Posts

Showing posts with the label கைவேல் களிற்றொடு போக்கி...-திருக்குறள் விளக்கம்

கைவேல் களிற்றொடு போக்கி...

Image
கைவேல் களிற்றொடு போக்கி.. "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு " என்று தமிழின், தமிழ் நாட்டின் அடையாளம் திருவள்ளுவர் என்ற பெருமை கொண்டவர். 1330 குறட்பாக்களைத் தந்தவர். அறத்துப்பால்  பொருட்பால் இன்பத்துப்பால் என்று முப்பாலையையும் தந்து எப்பால் உனக்கு வேண்டுமோ அப்பாலை எடுத்து தப்பாமல் வாழ் என்று  சொல்லித் தந்தவர். ஒன்றே முக்கால் அடியில் உலகை அளந்தவர். "கடுகைத் துளைத்து எழுகடலைப் புகட்டி குறுகத் தரித்தக் குறள் " என்று அனைவரையும் கொண்டாட வைத்தவர். இப்படி எல்லாத் தரப்பினராலும் கொண்டாடப்படும் வள்ளுவரின் ஒவ்வொரு குறளும்  ஒவ்வொரு கதை பேசும். அப்படி என்னோடு கதை பேசி இப்படியொரு வீரனா என்று என்னை வியக்க வைத்து  கலங்க வைத்த குறள் ஒன்று இதோ உங்களுக்காக... "கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்."                குறள் :774 இதுதான் என்னைப் போர்க்களத்திற்கே அழைத்துச் சென்று கலங்க வைத்த குறள். தீவிரமாகப் போர்க்களத்தில்  போர் நடந்து கொண்டிருக்கிறது. வீரன் ஒரு...