நவில்தொறும் நூல்நயம் போலும்....
நவில்தொறும் நூல்நயம் போலும்.... " நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு" குறள் : 783 நவில்தொறும்- படிக்கும் தோறும் நூல் - நல்ல நூல் நயம் - இன்பம் தருதல் போலும்- போன்றது பயில்தொறும்- பழகப் பழக பண்புடையாளர்- நற்குணமுடையவர் தொடர்பு - நட்பு படிக்கப் படிக்க இன்பம்தரும் சிறந்த நூலைப் போல பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையவர்களோடு கொண்ட நட்பு. விளக்கம் : ஒரு நல்ல நூலைப் படிக்கிறோம். படித்த மாத்திரத்திலேயே அதன் முழு பொருளையும் நம்மால் அறிந்துகொள்ள முடியாது. திரும்பத் திரும்பப் படிக்கும் போதுதான் அந்த நூலின் பொருளை முழுமையாக உணர முடியும். சொல்லாட்சித்திறன்,அணிநலன் யாவற்றையும் உணர்ந்து அந்த நூலைப் பற்றிய பெருமையையும் சிறப்பையும் நம்மால் உணர முடியும். அது போன்றுதான் நல்ல பண்புடையவர்களுடைய நட்பும் இருக்கும். பார்த்த மாத்திரத்திரத்திலேயே அவர்களைப் பற்றி நம்மால் முழுமையாக உணர்ந்துகொள்ள முடியாது. பழகப் பழகத்தான் அவர்களுடைய நல்லியல்பை நம்மால் முழுமையாக புரிந்து கொள்ள முடியும். ...