வெற்றிக்கணக்கு
வெற்றிக்கணக்கு "வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்....." பாடல் வரிகளைக் கேட்டதும் தன்னம்பிக்கை வந்து நம்மை உந்தித் தள்ளுகிறது. என்னால் கூடும் ....என்னால் கூடும் என்று மகிழ்ச்சி வந்து துள்ள வைக்கிறது. நாம் பல நேரங்களில் சோர்வாக இருந்து விடுகிறோம். என்னால் முடியாது என்று ஒரு செயலைச் செய்வதிலிருந்து விலகிக் கொள்கிறோம். இதற்கெல்லாம் காரணம் என்ன? தன்னம்பிக்கை இல்லாமை தான். முதலாவது நம்மீது நமக்கு நம்பிக்கை வர வேண்டும். நமது திறமைமீது நம்பிக்கை வர வேண்டும். நம் மீதே நமக்கு நம்பிக்கை இல்லாதபோது நாம் முடியாது என்ற முடிவை எடுத்து ஒதுங்கி நின்று கொள்கிறோம். ஒரு பறவை பறக்கிறது என்றால் எதனால் ? தன் இறக்கைமீது வைத்திருக்கும் நம்பிக்கை. எனக்கு வலுவான இறக்கை இருக்கின்றது. என்னால் எவ்வளவு உயரத்திலும் பறக்க முடியும். எவ்வளவு தூரம் வரையும் சென்று வர முடியும் ? மலையின் மேலும் பறக்க முடியும். கடலின் மேலும் பறக்க முடியும். இப்படியொரு நம்பிக்கை இருப்பதால்தான் கீழே விழுந்துவிடுமோ என்று எந்தவொரு அச்சமும் இல்லாமல் பறவைகளால் பறக்க முடிகிறது. தன்னம்பிக்கை எப்போது வரும்? தன்னை நம்ப...