உண்பது நாழி உடுப்பவை இரண்டே...
உண்பது நாழி; உடுப்பவை இரண்டே... உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க வீடும் இருந்தால் போதும். இந்த மூன்றும் மனிதனின் அத்தியாவசிய தேவைகளாகும். இந்த மூன்று தேவைகளையும் நிறைவு செய்வதற்குதான் மனிதன் ஓடி ஓடி உழைக்கிறான். ஆனால் இந்த மூன்றும் கிடைத்தால் போதும் என்று நாம் திருப்திப்பட்டுக் கொள்கிறோமா? ஆடம்பரங்களை நோக்கி நம் கண்கள் அலை பாயும். முதலாவது ஏதோ இருப்பதற்குச் சொந்தமாக ஒரு வீடு இருந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்போம். சொந்தவீடு கட்டியாயிற்று. இப்போது கண்கள் அங்குமிங்கும் தேடும்.அந்த வீட்டைப் போல் கட்டியிருக்கலாமோ? இந்த வீட்டைப்போல் கட்டியிருக்கலாமோ? இரண்டு மாடி எழுப்பி இருக்கலாமோ? என்று எதிலும் ஒரு திருப்தி இல்லாத மனநிலையிலேயே இருப்போம். உடை விசயத்திலும் இதே நிலைதான். ஆடம்பரங்களை நோக்கிய பயணம்தான் நம்மை இருக்கவிடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது. நாளொரு உடை தேவையாக இருக்கிறது. ஆனால் அந்த உடை ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. எளிமையாக இருந்தால் போதும் என்று மனம் ஏற்றுக் கொள்கிறதா?இல்லையே.. ஒருவன் உலகம் முழுவதையும் பிறருக்கு இல்லாமல் தனக்கே உரியதாக தன் வெண்கொற்றக் ...