Posts

Showing posts with the label ஒத்த ரூபா-செல்வாவின் சிறுகதைகள்

ஒத்த ரூபா

ஒத்த ரூபா பாண்டி தாத்தாவுக்கு நாலு நாளா காய்ச்சல். நாக்கெல்லாம் கசந்து கொண்டு ஒரு மாதிரியாக இருந்தது. கொஞ்சம்போல சுடு கஞ்சி யாராவது வச்சித் தந்தால் தேவலாம் போல இருக்கிறது  என்று நினைத்தபடி படுத்திருந்தார். யார் வச்சித் தருவார்கள்.? யாரிடம்  போய் கேட்பது?  முந்தைய மாதிரி இருந்திருந்தால்.... கண்களை உருட்டி  ஓங்கி குரல் கொடுத்து மொத்த வீட்டையும் கூட்டியிருப்பார். இப்போதெல்லாம் கொஞ்சம் உரத்த குரலுல கூப்பிட்டால் போதும். "அங்கே என்ன...கிழம் கிடந்து கூவுது "என்ற எதிர் குரல் வந்து வழி மறைக்கும். பேரன் பாலன் பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கிறான். அவன் வந்த  பின்னர்தான் தண்ணீர் என்றாலும் கேட்க முடியும். அவன் மட்டும்தான் கூப்பிட்டதும் "என்ன வேணும் தாத்தா "என்று ஓடி வருவான். கண்கள் பேரனையே தேடிக் கொண்டிருந்தன. பொழுது சாய வருவான். அது வரை ஏன் என்று கேட்க ஒரு நாதி பக்கத்தில் வராது. அப்படி நாதியற்றா போனார் பாண்டி தாத்தா.? எல்லாரும் இருக்காவ... இருந்து என்ன பண்ண? எல்லாம் அவர்செய்த பாவம்தான். ராசக்கிளிக்கு கொஞ்சநஞ்ச பாவமா செய்துருக்காரு ...? அதுக்குதான் கடவுள்   இப்படி க...