வேளாண் பழமொழி
வேளாண் பழமொழி வேளாண்மை இல்லா உலகும் இல்லை. வெள்ளாமை எதிர்பாரா உழவனுமில்லை" இது என்ன புதுமொழி என்பீர்கள். புதுமொழி இல்லைங்க... இந்த விவசாயி உள்ளத்தில் உதித்த முதல் பழமொழிங்க... எல்லாம் ஒரு சிறிய முயற்சிதான்.... இப்போது பழமொழிக்கு வாங்க... 1 . "களை பிடுங்காத பயிர் காற் பயிர் " பயிரோடு சேர்த்து களையையும் வளரவிட்டால் களை தாங்க வளரும். களை பயிரை வளரவிடாது . களை மளமளவென்று வளர்ந்து பயிரை வளர விடாது கீழே அமுக்கி விடும். களை பயிரை வளரவிடாவிட்டால் பயிர் எப்படி சூரிய வெளிச்சத்திலிருந்து உணவு தயாரிக்கும்? அப்படியே கரண்டு போகுமே.... இதைத்தாங்க களை பிடுங்காத பயிர் காற்பயிர் என்பாங்க. 2. " அகல உழுகிறதைவிட ஆழ உழு" எப்போதும் கலப்பையைப் பிடுச்சி உழு ...பிடிச்சி உழு என்பாங்க. அதாவது கலப்பையை அழுத்திப் பிடித்து உழுதால்தான் ஆழ உழ முடியும். இதைத்தான் கலப்பையைப் பிடுச்சி உழு... பிடிச்சி உழு என்று சொல்லியிருப்பார்களோ! என்றோ கேட்ட ஒலி இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது. ஆழ உழுதால்தான் பயிரின் வேர் பூமிக்கு அடியில் வெகு தூரம் வரை சென்று நீரை உறிஞ்சி வைத்துக் கொள்ளும். அதன...