Posts

Showing posts from November, 2025

மரம் பழுத்தால் வௌவாலை வா

மரம் பழுத்தால் வௌவாலை வா  நமக்கு உறவு என்று சொல்லிக் கொள்ள யாருமே இல்லையே என்று வருந்துகிறீர்களா? பிறப்பால் மட்டும் வருவதல்ல உறவு. நமது செயலால் நமக்கு உறவுகளாக ஓராயிரம் பேர் வருவர். நமது மனதில் ஈரம் இருக்க வேண்டும். கண்களில் கருணை இருக்க வேண்டும்.  உற்ற நேரத்தில் இல்லாதவர்களுக்கு உதவும் நற்பண்பு இருக்க வேண்டும். இவையெல்லாம் இருந்துவிட்டால்  யாருமில்லையே  என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். இந்த நற்பண்புகள் எங்கிருந்தும் உறவுகளை உங்களிடம்  கொண்டு வந்து சேர்க்கும். அது எப்படி? யார் சொன்னது? இது எப்படி சாத்தியமாகும்? ஏன் சாத்தியமாகாது? மரத்தில் பழம் பழுத்துத் தொங்குகிறது. எந்த மரமாவது என் மரத்தில்  பழம் பழுத்திருக்கிறது.  வாருங்கள் என்று வவ்வால்களை அழைத்ததுண்டா? இல்லை வேறு எந்தப் பறவைகளுக்காவது அழைப்பு விடுத்ததுண்டா? இல்லையே.. பிறகு அதெப்படி எல்லாப் பறவைகளும்  அந்த மரத்தை நாடி ஓடி வருகின்றன? காரணம் அதன் பழம். அதன் இனிமையும்  அதன் மணமும் எல்லாப் பறவைகளுக்கும் அழைப்பு விடுத்துவிடுகிறது. பறவைகளைத் தன்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுகிறது. இப்போது அந்த மர...

திருவருகைக்காலமும் மெழுகுவர்த்தியும்

Image
திருவருகைக் கால  மெழுகுவர்த்தி கதை "சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் வெற்றியுள்ளவரும், தாழ்மையானவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய குட்டியின்மேலும் ஏறிவருகிறார்." (சகரியா 9:9) கிறிஸ்துமஸ் நாட்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன. இன்றுமுதல் அட்வென்த் அதாவது திருவருகைக்காலம் தொடங்கிவிட்டது. கிறிஸ்துமஸ் நாட்களுக்கு முன்னர் வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் அட்வென்த் ஞாயிறாகக்  கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் மாமிச வகைகளை உண்ணாமல் இருப்பதுண்டு. கிறிஸ்துவின் வருகை குறித்த தியானங்களையும் பஜனைகளையும் நடத்தி கிறிஸ்து வருகையை உற்சாகமாக எதிர்நோக்கியிருக்கும் காலமாக இந்தத் திருவருகைக் காலம் கருதப்படுகிறது. அன்று விளக்குகளுடன்  மணவாளனை எதிர் நோக்க பத்து கன்னியர் காத்திருந்தனர்.  அவர்களை போல இன்று  மெழுகுவர்த்திகள் ஏற்றி மணவாளன் வருகைக்காக நம்மையே தயார் செய்யும் நாட்கள் தொடங்கிவிட்டன. திருவருகைக் காலத்தில்  தேவாலயங்களில் ஏற்றப்படும்  ஐந்து மெழுக...

பணி நிறைவு பாராட்டு

பணி நிறைவு பாராட்டு கரும்பலகையில்  கண்களைத் திரட்டி  கவினூட்டி  கற்கும் திறனூட்டி சிந்தையில் உவகை ஊட்டி செந்தமிழ்ச் சுவையூட்டி முத்தமிழ் நடைகூட்டி நாளைய தலைவர்களை மெருகூட்டி கற்பிதலுக்குச் சிறப்பூட்டி நல்லாசானாய் மதியூட்டி நல்லாளுமை எனும் பெயரீட்டி நல்லோரால் பாராட்டி பணிக்கு அழகூட்டி  பணி நிறைவுபெறும் ஆசிரியைகள்   தமிழ்ச்செல்வி பாக்கியலதா இருவரும் ஓய்வின்  மகிழ்வை  நாளும்  நுகர்ந்து நலமுடன்  நன்றாய் வாழ ஆண்டவன் அருள் கரம் உடனிருந்து வழிநடத்த உளமார வாழ்த்துகிறேன்!       

திருமண வாழ்த்து

Image

நளியிரு முன்னீர் நாவாய்

நளியிரு முன்னீர் நாவாய் வெற்றி பெற்றவரைத் கொண்டாடும் உலகு  தோற்றவரைக் கண்டு கொள்வதில்லை. ஆனால் தோல்வியைத் தழுவாமல் வெற்றி பெற்றவர் எவரும் உண்டோ என்றால் அதுவும் இல்லை. பலமுறை தோற்று எழுந்து வந்து வரலாற்றில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர்கள் உண்டு. தோற்கலாம். தப்பில்லை. ஆனால் அந்தத் தோல்வியும் புறமுதுகிட்டு ஓடும்படியாக இருக்கக்கூடாது. வீழ்ந்தாலும் மறுபடியும் எழுந்து நிற்பேன்என்ற என்ற தன்னம்பிக்கை இருப்பவர்களுக்கு வீழ்வது ஒரு சாதாரண நிகழ்வு.மறுபடியும் எழும்பி புது உற்சாகத்தோடு களம் காண்பர். ஆனால் இங்கு ஒருவர் போரில் தோற்று விட்டார். புறமுதுகில் விழுப்புண். ஏன் புறமுதுகிட்டு ஓடிவிட்டாரா என்பீர்கள். அதுதான் இல்லை. மார்பில் தைய்த்த அம்பு புறமுதுகு வழியாக வெளியே வந்துவிட்டது. இப்போது புறமுதுகிலும் காயம். வீரனுக்கு அழகு மார்பில் விழுப்புண்  ஏற்பட்டு மாண்டு போவது. ஆனால் இந்த மன்னன் நல்லவீரன். அவனுக்கு புறமுதுகிலும் விழுப்புண் ஏற்பட்டுவிட்டது. தாங்கிக் கொள்ள முடியவில்லை. மானம் போய்விட்டதாக உணர்ந்தான். அப்படியே வடக்கிருந்து உயிரை விட்டுவிட்டான். வெற்றியைக் கொண்டாடும் உலகில்  தோற்றவரை...

சாந்தனையும் தீயனவே செய்திடினும்

சாந்தனையும் தீயனவே செய்திடினும்  பல்லுக்கும் பல் கண்ணுக்குத் கண்" இப்படி பதிலுக்குப் பதிலடி கொடுத்திட வேண்டும். அல்லது சிலருக்குத் தூக்கமே வராது. இது தீயவர் உள்ளம். " தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அஇஉறைந் தற்று" என்பார் வள்ளுவர். நிழலானது தன்னை விடாமல் வந்து தன் காலடியிலேயே  தங்கி இருத்தலைப்போல தீயசெயல்கள் செய்பவர்க்கு கேடு விடாமல் கூடவே வந்து நிற்கும்   என்கிறார் வள்ளுவர். எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு உண்டு. அதுபோல தீமைக்குத் தீமை  என்பதும் எல்லா இடங்களிலும்  எல்லா நபர்களிடமும் இருக்காது. நல்லோர் உள்ளம் நல்லவற்றையே சிந்திக்கும். பொறுத்துப் போதல், விட்டுக்கொடுத்துப் போதல் இப்படி ஆளாளுக்கு நற்பண்புகளோடு நடமாடும் நல்ல உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றனர். மரத்தை வெட்டும் மனிதனுக்கும் நிழல் தரும் பண்பு  மரத்திற்கு உண்டு. நீ என்னை வெட்டிவிட்டாய். அதனால் நான் உனக்கு ஏன் நிழல் தர வேண்டும்? என்று  மரம் வீம்பு பிடிப்பதில்லை. என் கடைசி கிளை இருக்கும் வரை நிழல் தந்துகொண்டுதான் இருப்பேன் என்று பிடிவாதமாக நிழல் தந்துகொண்டே இருக்கும். அதுபோல தீங...

அச்சம் தவிர்

அச்சம் தவிர்  "அறஞ்செய விரும்பு "என்று தனது ஆத்திசூடியை அறத்தோடு தொடங்கினார் ஔவை. பாரதியார் தனது புதிய ஆத்திசூடியை "அச்சம் தவிர் "என்று  தன்னம்பிக்கையூட்டித் தொடங்கியிருக்கிறார்.  அத்தோடு விட்டு விட்டாரா? அடுத்த வரி "ஆண்மை தவறேல்" அதாவது மன வலிமையை இழக்காதே! நம்பிக்கை தரும் வரி இல்லையா? அதைத்தொடர்ந்து மூன்றாவதாக "இளைத்தல் இகழ்ச்சி" என்கிறார். அதாவது சோர்ந்துபோய் பின்தங்கிவிடக் கூடாது.அது இகழ்வடைய காரணமாக அமைந்துவிடும். என்று தட்டி எழுப்பிக் கொண்டே வருகிறார். இதுதான் பாரதியின் பாடல்களில் இருக்கும் மந்திரமும் தந்திரமும்.    பாரதியின் பாடல்கள் என்றாலே ஒரு இளமையின் துள்ளலும்  உயிரோட்டமான உணர்வும்  உணர்ச்சியூட்டலும் கொண்டதாகவே இருக்கும். எதற்கும் அஞ்சா துணிச்சலை வளர்த்தெடுக்க உரமூட்டும் கருத்துக்கள் அதற்குள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். நம்மைத்  தட்டி எழுப்புவதாக இருக்கும். இலக்கண வரம்புக்கு உட்படாமல் புதுக்கவிதைக்குப் பாதை அமைத்துத் தந்தவராயிற்றே! யாருக்கு அஞ்ச வேண்டும்? எதற்கு அஞ்ச வேண்டும்? என்று துணிச்சலோடு சொல்ல வந்த கருத்தினை அள்ளி வீசியவர். ...

பாரி பறித்த கலன்

பாரி பறித்த கலன் கடையேழு வள்ளல்களுள் முதல் வரிசையில் வைத்து  எண்ணப்படுபவர் பாரி.  முல்லைக்கு  தேர் கொடுத்தார் பாரி என்று கொண்டாடப்பட்டு வருபவர்.  இரக்க குணம் கொண்டவர்.  வள்ளல்  இப்படி ஊரெல்லாம் புகழும்  பெருமைக்குச் சொந்தக்காரர்.  பறம்பு மலைப் பகுதிக்கு மன்னன்.  எவ்வளவு நல்ல குணநலன்கள்  பெற்றிருந்தாலும் அரசன் என்றால் எதிரிகள் இருக்கத்தான் செய்வர். எதிரிகளோடு போரிட வேண்டிய ஒரு சூழல் ஏற்படுகிறது.  அப்படி ஒரு போரில் பாரி இறந்து போகிறார்.  பாரிக்கு இரண்டு மகள்கள். அங்கவை,சங்கவை என்று அழகான பெயர் சூட்டி வைத்திருந்தார் பாரி. இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் முன்பாகவே பாரி இறந்து விடுவதால் இவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பை பாரியின் நண்பரான  கபிலர் கையிலெடுத்து வேற்று நாட்டு மன்னர்களோடு பேசிப் பார்க்கிறார். யாரும் பாரி மகளிரை மணம் முடிக்க முன்வரவில்லை. அந்தக் கவலையில்  இறுதியில் கபிலரும் உயிர் துறந்து விடுகிறார். இதற்கிடையில் மூவேந்தர்கள் பறம்பு நாட்டை  அபகரித்து கொள்கின்றனர். இப்போது பாரி மகளிருக்கு நா...

மரமது மரத்திலேறி

மரமது மரத்திலேறி  ஓர் அரசனுக்கு தனியாக வேட்டைக்குச் செலல ஆசை. வேட்டைக்குச் செல்ல வேண்டுமானால் காட்டிற்குச் செல்ல வேண்டும். காட்டிற்கு நடந்து செல்லவா முடியும்?  தேர் வேண்டும்.  தேர் வேண்டும் என்றால் தேர் செய்ய மரம்  வேண்டும். மரம் வெட்டி வரப்பட்டது. இப்போது மரத்தாலான தேர்  தயாராயிற்று. தேரை இழுத்துச் செல்ல  குதிரை  வேண்டுமல்லவா? குதிரையையும் கொண்டுவரப்பட்டது. வேட்டையாட வெறுங்கையோடு போக முடியுமா? தோளில் மூங்கில் மரத்தின் வளைந்த கொம்புகளால் செய்யப்பட்ட வில்  ஒன்றை எடுத்துக் கொண்டான். கையில்  ஒரு மரக்கம்பு பிடியாலான வேல் ஒன்றையும் எடுத்துக் கொண்டான். இப்படி ஒரு முழு வேட்டைக்காரனாக மாறி காட்டிற்குள் சென்றான் அரசன். காட்டிற்குள்  சற்று தொலைவு  சென்றிருப்பான். ஏதோ ஒரு சலசலப்பு  மேலே செல்லவிடாமல் தடையிட்டது. சற்று நின்று நிதானமாக  கவனிக்கிறான் இப்போது வேங்கை ஒன்று அரசனை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. சற்றும் தாமதியாமல்  கையிலிருந்த  வேலை வேங்கையை நோக்கி வீச வேங்கை சாய்ந்து வீழ்கிறது. எத்தனையோ போர் கண்ட  மன்னன். எதிரிக...

கள்வம் என்பார்க்கும் துயிலில்லை

கள்வம் என்பார்க்கும் துயிலில்லை  படுத்தால் தூக்கமே வரமாட்டேங்கிறது. கண்ட கண்ட சிந்தனை எல்லாம்  கண்முன்னர் வந்து நின்று வேடிக்கை காட்டுகிறது. தூக்க மாத்திரை போட்டு தூங்குகிறேன் என்று புலம்பும் பெரிய மனிதர்கள்  மிகுதியான காலம் இது. ஆனால் ஒரு சாதாரண கூலித்தொழிலாளி  படுத்ததும் தூங்கிவிட்டுகிறான். இந்தத் தூக்கம் ஏன் பாரபட்சம் காட்டுகிறது? எதனால் இப்படி நடக்கிறது? இருக்கிறவனுக்கு தூக்கம் இல்லை. இல்லாதவனுக்கு தன் தூக்கம் வரவில்லையே என்று கவலை இல்லை. இந்த இருவருக்கு மட்டும் தான் தூக்கம் இல்லையா? இன்னும் சிலருக்கும் தூக்கம் வருவதில்லையாம். யார் சொன்னார்? யார் சொன்னால் என்ன? சொன்ன கருத்தில் உண்மை  இருக்கிறதா ? நமக்கு அவர் சொல்லிய கருத்தில் உடன்பாடு இருக்கிறதா என்று பார்த்து விடுவோம் வாருங்கள். கள்வம்என் பார்க்கும் துயில்இல்லை; காதலிமாட்(டு) உள்ளம்வைப் பார்க்கும் துயல்இல்லை; ஒண்பொருள் செய்வம்என் பார்க்கும் துயில்இல்லை; அப்பொருள் காப்பார்க்கும் இல்லை துயில்.         -நான்மணிக்கடிகை "திருடுவதற்காக ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து ...

ஹைக்கூ கவிதை இலக்கணம்

ஹைக்கூ கவிதை இலக்கணம்  ஹைக்கூ கவிதை என்றதும் அங்கங்கே வார இதழ்களிலும் நாளிதழ்களிலும் மாத இதழ்களிலும் படித்த மூன்று வரி கவிதைகள்தான் கண்முன் வந்து நிற்கும். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல  என்ற தொல்காப்பியரின்  கருத்தை ஏற்று புதியனவற்றை நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம். இந்த கணினி யுகத்தில் உட்கார்ந்து சாப்பிடவே நேரமில்லை. கையில்  அங்கங்கே கிடைப்பதை வாங்கி அங்கேயே நின்று சாப்பிட்டுவிட்டு கையைக் கழுவியும் கழுவாமலும் பேப்பரில் துடைத்துப் போட்டுவிட்டு  அப்படியே ஓடிக் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும்போது படிப்பதற்கு எங்கே நேரம் இருக்கிறது? என்று கேட்போர் தான் அதிகம். இப்படிப்பட்ட சூழலில் இராமாயணம் ,மகாபாரதம்,  சிலப்பதிகாரம் , பாஞ்சாலி சபதம் போன்ற காப்பியங்களைப் படிக்க நேரம் இருக்கப்போகிறதா என்ன? அறுசீர் கழிநெடிலடி எழுசீர் கழிநெடிலடி எண்சீர் கழிநெடிலடி என்று மிகவும் நீளமான கவிதை வரிகளை வாசிக்கும் அளவுக்கு யாருக்கும் பொறுமை இல்லை. போகிற  போக்கில் ஏதோ ஒன்றிரண்டு வரி கவிதைகளை வாசிக்கும் பழக்கம்தான் பெரும்பாலோரிடம் உள்ளது. அதனால்தான் என்னவோ  இரண்டு வ...

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்  அப்பாக்களுக்குப் பெண் பிள்ளைகள் மீது பாசம் அதிகம். தன் பெண்ணை தன் அம்மாவாகவே  பார்ப்பர். மகள் கண்கலங்கினால் தாங்காது மனசு. அதனால்தான் பார்த்துப் பார்த்துத் திருமணம் முடித்து வைப்பர். ஒரு நினைப்பு வந்ததும் ஓடிச் சென்று பார்த்து வருவர். கண்களாலேயே தன் மகள் கணவன் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறாளா என அறிந்து  கொள்வர். பெற்றோர் தரப்பு இப்படியிருக்க  மகளுக்கு தன் புகுந்த வீட்டின் மரியாதையினைக் காப்பாற்ற வேண்டிய கடமை இருக்கிறது. எந்த இடத்திலும் தன் கணவனை விட்டுக்  கொடுத்துவிடக் கூடாது. அதற்காக மெனக்கெடுவது உண்டு. குறிப்பாக கணவன் வீட்டு வறுமையை வெளியில் தெரியாமல் மறைப்பதில் பெண்பிள்ளைகள் புத்திசாலிகள். அதுதானே வேண்டும். இங்கே ஒரு பெண் கணவன் வீட்டில் இருக்கிறாள். போனவள்  எப்படி இருக்கிறாளோ ?  வீட்டில் இருக்கும் போது சாப்பிட்ட பாத்திரத்தைக்கூட கழுவ விடுவதில்லை. வேலை செய்தால் கையில் காய்ப்பு பிடித்துவிடும். அடுப்பில் வேலை செய்தால் புகை பட்டு முகம் பொலிவிழந்து போகும். இது அம்மாக்களின் கவலை. நம்ம வீட்டில் நம் மகள் மகிழ்ச்சியாக வ...

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து  பணி முதல்நாள்  மாதுங்கா பள்ளியில்  மலங்க மலங்க நான் விழிக்க பாசமாய் இரு விழிகள் எனை நோக்க இதழ் விரிந்தும் விரியாமலும் உதடுகள் புன்னகை  பூக்க 'என்னம்மா' என்று  ஹெலன் டீச்சர் அழைத்தபோது மலர்ந்த  இந்த முதல் காதல் என்றென்றும் வாடாமலராய் இன்றுவரை தொடர்வதை  நினைக்கையில் கண்கள் பனிக்க உள்ளம் உவக்க சொற்கள் தொண்டைக்குள் சிக்க ஊமையாய்  நின்றிருந்த நாட்கள் நினைவில் ஓட வந்ததிந்தப் பிறந்தநாள் வாழ்த்துரைக்க உள்ளம் உந்த ஓரிரு சொல்லெடுத்து அன்பெனும் நார்தொடுத்து பாவணி புனைந்து தாரணி சூட்டி அணியம் செய்ய ஆவலாய் நானும் வந்தேன் கொஞ்சும் நலம் கொண்டு நெஞ்சம் விழைவன கண்டு கஞ்சமில்லா அன்பைப் பொழிந்து தஞ்சம் இறையென மகிழ்ந்து நுவலவொண்ணா நலங்களை நுகர்ந்து வாழ்க பல்லாண்டு பல்லாண்டு  பல்லாயிரம் ஆண்டு  இன்று போல என்றென்றும்   என் உள்ளத்தில் நிறைந்து!         -செல்வபாய் ஜெயராஜ் 

ஒட்டக்கூத்தன் பாடலுக்கு இரட்டை தாழ்ப்பாள்

ஒட்டக்கூத்தன் பாடலுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்  தூது இலக்கியம் பற்றி பெரும்பாலும் நாம் தெரிந்து வைத்திருப்போம். நாரைவிடு தூது படிக்காமல் பள்ளிப் பருவத்தை யாரும் கடந்து வந்திருக்க முடியாது.  காதலுக்குத் தூது செல்வதற்கு என்றே தலைவனும் தலைவியும் பாங்கனையும் பாங்கியரையும் கூடவே வைத்திருப்பர். இது சங்க இலக்கிய அகப்பாடல்களின் மூலம் நாம்  அறியும் செய்தி. இருவரிடையே பேச்சு நிகழ்வதற்குத் துணையாக இருப்பவரைத் தூதுவர்  என்கிறோம். எல்லா நாட்டிற்கும் தூதரகங்கள் இருப்பதும் அங்கு அந்தந்த நாட்டு தூதர்கள்  அமர்ந்து மற்ற நாடுகளோடு பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதும் அரசியல் நிகழ்வாக நாளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல். பண்டைக் காலத்திலும் தூது நடைபெற்றிருக்கிறது. அது இலக்கியமாக வளர்ச்சியடைந்திருக்கிறது.  தமிழிலுள்ள சிற்றிலக்கிய  வகைகளுள் ஒன்றான தூது இதற்குச்  சான்றாக அமைகிறது. முதன் முதலாக தமிழர் நெஞ்சைத்தான் தூதாக விட்டு வந்தனராம். முதல் தூது இலக்கியமே நெஞ்சுவிடு தூது என்பதாக கூறப்படுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ் விடு தூது, அன்னம் விடு தூது, மேகம் விடு தூது, காக்கை வி...

என் பொண்ணு படிச்சவ

என் பொண்ணு படிச்சவ  என் பொண்ணு படிச்சவ நினைப்பு வந்ததும் கண்கள் ஓரமாக கண்ணீர் கட்டிக்கொண்டு நின்றது. என்ன இது.? இதற்காகத்தானே இத்தனை நாள் பாடுபட்டேன். இப்போது....ஏன் இப்படி கண்ட கண்ட நினைப்பெல்லாம் வந்துவாயை மூடிக்கொண்டு நெஞ்சுக்குள்ள  ஏதோ   உருள்வதுபோல முட்டிக்கொண்டு  வந்தது. எப்படிச் சொல்லிபுட்டார். நினைச்சுக்கூட பார்க்கல. நான்தான் நாலு எழுத்து படிக்காமல் போயிட்டேன்..பிள்ளைகளாவது படிக்கணும் என்று ஓடி ஓடி உழைத்தேன். மூன்றும் பொட்டப்புள்ளைகள். அதுகள எப்படி கரையேத்தப் போறேன். காலா காலத்துல ஒருத்தன் கையில் பிடிச்சு கொடுக்கணும என்ற கவலை தூங்கவிடாம துரத்தியது. "உள்ளுருல பன்னிரண்டாவது வரை படிச்சா போதும் என்றேன். நம்மளால தாங்காது மூடும் பொட்ட பிள்ளைகள் தங்கம்மா" என்றேன். அவள் கேட்டாளா? பொட்டப்பிள்ளைகளும் நல்லா படிக்க ஆசைப்படுவதுங்க...கடனோவுடனோ  வாங்கி படிக்க வச்சா அவர்கள் பாட்ட அவங்க பார்த்துகிடுவாங்க. படிக்க வையுங்க என்று மேல பள்ளிக்கூடத்து சார்வாள் சொல்றாவ என்று ஒரே நச்சரிப்பு. சார்வாள் சொன்னாவளா? அவுக சொன்னா சரியாத்தான் இருக்கும். சரி போனால் போகட்டும் . தலையை ...

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும்

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும்  வாழ்வைக் கெடுப்பது வறுமை.  வாழ்வைக் கொடுப்பது வள்ளன்மை" என்று சொல்வார்கள். கொடுக்கிற கை சுருங்காது. கொடுத்துக்கொண்டே தான் இருக்கும். என்னிடம் பணம் இல்லையே எப்படிக் கொடுக்க முடியும் அப்படி ஓர் எண்ணம் எழவே எழாது. கொடுப்பதற்கு என்னிடம் என்ன இருக்கிறது என்ற தேடல் வரும். முடிவில் ஒன்றுமே இல்லையா என் தலையைக் கொண்டுபோய்  தம்பியிடம் கொடுத்து பொருள் பெற்றுக்கொள்ளுங்கள் என்று குமண வள்ளல் சொன்னதை போன்று   தன்னையே கொடுக்க முடிவெடுக்க வைக்கும். இல்லை என்ற சொல்  மேன்மக்கள்  வாயிலிருந்து வரவே வராது. ஓர் ஆற்றில் மழைக்காலத்தில் நிறைய தண்ணீர் ஓடுகிறது. மழை இல்லாத காலங்களில்...? நீருக்கு எங்கே போவது? வறட்சியான காலகட்டத்தில் ஆறு வற்றிப் போகும். ஆற்று மணலில் கால் வைக்க முடியாதபடி  சுடும். இனி இங்கு  தண்ணீர் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்திருப்போம். கண்முன்னே கானல் நீர் பறந்து பறந்து பம்மாத்துக் காட்டும். ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கை.  ஆற்று மணலைத் தோண்டுகிறோம். என்னவொரு ஆச்சரியம்.! நீரூற்று தென்பட மனதிற்குள் மகிழ்ச்சி. நம் தா...

நான் வேலைக்குப் போறேன்

நான் வேலைக்குப் போறேன்  எனக்கு வேலை கிடைத்திருக்கிறது... எனக்கு வேலை கிடைத்திருக்கிறது .." பாலாவிற்கு உரக்க கத்த வேண்டும் போல இருந்தது. எத்தனை ஆண்டுகள் இதற்காக காத்திருந்திருப்பாள்.? காத்திருந்திருப்பாள் என்பதைவிட ஏங்கியிருப்பாள்? இனி எனக்கு வேலையே கிடைக்காதோ என்று அம்மாவிடம் சொல்லிச் சொல்லி அழுதிருப்பாள். நான் ஒரு ஆக்கம் கெட்டவள் என்று சொல்லிச் சொல்லி புலம்பியிருப்பாள். எல்லாவற்றையும் அவள் கையில் வைத்திருக்கும் ஒற்றை கவர் மாற்றிவிட்டது. ஆம்....அவள் கையிலிருக்கும் கவரில்தான் அவள் தலையெழுத்தை மாற்றி எழுதிய லட்டர் இருக்கிறது. கவரைத் திருப்பித் திருப்பி பார்த்தாள். கண்களில் ஒற்றிக் கொண்டாள். கண்களில் திரண்டு நின்ற கண்ணீர்த் துளிகள் கவரில் விழுந்து இனி இந்தக் கண்ணீர்த் துளிகள் உனக்குரியவை அல்ல என்பதுபோல  காணாமல்  போனது இனி நாளும் எனக்கு மகிழ்ச்சி தான். நான் விரும்பிய  ஆடை வாங்கி அணியலாம். சுதந்திரமாக இருக்கலாம். எதற்காகவும் யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை. இனி யாரும் என்னை ஒரு கேள்வி கேட்க முடியாது.... நான் சுதந்திரப்பறவை....என்று  என்னென்னவோ கற்பனையில் மிதந்தாள். க...