Posts

Showing posts with the label போலீஸ் என்றால் நம்பலாமா?

போலீஸ் என்றால் நம்பலாமா?

  போலீஸ் என்றால் நம்பலாமா? அதிகாலை எழும்பியதும் காபி குடிக்கிறோமோ இல்லையோ கண்கள் நாளிதழைத் தேடும். ஒருமுறை அதிகாலையிலேயே நாழிதழ் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால்... அதற்கு நாம் அடிமையாகிவிடுவோம். நாளிதழ் வருவதற்குச் சற்று நேரமாகிவிட்டால் கண்கள் எதையோ தேடி காத்திருக்கும். நாளிதழ் படிப்பதிலேயே நான் முந்தி ...நீ முந்தி ...என்று வீடுகளில் சண்டை ஏற்படுவதுண்டு. பத்துப் பதினைந்து நிமிடம்தான் இந்த நாளிதழ்  களேபரம். படித்து முடித்தப் பிறகு  நாளிதழ் மேசைமீது  அனாதையாகக் கிடந்து ஆடி ஆடி அழைக்கும். யாரும் சீண்டுவார்களா என அசைந்து அசைந்து எட்டிப் பார்க்கும். அசைவில் கீழே விழ பழைய பேப்பர் அடுக்குக்குமேல் கொண்டுபோய் வைக்கப்பட்டுவிடும். அத்தோடு நாழிதழுக்கும் நமக்குமான உறவு முடிந்து போயிற்று. ஆனால் செய்திக்கும் நமக்குமான தொடர்பு அத்தோடு முடிந்து போயிற்றா? முடித்துக் கொள்ளலாமா? அதற்காகவா நாளிதழ்கள் இத்தனை செய்திகளை சுமந்து வருகின்றன ? எவ்வளவு கரிசனமாக அங்கேயும் இங்கேயும் ஓடி , அல்லும்பகலும் பாராது  ஊண் உறக்கமின்றி, தேடித்தேடி செய்தி சேகரித்து, தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு...