னும் குறுக்கு நிவுறல. அதுக்குள்ள வந்து இப்படி ஒர...

அமைதியின் சின்னம்

அமைதியின் சின்னம்  அமைதி இல்லா உலகில் நிம்மதி இல்லை. நிம்மதி இல்லா மனதில் மகிழ்ச்சி இல்லை. அமைதி இருக்குமிடத்தில்தான் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும். அமைதி எப்போது வரும்? புயலுக்குப் பின்னர் வருவதுதான் அமைதி. அப்படியானால் பெரும் போராட்டத்திற்குப் பின் வருவது அமைதி. அல்லது போருக்குப் பின்னர் வருவது அமைதி என்றும் எடுத்துக் கொள்ளலாம். அமைதியை விரும்பாதோர் எவரேனும் உண்டோ! சாதிச் சண்டை .சமய இனக் கலவரங்கள். தனிமனிதப் போராட்டம். திரும்பிய பக்கம் எல்லாம் அமைதி இல்லாச் சூழ்நிலை. மக்களிடையே பகை. குடும்பங்களுக்கு இடையே பகைமை உணர்வு. நாளை என்ன நடைபெறுமோ என்ற அச்சம். இப்படி திகிலும் பயமும் திருப்பமுமாக நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றன. மனம் எங்கே அமைதி....எங்கே அமைதி என்று ஏக்கத்தோடு ஒவ்வொரு நாளின் நகர்வுகளையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அமைதியைத் தேடி ஆன்மீகத் தலங்களை நோக்கி ஓட வைக்கிறது. யாராவது ஆறுதலாக நாலு வார்த்தை  சொல்லிவிட மாட்டார்களா என்று மனம் ஏங்கிக்கிடக்கிறது. மனம்  கலங்கிவிட்டால்... உடல் நலம் கெடும். தூக்கம் தொலைந்து போகும். நிம்மதி காணாமல் போய்விடும். உலகப் ...

சாண் ஏறினால் முழம் சறுக்குகிறதா

சாண் ஏறினால் முழம் சறுக்குகிறதா சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது. நம்ம பொழப்பே இப்படித்தான் இருக்கிறது. இந்த லட்சணத்தில் என்று முன்னேறுவது? என்று சலிப்பாக இருக்கிறீர்களா? ஏன் இந்த சலிப்பு? சாண் ஏறி முழம் சறுக்கினால் வெற்றி பெற முடியாது என்று யார் சொன்னது?  முதலாவது சொலவடையை சற்று மாற்றிப் பாருங்கள். நீங்கள் வெற்றி பெறச் போவது உறுதி.  ஓணான் ஒன்று எத்தனைமுறை சறுக்கினாலும் நான் பனை மரத்தில் ஏறியே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்து ஏறிக்கொண்டிருந்து. அதைப் பார்த்த ஒரு குரங்கு" அட முட்டாள் ஓணானே! எதற்காக சொரசொரப்பாக இருக்கும் பனை மரத்தில் ஏறி இவ்வளவு கஷ்டப் பட்டுக்கொண்டிருக்கிறாய்? இப்படி வழுக்கி வழுக்கி ஏறி என்றுதான் பனை மரத்து உச்சியைப் போய் சென்றடைவாய் "என்று கிண்டலடித்தது. தலையை நிமிர்த்தி பார்த்த ஓணான்"அட...நீ போவியா எனக்கு எல்லாம் தெரியும் "என்று சொல்லியபடி மறுபடியும் மறுபடியும்  பனை மரத்தில் ஏறியது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு புலவர் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார். அவர் மனதில் இப்போது வேறு ஒரு மனக்கணக்கு ஓடியது.  அவர் மனதிற்குள் ஓடிய கணக்கு பாடலாக வெளி வந்தது....

சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்  1"நாம் எங்கே நிற்க வேண்டும் என்று நமக்கான இடத்தை நாம்தான் உறுதி செய்து கொள்ள வேண்டும்." 2"யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே. மாற்றிக் கொள்ள நினைத்தால் முடிவில் ஏமாற்றம்தான்  நிகழும்." 3"தன்மானம் பாதிக்கப்படும் இடத்திலிருந்துதான்  எதிர்ப்பு கிளம்பும்." 4"மரியாதை இல்லாத இடத்தில் மௌனமாய் கடந்துவிடு. 5"உண்மை உன்னை பலவீனப்படுத்தும் என்பதற்காக உண்மையை எந்த இடத்திலும்  தொலைத்துவிடாதே" 6"நேற்றைய எதிரி நாளைய நண்பன் என்று நம்பிவிடுவது முட்டாள்தனம். ஒருமுறை எதிரி  எப்போதும் எதிரி." 7கலகக்காரனிடமிருந்து தள்ளி நிற்கப் பழகு. கலகம்  உன்னை எப்போது வேண்டுமானாலும்  உள்ளே இழுத்துப் போட்டுக் கொள்ளும்" 8"பொய்யும் புரட்டும் பொய்யனின் மினுக்கு." 9"தேடாத உறவு தோண்டாத துறவு போன்றது" 10"பணம் பேசும். மௌனம் பேச  வைக்கும்." 11. "அவமானப்பட்டவனுக்கு அந்த அவமானம்தான்  ஊக்கம் மருந்து. என்றாவது ஒரு நாள் பலன் தராமல் போகாது." 12 "இல்லாமையைப் பகிர்ந்து கொள்ளாதே. இருப்பதைப் பதுக்கி வைக்காதே."...

முரண் தொடை என்றால் என்ன

முரண் தொடை என்றால் என்ன  எழுத்தை அசையாக்கி சீராய் அமைத்து தளையால்  கட்டி அடிதொறும் தொடையால் அணி செய்து படைப்பது செய்யுளாகிறது. இப்படிப்பட்ட பாடல்கள்  படிப்போரைக் கட்டி இழுக்கும். மறுபடி மறுபடி  என்னைப்படி என்று அழைக்கும். தூக்கத்திலும் அசைபோட வைக்கும். எழுத்து அசை  சீர் தளை அடி  தொடை  ஆகிய ஆறு உறுப்புகளால் செய்யுள் கட்டப்படுகிறது. இவற்றுள் தொடை என்ற உறுப்பின்கீழ் வரும் முரண் தொடை பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம். அடிகளிலோ சீர்களிலோ  சொல்லோ பொருளோ  மாறுபட்டு அமைவது முரண் தொடை எனப்படும். எடுத்துக்காட்டாக  "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்." என்ற தொடரை எடுத்துக் கொள்வோமானால் முற்பகல், பிற்பகல் என்று இரண்டு முரண்பட்ட சொற்கள் வந்துள்ளன. இவ்வாறு மாறுபட்ட பொருள்தரும் சொற்கள் அமைவதை முரண் தொடை என்கிறோம். நன்மை - தீமை இரவு  - பகல் காலை - மாலை இருள் - ஒளி மேடு _ பள்ளம் வாழ்வு - தாழ்வு இகழ்ச்சி - புகழ்ச்சி இன்னா - இனிய இன்பம் - துன்பம் கருமை - வெண்மை இப்படி பொருள் மாறுபட்டு வருவதை பொருள் முரண் என்கிறோம். சொல்லும் பொருளும் முரணுதல் ஐந்து வக...

கேடுகெட்ட மனிதரே கேளுங்கள்

கேடுகெட்ட மனிதரே கேளுங்கள்  பணம் !பணம்! பணம்.! இந்த வெற்றுத்தாளுக்குத்தான் எத்தனை மதிப்பு! "பணம் பத்தும் செய்யும்  "  "   பணம் பந்தியிலே குணம் குப்பையிலே"       இப்படி பணமொழிகள் ஏராளம் உண்டு. பணம் இல்லாதவன் பரியாசத்துக்கு உரியவனாகி விடுகிறான். பணம் உள்ளவனுக்கு எங்கு சென்றாலும் சிவப்புக் கம்பள வரவேற்பு  கொடுக்கப்படுகிறது.  இதையே வள்ளுவர், "இல்லாரை எல்லோரும் எள்ளுவர் செல்வரைச் எல்லாரும் செய்வர் சிறப்பு " என்கிறார். சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். இல்லாதவனுக்கு ஏது மரியாதை?      இதைவிட ஒருபடி மேலே போய் எப்படி  அருளில்லாருக்கு அவ்வுலகம்  இல்லையோ  அதுபோல பொருளில்லார்க்கு இவ்வுலகம்  இல்லை என்று உச்சந்தலையில் ஓங்கியடித்துவிட்டார் வள்ளுவர்.  "அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு "       பணம் இல்லை என்றால் எவ்வுலகிலும் இடமில்லையா? அப்படியானால்  என்ன செய்வது?              ...

வேதாளம் சேருமே வெள்ளெருக்கு பூக்குமே

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது என்பார்கள். பொய் சொன்னால் சாப்பாடு கிடைக்காது. பொய் சொன்னால் பட்டினி கிடக்க வேண்டியதுதான். ஆதலால் உண்மை பேசுக என்று பெரியோர் சொல்லித் தந்திருக்கிறார்கள். ஏன் உண்மை பேச வேண்டும்? அதற்குப் பதிலாக வள்ளுவர் யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற.                என்று சொல்லித் தந்திருக்கிறார் . வாய்மையைத் தவிர வேறெதுவும் நன்மை பயக்கக் கூடியது அல்ல என்று வள்ளுவர் ஆணித்தரமாகச் சொல்லி விட்டார். இப்படியொரு பெருமையோடு நிமிர்ந்து பார்க்க, "பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனில் " என்ற குறள் கண் முன்னர் வந்து நின்று பொய்க்கு பரிந்துரை வழங்கி சிரித்துக்கொண்டு நின்றது.  "என்ன பொய் சொல்லலாமா?" என்று நாமும் திருப்பி கேட்க "ஆமாம் ...பொய் சொல்லலாம். நாம் சொல்லும் பொய்யால் ஒருவர்க்கு நன்மை பயக்குமானால் மட்டும் பொய் சொல்லலாம்" என்று ஒரு நிபந்தனையோடு பொய் சொல்ல ஒப்புதல் அளித்து விட்டார் வள்ளுவர். அதனால் வள்ளுவரே...

பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல் நாள் :28.01.2026 எங்கும் புகழ் மணக்கும் பங்களாச்சுரண்டை ஊரு வஞ்சமில் ராஜையா தங்கமணி  இணையர் சேர்வலாறு கொஞ்சி மகிழப் பிறந்த இச்சிற்றாறு நெஞ்சம் மகிழ  ஓதினர் ஞானசௌந்தர்யா எனும் நற்பேரு! அச்சங்குன்றம்  பாலோடு கலந்த இச்சிற்றாறு இன்பமாய்ப் பிள்ளை மூவர் தந்த  கூட்டுத் தேனாறு புன்னகையாள்  தமிழாசிரியை உள்ளம் என்றும் பதினாறு  விழியுயர்த்திப் பார்க்க வைத்தது இவரின் ஒழுகலாறு! மேரிசார்ஜென்ற் பள்ளியில் பாய்ந்த தமிழ்ப்பொய்கையாறு மாணவர் உள்ளங்களை அள்ளுவதில் மணிமுத்தாறு கற்பித்தலில் இவருக்கு  உண்டு தனிப்பேரு  கற்றோர் கொண்டாடும்  பெரும்பேறு வாய்த்த தாமிரபரணியாறு மூவேழு ஆண்டு ஆசிரியப் பணி என்பது சிறியவரலாறு மூவாத் தமிழ்க் கற்பித்தலில் ஓடும் தீஞ்சுவைப் பாலாறு ஓராறு பொழுது போதாது இவரொரு  அன்புப்பேராறு சீராறு நற்சுவையாறு இவருக்கு நிகர்யாரு? கள்ளமில்லாப் பேச்சு என்றும் குளிரிளநீராறு  உள்ள வோட்டமோ தெளிந்த தெண்ணீராறு அள்ளும்மடையெனப் பேச்சில் இருக்கும்  சுவையாறு அமைதிக்கான நோபல் பரிசுக்குப்  பரிந்துரை இவர் பேரு பருவம் வந...

அடக்கம் உடையார் அறிவிலர்

அடக்கம் உடையார் அறிவியல் என்று... மௌனம் ஓர் அழகான மொழி என்று சொல்வார்கள். எல்லாராலும் அமைதியாகவும் மௌனமாகவும் இருந்துவிட முடியாது. மௌனமாக இருப்பது கூட அறிவுள்ள ஒருவர்க்கு மட்டுமே  இயலக்கூடிய ஒன்று அமைதியாக இருக்கும் ஒருவரை அலட்சியமாக எண்ணிவிட வேண்டாம். அடக்கமாக இருப்பதால் எல்லாவற்றிற்கும் அடங்கிப் போய்விடுவார் என்று  தவறாக எண்ணிவிடவும் வேண்டாம். அந்த அமைதிக்கும் அடக்கத்திற்கும் காரணம் தேவையில்லாத இடத்தில் பேசுவதைத் தவிர்ப்பதற்காக இருக்கலாம். சாதகமான சூழலுக்காகக்  காத்திருப்பதற்காகவும் இருக்கலாம். சாதகமான சூழல் என்றதும்  ஒற்றைக்காலில் தவமிருக்கும் கொக்குதான் கண்முன் வந்து நிற்கிறது. கொக்கு ஒருபோதும் மற்ற  பறவைகளைப் போன்று பரபரப்பாக சுற்றிக்கொண்டு திரியாது. வயலோரமாகவோ குளத்தோரமாகவோ  ஒன்றுமே தெரியாதது போல ஒற்றைக்காலில் நின்று  கொண்டிருக்கும். எதிலும் கவனம் செலுத்தாதது போலவே நின்றிருப்பதால் மீன்குஞ்சுகள் கொக்கின் கண்  முன்னாலேயே நீரில் நீச்சலடித்து  விளையாடும். ஆனால் கொக்கு இதனைக்  கண்டுகொள்வதே இல்லை.  அதனால் மீன்களுக்குக் கொக்கு  ...

பவளவிழா வாழ்த்து

பவளவிழா வாழ்த்து  (ஞானம் செல்லப்பா தலைமை ஆசிரியை) பொங்கு புனல் பொருநை நதிநடக்க  அங்கம் தகதகக்க அருமருந்துநீர் மணக்க  நெல்லை இராமையாபிள்ளை கோமதி  இணை மடிசுமக்க மெல்ல சிரித்தாள் செந்தாமரையாள்  ஞானம்  முகம் சிவக்க கண்டேன் சீதையை என மன்னன்  செல்லப்பா நெகிழ்ந்திருக்க மங்கை நல்லாள்  நாணிமுகம்  கோணி நிற்க இல்லறத்தில் இணைந்திருக்க இருவரும் விழைந்திருக்க இனிதாய் வளைகரம் பற்றினார்  மணம் முடிக்க இல்லற சாட்சி  முன்னுரை எழுதி வைக்க நன்மக்கள் நால்வர் பிறந்தார் புதுக்கவிதை  வரைந்து வைக்க நல்லதோர் கூட்டாட்சி  இல்லத்தில் கூடியிருக்க நல்லாட்சி செய்தார் பிள்ளைகள் நனி சிறக்க ஆசிரியர் பணிக்காய் முல்லுண்டில் கால் பதிக்க தொடர் ஓட்டம் பவாய் மாதுங்கா பேண்டி பஜாரெனப் பயணிக்க தலைமையாய் மகுடம் சூட்டி முல்லுண்ட் அணியம் சேர்க்க பணி நிறைவு செய்தார் நற்பெயர் நாளும்  நிலைக்க குன்றா மொழிப் புலமை கண்டு   நான் மலைக்க மண்டும் மதிகண்டு வான்மதியை கார்மேகம் தான் மறைக்க பார்த்தேன் பாத்தேன்  படித்தேன்  என  உள்ளம் குதுகலிக்க படி தேன்உண்டு த...

பூக்கள் எத்தனை

பூக்கள் எத்தனை பூப்பூவாய்ப் பூத்திருக்கிறது அழகு  ரோசாத் தோட்டம்  துள்ளி வந்த அல்லி அத்தனைப் பூக்களையும் பறித்தாள்  கூடையில் எடுத்துப் போட்டாள் கிடுகிடுவென நடந்தாள் சின்னத் தங்கை நிலாவிடம் மூன்று பூக்களைத் தந்தாள் அன்புத் தோழி குயிலியிடம் ஐந்து பூக்கள் அளித்தாள் நான்கு பூக்களை எடுத்து தலையில் சூடிக் கொண்டாள் ஆறு பூக்களை அள்ளி ஆற்றில் மிதக்க விட்டாள் கூடைக்குள்  கையைவிட்டுத் துழாவித் துழாவிப் பார்த்தாள் கையில் பூக்கள் கிடைக்காததால் கையைக் கையை விரித்தாள் அல்லி பறித்த பூக்கள் எத்தனை அறிந்தோர் சொல்லிச் செல்லுவீர்!

விளையாடலாம் வா

விளையாட வா சின்னப் பெண்ணே பாரதி சேர்ந்து விளையாடலாம் ஓடி வா! அன்புத் தம்பி சாரதியோடு  ஆடிப் பாடிக் களிக்க வா சேவற்கோழி போலவே கூவி எம்மை எழுப்ப வா பச்சைக் கிளியைப்  போலவே தத்தித் தத்திப் பேசி வா மயிலைப் போல ஆடியே அகவல் ஒலி எழுப்பி வா குயிலைப் போல பாடியே குக்கூ என்று கூவி வா  கத்தும் தவளைப் போலவே தத்தித் தத்தித் தாவி வா குரைக்கும் நாயைப் போலவே வாலை வாலை ஆட்டி வா பிளிரும் யானை போலவே ஒற்றைக் கையை  ஆட்டி வா கர்ச்சிக்கும் சிங்கம் வருகிறது ஒளிந்து கொள்வோம் விரைந்து வா!

ஓய்வறியா ஆசிரியர்கள் கூடுகை

ஓய்வறியா ஆசிரியர்கள் கூடுகை ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர்  ஞானம் செல்லப்பா வீட்டில் ஓய்வறியா ஆசிரியர்கள் கூடுகை உவகையால் ஒலித்ததோர் பேரிகை மாறியது சட்டென்று வானிலை துளைத்தது நாசியை நறும்புகையலை நடந்த கால்களுக்குத் தடையிடுவாரில்லை கண்கள் கண்டன வாயிலை அழைத்தது ஞானப் பண்ணலை கூடிக் கொண்டாடிய அன்பலை கூடத்தில் நடந்ததோ நேரலை உள்ளம் உறவாடிய பேச்சலை கள்ளமில்லா இளமை துள்ளலை கவின்செய  வந்த மகிழ்வலை நுவல முடியா சிரிப்பலை நேற்றைய நிகழ்வு நினைவலை கற்றவை பெற்றவை உரைத்தவை மெல்லத் தொட்டுச் சென்ற உணர்வலை உள்ளி உள்ளி உவத்தலை தொடர்ந்து வந்தது விளம்பர இடைவேளை விரிந்தன பசுமைமிகு வாழையிலை காட்சிகளாயின கவின்மிகு கறிவகை  கண்கள் இமைக்க மறந்தன நிகழ்தலை தடையிட மறுத்தன நாநீர்ச் சுரத்தலை அழைத்தது நறுமணம் பசித்தலை மறுத்து வயிறு எழுப்பியது ஒலியலை வாய்க்கும் கைக்கும் நடந்த மோதலை வெற்றியில் முடித்து வைத்தது பாயசக் குவளை உள்ளம் நிறுத்தவில்லை பூரித்தலை கலந்துரையாடலாகிய தொடரலை நாழிகைக் கடந்ததை உணர்த்தலை எழ மறுத்து இருத்தலை புரிந்த ஆசிரியர் ஸ்டீபன் அவர்கள் அன்பால் பொழிந்தார்  பரிசு மழை தொடர் அன்பளிப்பால் நனைய...

அம்மாவின் நினைவில்

அம்மாவின் நினைவில்  அரிச்சுவடு கற்றிட ஆசிரியர் முகம் பார்த்ததில்லை ஆலோசனை கேட்டிட ஆலோசகர் வைத்ததில்லை நெல்லைத் தமிழ் பேசிட நெட்டுருவு எதுவும் செய்ததில்லை நிதி மேலாண்மை செய்திட நெடுங்கணக்கு கற்றதில்லை ஈசானம் கருத்திருந்தால் இடிமழை பொழியுமென்று வானிலை முன்னறிப்பு செய்ய வானவியல் படித்ததில்லை மண் பார்த்துபருவம் செய்ய வேளாண் படிப்புனக்குத் தேவையில்லை நீர் மேலாண்மை படிக்காமல் நீர் மேலாண்மை செய்தவளே! முதலெழுத்துப் படிக்காமல் முதன்மை அறிவு தந்தவளே! சட்டம் படிக்காமல் வீட்டில் சட்டாம் பிள்ளை ஆனவளே! காவல் தெய்வமாய் எம்மைக் கண்ணுக்குள் வைத்துக் காத்தவளே! நீ இருக்கும் வரை  உன் அருமை தெரியவில்லை... அந்திவரை வேலை செய்து அசந்து நீ வரும்போது உன் அசதி புரியவில்லை  ஆறுதலாய் என்றும் இருந்ததில்லை ஒத்தை மனுஷியாய் நீ ஓடியாடி உழைத்தபோது உன் வருத்தம் புரியவில்லை உதவிக்கு வந்ததில்லை நீ விட்ட இடத்தை என்னால் எட்டிப் பிடிக்க  முடியவில்லை அண்ணாந்து பார்த்தாலும் உன் உயர்வு எனக்கு எட்டவில்லை  கண்ணுக்கு எட்டிய தூரம் தேடுகிறேன் கண்ணான உன்னைக் காணவில்லை  அம்மா எனக்கு வாய்த்தது பெரும்பேறு ...

நற்றிணை நடத்திய நாடகம்

நற்றிணை நடத்திய நாடகம்  உலகமே ஒரு நாடக மேடை. நாம் அனைவரும்  ஆளுக்கொரு கதாப் பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறோம். யாரும் ஆட்டி வைக்கலாமேயே இயல்பாக நாடகங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மனிதர்களுக்கு மட்டும்தான் நடிக்கத் தெரியுமா? ஏன் எங்களால் கூடாதா? நாங்களும் நடிப்போம்ல்ல... என்ற சொல்கிறார்கள் இந்த நடிகர்கள். யாரிந்த நடிகர்கள்? நடிகர்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக ஒரு சில வரிகள் . நகைச்சுவை உணர்வு உள்ள  ஒருவரால் மட்டுமே  தான் இருக்கும் இடத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும். "நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள்" என்பார் வள்ளுவர். நகைச்சுவை உணர்வு இல்லாதவர்க்கு இவ்வுலகம் பகலும் இரவுபோல்தான் ஒளியற்றதாக இருக்கும் .அதாவது அவர்கள் வாழ்க்கையில் ஒருநாளும்  மகிழ்ச்சி இருக்காதாம். நகைச்சுவை உணர்வு இல்லாதது அவ்வளவு கொடுமையானதா? நகைச்சுவைக்கு நம் வாழ்வையே புரட்டிப் போடும் வல்லமை உண்டு. காந்தியடிகள் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். அதனால்தான்" நகைச்சுவை உணர்வு மட்டும் எனக்குள் இல்லை என்றால் எப்பொழுதோ நான்  என் வாழ்க்கையை இழந்திருப்பேன...

காணும் பொங்கல்

காணும் பொங்கல்  தை மூன்றாம் நாள்  காணும் பொங்கல். இந்த நாளில்  உற்றார் உறவினர்கள்  ஒருவரை ஒருவர் சந்தித்து தங்கள் அன்பையும் தாங்கள் செய்த  பண்டங்களையும் தங்களுக்குள் பரிமாறிக்கொள்வார்கள். இது கணுப் பொங்கல் அல்லது கன்னிப் பொங்கல் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இந்த நாளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். உறியடித்தல்,கயிறு இழுத்தல், கபடிப்போட்டி,வழுக்கு மரம் ஏறுதல் என்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் இந்த நாளில்  நடைபெறும். வீரவிளையாட்டுக்கான நாள் என்றுதான் சொல்ல வேண்டும். காணும் பொங்கலின் சிறப்பே அன்று கொண்டு சென்று உண்ணும் உணவுதான் அப்பப்பா...என்ன ருசி... என்ன ருசி.... முன்பு பொங்கல் இந்துக்கள் மட்டும் கொண்டாடும் பண்டிகையாக இருந்தது. இப்போது அது தமிழர் திருநாளாக மாறிப் போனதில்  பெருமையும் பெரும்மகிழ்ச்சியும்  உண்டு.  பொங்கல்  பண்டிகையை தமிழர்த் திருநாளாக மாற்றிய கலைஞருக்கும் கலைஞர் அரசுக்கும்  நாம் இந்த நேரத்தில் நன்றி  சொல்லியே ஆக வேண்டும். சமயத்திற்கு அப்பாற்பட்டுத் தமிழர் அனைவருக்குமான பண்டிகை என்று உலகம் எங்கும் அடையாளம்...