Posts

Showing posts with the label என் கொணர்ந்தாய் பாணா நீ-அந்தக கவி

என் கொணர்ந்தாய் பாணா நீ

என் கொணர்ந்தாய் பாணா நீ கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்களே அதுபோல பாணன் வீட்டுப் பாணினியும் புலமையில் குறைந்தவளில்லை. பாணன்  ஒருவன் ஒரு வள்ளலைப் பாடி பொருள் பெற்று வருகிறேன் என்று சென்றான். ஆனால் வரும்போது வெறும் கையோடு வருகிறான். வெறுங்கையை வீசிக்கொண்டு வீட்டிற்கு வந்ததும் பாணினிக்குக் கோபம். "இன்றும் வெறுங்கை தானா?" நக்கலாகக் கேட்டாள். புன்னகைத்த பாணன், "இல்லை ...இல்லை கொண்டு வந்திருக்கிறேன்" என்றான். "என்ன கொண்டு வந்தீர்கள்? காட்டுங்கள்." ஆர்வமாக கேட்டாள் பாணினி. பாணனுக்கு பல நாட்களாக தன் மனைவியோடு சொல் விளையாட்டு  விளையாடிப் பார்க்க ஆசை. அதற்கான நல்வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது. நழுவ விட்டுவிடுவானா? ஒரு நமட்டுச் சிரிப்போடு பாணினியைப் பார்த்தான். அவள் கண்கள் அவன் கையில் ஏதாவது இருக்கிறதா என்று தேடுவதிலேயே குறியாக இருந்தன. அவளுடைய ஆர்வத்தைக் கண்டு பாணனுக்கு உள்ளுக்குள்  ஒரு சிரிப்பு. "வம்பதாம் களபம்   கொண்டு வந்திருக்கிறேன்" என்றான். அதாவது களபம் என்றால் கயிறு அணிந்த யானை என்பது அதன் பொருள். அதற்கு அவள் களபமா ?   சந்தனத்தை...