அன்பகத்தில்லான் உயிர்வாழ்க்கை
அன்பகத்தில்லான் உயிர்வாழ்க்கை.... " அன்பகத் தில்லான் உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த் தற்று " குறள். : 78 அன்பகத்தில்லான் _ உள்ளத்தில் அன்பு இல்லாதவன் உயிர்வாழ்க்கை _ உயிர் வாழ்தலாவது வன்பாற்கண் _ கொடிய பாலை நிலத்தில் வற்றல் மரம் _ பட்ட மரம் துளிர்த் தற்று _ துளிர்த்தது போன்றது உள்ளத்தில் அன்பில்லாமல் வாழும் வாழ்க்கையானது வளமில்லாத கொடிய பாலை நிலத்தில் பட்டமரம் துளிர்விடுவது போன்றதாகும். விளக்கம் : உள்ளத்தில் உண்மையான அன்பு இல்லாத ஒரு வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. அந்த வாழ்க்கை வாழ்ந்தும் வாழாதது போன்றதே ஆகும். கொடிய பாலைநிலத்தில் பட்டுப் போன ஒரு மரமானது மறுபடியும் துளிர்விட வாய்ப்பே கிடையாது. அதுபோன்றதுதான்அன்பில்லாதவர்களில் குடு...