Posts

Showing posts with the label பொறுமை கடலினும் பெரிது

பொறுமை கடலினும் பெரிது

Image
  பொறுமை போராளிகளின் பலம் " நேரமும் பொறுமையுமே போராளிகளின் பலம் " என்றார் டால்ஸ்டாய். உங்கள் திறமையை வெற்றியாக  மாற்றிக் கொடுக்க உதவுவது உங்கள் பொறுமை மட்டுமே. பொறுமையாக உழைப்பைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். பொறுமை உடையவன் என்ன சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறானோ அதை சாதிக்காமல் ஓயமாட்டான். ஒரு வெற்றியை நோக்கிப் பயணிக்கும்போது இடையில் பல இடையூறுகள் வரலாம். நதிபோல நாம் எல்லாத் தடைகளையும் தாண்டி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் போய்ச் சேர வேண்டும் என்று நிர்ணயித்து வைத்துள்ள இலக்கை அடைய முடியும். பொறுமையும் காத்திருப்பும்  உழைப்பவரோடு கூட்டு சேர்ந்து கொண்டால்  வெற்றியை எவராலும் தடுத்து  நிறுத்திவிட முடியாது. பொறுமைக்கு நல்ல எடுத்துக்காட்டாக சீனாவில் வளரும் ஒருவகையான மூங்கில் செடியைக் கூறுவர். சீன மூங்கில் செடியானது  நட்டதுமே விறுவிறுவென்று வளர்ந்துவிடாது. என்னதான் உரம் போட்டுத் தண்ணீர் ஊற்றி வளர்த்தாலும் வளர்வேனா என்று அடம் பிடிப்பதுபோல அப்படியே வளராமல் நிற்கும். நான்கு ஆண்டுகள் செடியில் பெருமளவிலான  எந்தவித  வளர்ச்ச...