Posts

Showing posts with the label விளையாட்டில் வினாவிடை

விளையாட்டில் வினாவிடை

  விளையாட்டில் வினாவிடை " பாடல் இல்லாத விளையாட்டு பருப்பு இல்லாத கூட்டு போன்றது. " என்பார்கள். சுவை இருக்காது. சிறுவர்கள் விளையாட்டில் கண்டிப்பாக பாடல் இருக்கும்.இருக்க வேண்டும். பாடல்கள் பாடிக்கொண்டே விளையாடுவதில் சிறுவர்களுக்கு ஓர்அலாதி இன்பம். விளையாட்டுப் பாடல்கள்  உலக அறிவை ஊட்டுகின்றன. மொழித்திறனை  வளர்க்கின்றன. சொல்லாட்சித் திறன் பெருகுகிறது. வினா விடைப்பாடல்கள்  மொழிப்பயிற்சி, நாப்பயிற்சி போன்ற பயிற்சிகளை வளர்ப்பவையாக இருக்கும்.நண்பர்களோடு சேர்ந்து விளையாடும்போது சிறுவர்கள் தம்மையும் அறியாமலேயே அதிகமாக கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. புத்தகத்தையும் தாண்டி மேலும் அதிகமான சொற்களைக் கையாளும் திறன் வளர்கிறது. தன்னொத்த வயதினருடன் பழகும் பண்பு ஏற்படுகிறது. முதல் அடிக்கு அடுத்த அடி பதில் சொல்வதாக அமைவதால் கேள்வியும் மறக்காது.பதிலையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். கண்டவை கேள்விப்பட்டவை என்று  அனைத்துப்  பொருட்களைப்  பற்றியும் கேள்விகள் கேட்டு எளிமையாக பாடி விளையாட முடியும். நாட்டார் பாடல்களில்  வினாவிடைப் பாடல்கள்  சிறுவர்களால் விரும்ப...