காணி நிலம் வேண்டும்
காணி நிலம் வேண்டும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார். பாரதியின் பாடல்களில் நாட்டுப்பற்று நிரம்பவே இருக்கும். பெண் விடுதலையைப் பற்றிய பாடல்கள் உணர்வுடன் கூடியதாக இருக்கும். மொழிப்பற்று விஞ்சி நிற்கும். பாரதியைக் கொண்டாட ஆரம்பித்தால் நாளெல்லாம் கொண்டாடிக் கொண்டே இருக்கலாம். பாரதியின் பாடல் வரிகள் தமிழ்க் கவிதையின் மந்திர சொற்கள் மந்திரத்தை நாளெல்லாம் உச்சரித்துக் கொண்டே இருந்தாலும் இன்பம் தருவதாகவே இருக்கும். " என் எழுத்தும் தெய்வம்; என் எழுதுகோலும் தெய்வம் " எனக் கூறியவர் பாரதி. பாரதியைப் பற்றிப் பாடி பரவசப்படாத புலவர்கள் இல்லை எனலாம் "பாட்டுக்கொரு புலவன் பாரதியடா _ அவன் பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா! _அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா " என்றார் கவிமணி. கிறுகிறுப்பூட்டும் அருமையான பாடல்களைப் பாடியவர் பாரதி. பாரதியின் பாடல்களில் துணிச்சல் ,...