Posts

Showing posts with the label அன்னையர் தினம் -கட்டுரை

அன்னையர் தினம்

அன்னையர் தினம்  முன்னுரை: " தாயின்  மடியில்  தலை வைத்திருந்தால்     துயரம் தெரிவதில்லை   தாயின் வடிவில்   தெய்வத்தைத் கண்டால்   வேறொரு தெய்வமில்லை"  எவ்வளவு அனுபவப் பூர்வமாக   உணர்ந்து எழுதப்பட்ட வரிகள். அம்மாவோடு உள்ள பிணைப்பு பிரிக்க முடியாதது.பிரித்தால் பொருள் தராது. அம்மாவின் மடி:   நம் துயரங்கள் அத்தனையும் தொலைந்து போகும் இடம்  அம்மாவின் மடி. எத்தனை துயரங்கள் இருந்தாலும் தாயின் மடியில் படுத்த அடுத்த கணம் அவை அத்தனையும்    காணாமல் போய்விடும்  .  அம்மா தலையை வருடிக் கொடுத்த அந்த  நாட்கள் கவலையை மறக்கச் செய்த பேரின்ப நாட்கள்.  அம்மாவின் மடி ஆறுதலும்  தேறுதலும் தந்து பேசாத வார்த்தைகளை எல்லாம்  பேச வைக்கும்..பேசாமலேயே பேரின்பம் தந்து நிற்கும். எல்லைக்கோடு வரைய முடியா   அன்புக்காரி அம்மா:   " ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை    அன்னை தந்தையே அன்பின் எல்லை" அம்மாவின் அன்பிற்கு முன்னால்  எதுவும் ஈடில்லை. . ஈடு இணையற்ற அந்த அன...