Posts

Showing posts with the label ...

மாதம் மும்மாரி பொழிகிறதா?

Image
  மாதம் மும்மாரி பொழிகிறதா? அரசர்  ஒருவர் நாட்டை நல்லமுறையில் ஆட்சி செய்து வந்தார்.ஒவ்வொரு நாளும் நாடு எப்படி இருக்கிறது? நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா? என்று கரிசனமாக  கேட்டுவிட்டுத்தான் தன்  அலுவல்களையே தொடங்குவார். அன்றும் அப்படித்தான்.  அரசவைக்கு வந்தார் மன்னர். அரசவை கூடியது.  "நாடு எப்படி இருக்கிறது ? என்று அமைச்சரிடம் கேட்டார். அதற்கு அமைச்சர், "மன்னா!வணக்கம். நாடு நன்றாக இருக்கிறது . மாதம் மும்மாரி பெய்வதால் நாட்டு மக்கள் எல்லாம் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் "என்றார் பெருமையாக. "மாரி கேள்விப்பட்டிருக்கிறேன் . ஒரு மாறி...  உருமாறி கேள்விப்பட்டிருக்கிறேன். பொன்மாரி, புகழ்மாரி, அருள்மாரி என்று புலவர்கள் வாயால் புகழ்மொழி மாதிரி மாதிரியாகக் கேட்டிருக்கிறேன். இது என்ன புது மாதிரியான மும்மாரி? "என்று கேட்டார் மன்னர். மன்னரிடமிருந்து இந்தக் கேள்வியை எதிர்பார்க்காத அமைச்சருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. "சும்மா ....நல்ல மழை பெய்கிறது என்பதைத்தான் இந்த மாதிரி  சொல்லி வைத்தேன் "என்று ஏதோ ...