வேண்டும் வேண்டும்
வேண்டும்.....வேண்டும் அனைவர் மனதையும் ஆட்டிப் படைக்கும் ஒற்றைச் சொல் ஒன்று உண்டு என்றால் அது வேண்டும் என்பதுதான். இந்த வேண்டும் என்ற சொல்லை வேண்டாம் என்று நகர்த்தி வைத்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஏதாவது ஒரு சொல்லைப் போட்டுப் பாருங்கள். சரியாக அமைந்துவிடுமா? நான் ஆசை அற்றவன் அதனால் வேண்டும் என்ற சொல்லுக்கே இடமில்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆசை அற்ற புத்தரும் ஏதோ ஒன்று வேண்டும் என்றுதானே ஆடம்பர வாழ்க்கையை விட்டு வெளியேறினார். இந்த வேண்டும் என்ற சொல் மட்டும் நம் கூடவே வரவில்லை என்றால் நாம் என்றோ வேண்டாதவர்கள் ஆகியிருப்போம். அதிகாலை எழுந்ததும் எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் சாமி என்ற வேண்டுதலோடுதான் நம் நாளே தொடங்குகிறது. அடுத்தது காபி வேண்டும். கத்தரிக்காய் வேண்டும். என்று வேண்டும் பட்டியல் நாள் முழுவதும் நம்மோடு பயணப்பட்டுக்கொண்டே இருக்கும். எதற்கு உங்களுக்கு இந்த வேண்டாத வேலை என்கிறீர்களா? எனக்கு நீங்கள் வேண்டுங்க... அதனால் நீங்கள் வேண்டும்... வேண்டும் என்று சொல்லும்வரை நான் உங்களை விட்டுவிடப் போவதில்லை. இது என்னப்பா புதுசு புதுசா பொட்டலம் கட்டிக்கிட்டு வார...