Posts

Showing posts with the label சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும்-மூதுரை

சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும்

சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும்  ஒரு பொருளின் தரம் என்பது அதன் உருவத்தைப் பொருத்ததல்ல. அதன்  பயன்பாடு மற்றும் செயல்பாடு  இவற்றை வைத்துதான்   அவற்றின் தரம் நிர்ணயிக்கப்படும்.  யாரையும் உருவத்தைப் பார்த்து  மதிப்பீடு செய்ய வேண்டாம். அவர்களின் செயல்பாடுகளைப் பார்த்து மதிப்பீடு செய்யுங்கள். இதைத்தான் வள்ளுவரும் "உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு  அச்சாணி அன்னார் உடைத்து" என்று சொல்லியிருப்பார். உருவம் சிறிதாக இருக்கும் அச்சாணி கூட பெரிய தேர் சரிந்துவிடாமல் தாங்கிப் பிடிக்கும் திறன் கொண்டது. அதுபோல உருவம் சிறிதாக இருக்கும் மனிதர்களும் பெரிய காரியங்களைச் செய்யும் திறன் பெற்றவர்களாக இருப்பர். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்ற பழமொழி சொல்லும் உண்மையும் இதுதான். எங்கே? யார் ?எப்படி இருக்கிறார் என்பது முக்கியமல்ல. அவருடைய செயல்பாடு எத்தனைபேர் பயன்படும்படி அமைந்துள்ளது. எந்த நேரத்தில் அவர் பயனுள்ளவராக  இருந்தார் என்பதுதான் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். இதைத்தான் ஔவையும், மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம் உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா ...