Posts

Showing posts with the label பணி நிறைவுப் பாராட்டு மடல் - கவிதை

பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல்  முத்தையா MA.B.Ed, ஆசிரியர்,  நவாப் டேங்க் தமிழ்ப்பள்ளி, மும்பை. செந்தமிழ்ச் செல்வர் நிறை கூடங்குளம் வனப்பு செவ்வியர் செல்வநாயகம் பாக்கியம் தாலசைப்பு செவியில் முத்தையா  நாமமோதி வளர்த்த வளர்ப்பு செந்தமிழ் உரமேற்றி மலர்ந்து நிற்பது பேருவப்பு! அல்லியன்ன ரேணுகாவோடு கொண்டதோர் இணைப்பு மல்லியன்ன மலர்ச்சிதரு பிள்ளைகளால் வந்தபூரிப்பு நல்லியன்ன இல்லாள் வாழ்க்கையின் சிறப்பு வல்லியாள் வனைந்ததால் வந்தது முதலிருப்பு! முதலடி ஷஹாஜிநகர்ப் பள்ளியில் கிடைத்த வரவேற்பு ஈரடி சீத்தாகேம்ப்  பள்ளியில் தொடர்த் தடம்பதிப்பு மூவடி நவாப்டேங்க் பள்ளி நிகழ்வெல்லாம் முத்தாய்ப்பு நாலடி நாடறிய வைத்ததொரு நல்வாய்ப்பு! கலைகளின்  நினைப்பு அய்யாவின்  உயிர்த்துடிப்பு  கலைக்கூடமாய் மாற்ற காட்டினார் பெரும்முனைப்பு    தலையாயக் கற்பித்தலில் உண்டு அர்ப்பணிப்பு  மலையாய்ப் பரிசுகள் குவித்தது இவரின் பேருழைப்பு! நாலேழு ஆண்டு நற்பணிக்கு மகுடம் பதிப்பு நாளேடு புகழ  நல்லாசிரியர் விருது  முதற்சிறப்பு ஏடேடெங்கும் படைப்பாளியின் கவி அணிவகுப்பு ஏடாக வரல...

பணி நிறைவுப் பாராட்டு மடல்

Image
பணி நிறைவுப் பாராட்டு மடல்  சேலத்து மாங்கனிச் சுவையானவளை சீர்மிகு நரசிம்மன் லட்சுமி இணை மடி சுமந்தவளை மாதவளை மன்னன் பாலசுப்பிரமணியம் மனையானவளை எம் ஆசானானவளை ஆயிழை சித்ரா  மாணவர்க்கு மாமழை! ஆரே காலனியில் பெய்த முதல்மழை மாதுங்கா முலுண்ட் கோலிவாடா மாணவர் வளைமாயம் கற்றவளை பேரருள் பெருமதியானவளை மாணிழை சித்ரா மாணவர்க்கு மாமழை! நினைவுவளை  நிறைகுடமானவளை புரிந்தவரைப் புடமிடச்செய்தவளை உயர்ந்தவளை உள்ளம் கவர்ந்தவளை நல்லவளை நற்பண்பானவளை தேனிழை சித்ரா மாணவர்க்கு வான்மழை! தமிழானவளை தமிழாய்ந்தவளை தக்கவரைத் தரமாக்கும்வளை தளராதவளை தனித்துவமானவளை தூதுவளை போலானவளை சேயிழை சித்ரா மாணவர்க்கு வான்மழை! கனிந்தவளை கல்வி மொழிந்தவளை அன்னவளை அன்பு தந்தவளை புன்னகையிழை பொலிமுகமானவளை என்னவளை  என்நெஞ்சில் நிறைந்தவளை பூவிழை சித்ரா மாணவர்க்கு வான்மழை! ஓதும்பணி நிறைவானவளை ஓர்ந்துநலம் சூழ்ந்தவளை ஒத்திருகை தொழுதவளை வாயார வாழ்த்துதும்  இப்பொன்மகளை நேரிழை சித்ரா  மாணவர்க்கு வான்மழை!

பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல்  திருமதி சித்ரா பாலசுப்பிரமணியம் ஆசிரியை, கே.டி.காய்க்வாட் தமிழும் பள்ளி சயான்-கோலிவாடா மும்பை  சேலத்து மாங்கனிச் சுவையானவளைச் சீர்மிகு நரசிம்மன் லட்சுமி இணை வளைகரம் சுமந்தவளை மாதவளை மன்னன் பாலசுப்பிரமணியம் மனையானவளை ஆயிழை சித்ரா நற்பருவ மாமழை! ஆரே காலனியில் பெய்த முதல்மழை மாதுங்கா முலுண்ட் கோலிவாடா மாணவர் வளை மாயம் கற்றவளை பேரருள் பெருமதியானவளை மாணிழை சித்ரா கற்பவர்க்கு மாமழை! நினைவுவளை  நிறைகுடமானவளை புரிந்தவரைப் புடமிடச்செய்தவளை உயர்ந்தவளை உள்ளம் கவர்ந்தவளை உண்மைவளை நற்பண்பானவளை தேன்குவளை சித்ரா பண்பு நிறைமழை! தமிழானவளை தமிழாய்ந்தவளை தக்கவரைத் தரமாக்கும்வளை தளராதவளை தனித்துவமானவளை தூதுவளை போலானவளை சேயிழை சித்ரா தமிழுக்கு நல்மழை! கனிந்தவளை கல்வி மொழிந்தவளை அன்னவளை அன்பு தந்தவளை புன்னகையிழை பொலிமுகமானவளை என்னவளை  என்நெஞ்சில் நிறைந்தவளை பூவிழை சித்ரா எமக்குப் பூமழை! ஓதும்பணி நிறைவானவளை ஓர்ந்துநலம் சூழ்ந்தவளை ஒத்திருகை தொழுதவளை வாயார வாழ்த்துதும் யாம் இப்பொன்மகளை நேரிழை சித்ரா என்றென்றும் மழை!

பணிநிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல்  திருமதி . வசந்தி தேவராஜன் B.Sc,B.Ed,        த. தா. காய்க்வாட் தமிழ்ப் பள்ளி ,        மும்பை - 37                                                                                 ,  புகழ் மண்டிக் கிடக்கும் திண்டிவனத்தேன் வேணுகோபால் சகுந்தலா இணையர் தேன் மடியில் விழுந்த கன்னித்தேன் வசந்தத்தேன் மன்னர் தேவராஜனுக்கு வாய்த்தக் கட்டித்தேன்! மக்கள் இருவர் அழகுத்தேன் அமுதத்தேன்  கூட்டுத்தேன் சுவை கூட்டுத்தேனென உரைத்தேன் பணித்தேன் என்பதை உம்மிடம் படித்தேன் பண்புத்தேன்  பணிவுத்தேன் உம்மில் கற்றேன்! அறிவியல் பணிமனையில் உம்பணி கண்டேன் கண்கள் பனித்தேன் இமைப்பதைத் துறந்தேன் கலைத்தேன் கலைப் படைப்பினை வியந்தேன் உள்ளத்தில் உன்னை ஓவியமாய் வரைந்தேன்! தமிழ்ச்சங்க பரிசினை அள்ளுவதைக் கண்டேன் எப்படி ...

பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல்         திருமிகு. மு. தவமணி B.Sc.B.Ed,        கே.டி.காய்க்வாட் தமிழ்ப் பள்ளி.       சயான்  கோலிவாடா        மும்பை. பணி ஓய்வு : 01.06.2023 மின்னணு மிகைபுகழ்  கூடங்குளம் பேருலா முன்னடிநாடார் பஞ்சுப்பழம் அம்மாள் இணையிலா முன்னவர் குலம் விளங்க வந்த பிள்ளைநிலா சின்னவர் செவியோதிய தவமணி பெயர் புகழுலா! கள்ளுலா ரதிலலிதா கண்ணுலா வந்தலா(ல்) காதலா(ள் ) கரம்பிடித்தலா கன்னி மனையாதலா கட்டிலா தொட்டிலா பிள்ளை நால்வராதலா(ல்) மட்டிலா  மகிழுலா மனையில் ஆட்சி நடத்தலா! கர்மவீரர் பள்ளியில் தடம் பதித்தலா (ல்) கர்மமே கண்ணெனக் கடுமையாய் உழைத்தலா வன்மம் கொள்ளா வாழ்க்கைத்துணை வழிகாட்டலா(ல்) தர்மமும் தயையும்  தவமணியின் கரம்பிடித்தலா! கலைகள் யாவும் உள்ளிலா தலைச் சோற்றிலா மலையாய் உயர்வுலா மாறா நேசரின் அருளிலா அலையிலா மனம் ஆர்ப்பரிப்பிலா ஆனந்தத் துள்ளலா விலையிலா நட்புலா காண்டலா(ல்) மனம் மகிழ்ச்சி கடலிலா! தவம் உன்றன் பெயரிலா செயலிலா அ...

பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவு பாராட்டு மடல் திருமதி   வசந்தி டேவிட் தலைமை ஆசிரியை, கே.டி. காய்க்வாட் மாநகராட்சி தமிழ்ப்பள்ளி, சயான் கோலிவாடா,  மும்பை - 37. பணி நிறைவு நாள் : 01.04.2023 பொருநைநதி பொங்குநுரை கோநகர் நெல்லை எங்கும் புகழ் மணக்கும் ஆரைகுளம் ஊரு வஞ்சமில் ராஜன் பூமணி இணையர் சேர்வலாறு நெஞ்சம் மகிழ  ஓதினர் வசந்தியெனும் நற்பேரு! அன்பர் டேவிட்டோடு இணைந்த இச்சிற்றாறு இன்பமாய்ப் பிள்ளைஇருவர்  தந்த  கூட்டுத் தேனாறு புன்னகையாள் வசந்திக்குப் பருவம் என்றும் பதினாறு  விழியுயர்த்திப் பார்க்க வைத்தது நின் ஒழுகலாறு! கே.டி..காய்க்வாட் பள்ளியில் பாய்ந்த முதலாறு ஷஹாஜி நகர் சர்தார் நகர் எங்கும் இவர் கிளையாறு கே.டி.காய்க்வாட்டில் தலைமையாசிரியை எனும் தனிப்பேரு  தன்னிகரில்லா வசந்திக்கு வாய்த்தோர் பெரும்பேறு! ஆறாறு ஆண்டு ஆசிரியப் பணி என்பது வரலாறு தேனாறாய்க் கற்பித்தலில் உண்டு தீஞ்சுவைப் பாலாறு ஓராறு நாட்கள் போதாது இவரொரு பேராறு சீராறு தீஞ்சுவையாறு இவருக்கு நிகராரு?   கள்ளமில்லாப் பேச்சு என்றும் குளிரிளநீராறு   உள்ள வோட்டமோ தெளிந்த தெண்ணீராறு  அள்ளும்மடையெனப்...

பணி நிறைவுப் பாராட்டு மடல்

Image
                  பணி நிறைவுப் பாராட்டு மடல்  திருமதி . வசந்தி தேவராஜன் B.Sc,B.Ed,        த. தா. காய்க்வாட் தமிழ்ப் பள்ளி ,        மும்பை - 37                                                                                               பணி ஓய்வு நாள்: 01.03.2023 புகழ் மண்டிக் கிடக்கும் திண்டிவனத்தேன் வேணுகோபால் சகுந்தலா இணையர் தேன் மடியில் விழுந்த கன்னித்தேன் வசந்தத்தேன் மன்னர் தேவராஜனுக்கு வாய்த்த நல்கட்டித்தேன்! மக்கள் இருவர் அழகுத்தேன் அமுதத்தேன் கூட்டுத்தேன் சுவை கூட்டுத்தேனென உரைத்தேன் பணித்தேன் என்பதை உம்மிடம் படித்தேன் பண்புத்தேன்  பணிவுத்தேன் உம்மில் கற்றேன்! அறிவியல் பணிமனையில் உம்பணி கண்டேன் கண்கள் பனித்தேன் இமைப்பதைத் துறந்தேன் கலைத்தேன் க...

பணி நிறைவுப் பாராட்டு மடல்

பணி நிறைவுப் பாராட்டு மடல் நாவில் தேனூறும் நல்லமணம் தூதாகும் ஆம்பூர்நகர் இணையர் ஜேசுதாஸ் ரெபேக்கா ஆசைமலர்க் கொடியாள் ஹெலன் மீராபாய் உக்கிரன்கோட்டை ஐயா லயனலின்                                              வயலினானார்! ஐயா லயனலுக்குக் கட்டித்தேன் அமுதத்தேன் மகளிரிருவர் வாய்த்த நல் வசந்தத்தேன் பெய்தேன் குழைஇல்லறம் இசைத்தேன் கண்டேன் மெய்த்தேன் இதுவென உவந்தேன்!  நார்த்விக் மேனிலைப்  பள்ளி துளிர்த்தேன்  செயினட்மேரி நேசனல் கல்லூரி அருந்தேன் மும்பைத் தமிழ்ப்பள்ளி தனித்தேன் தளிர்த்தேன் இன்பத்தேன்  மாணவர் விருப்பும் கூட்டுத்தேன்! சொற்தேன் தோய்த்த கல்வி சுவைத்தேன் மதித்தேன் மதி தேனெனென உணர்ந்தேன் நனித் தேனுண்டதுபோல்  மகிழ்ந்தேன் கனித்தேன் மொழிகேட்கத் தவம் கிடந்தேன்! அன்புத்தேன் உள்ளம் என்றும் அமுதத்தேன் பண்புத்தேன் பாசத்தேன் கொட்டும் அருவித்தேன் ஆசைத்தேன்  கொண்டேன்  அரவணைத்தேன் பார்த்தேன் பாவைத்தேன் பாசத்தேன்! சொற்றேன் சுவைத்தேன் அருந்தேன் அறிவுத்தேன்...