தொல்காப்பியர் கூறும் ஆறறிவு
தொல்காப்பியர் கூறும் ஆறறிவு அறிவு என்றதுமே மனிதனுக்கு மட்டுமே உரியது. வேறு எந்த உயிருக்கும் அறிவு என்பதே கிடையாது என்று நாம் நினைக்கிறோம். அதனால்தான் வேறு விலங்குகளையோ உயிர்களையோ ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. செடிக்கு உயிருண்டு என்று படித்திருக்கிறோம். ஆனால் இலைகளைப் பறித்து வீசிக் கொண்டே செல்வோம். அவற்றிற்கும் உணர்வு உண்டு என்ற சிந்தனையே மனதில் இருக்காது. நாயைக் கண்டதும் கல்லை எடுத்து வீசுவோம். நாய் பேச முடியாததால் அதற்கு என்ன அறிவு இருக்கப்போகிறது என்று மட்டமாக நினைத்துக் கொள்வோம். ஒரு செயலுக்கு எதிர்வினை ஆற்றும் திறன் இருந்தாலே அந்த உயிருக்கு அறிவு இருக்கிறது என்றுதானே கருதப்பட வேண்டும். ஆனால் நாம் என்ன நினைக்கிறோம்? படித்தால் மட்டுமே அறிவு பெற முடியும். படிப்பறிவு பெற்றவர்கள் மட்டுமே அறிவுடையவர்கள். புத்தகம் வாசிக்கத் தெரியாதவர்கள் அறிவற்றவர்கள். பணம் பண்ணத் தெரிந்தவர்கள் அறிவுடையவர்கள். நல்ல பதவியில் இருப்பவர்கள் மேலான அறிவுடையவர்கள் என்று அறிவுக்கும் அறிவின்மைக்கும் ஒரு வரம்பு வைத்திருக்கிறோம். மனிதர்களையே ஒரு சாரார் அறிவற்றவர்கள் என்று நாம் ஒதுக்கி வைத்...