கண்ணதாசனுக்கு வளையிட்டப் பாடல்
கண்ணதாசனுக்கு வளையிட்டப் பாடல் " பத்தாயிரம் கவிதை முத்தாக அள்ளி வைத்த சத்தான கம்பனுக்கு ஈடு இன்னும் வித்தாகவில்லை என்று பாடு"என்பார் கண்ணதாசன் இந்தப் பத்தாயிரம் மட்டும்தானா.? இன்னும் உண்டு சத்தானப் பாடல்கள். தனிப்பாடல் திரட்டிலிருந்து கம்பர் முத்தாக அள்ளி வைத்த பாடல்கள் பல உண்டு. அவற்றிலிருந்து இதோ உங்களுக்காக ஒரே ஒரு பாடல். தன் மகள் காதல் வயப்பட்டு விட்டாள். அதனால் அவள் உடல் மெலிந்தாள்.கைவளை கழன்று காணாமல் போனது. இதற்குக் காரணம் யார்? யாரைப் பார்த்தாள்? யார் மீது காதல் கொண்டாள்? வேறு எங்கும் செல்லவில்லையே...அப்படியானால்.... அப்படியானால்.... யாராக இருக்கும்? தாயின் மனம் கலக்கத்தில் கண்டபடி ஏதேதோ புலம்பத் தொடங்குகிறது. அன்றொருநாள் அவள் பார்த்த அவன் அவனேதான். அவன் ஆகத்தான் இருக்க வேண்டும் . யாராக இருக்க வேண்டும் என்கிறாள்? தாய் தன் மகளின் காதல் பற்றிச் சொல்கிறாள். கேளுங்கள். தவளை தத்திப் பாயும்போது தவளையின் கால்கள் பூவில் பட்டு அதில் இருக்கு தேன் மழைபோல் கீழே சொரியும் . அப்படிப்பட்ட வளமுடைய பொன்னியாறு பாயும் வளநாடு. அங்கு மாதத்தன் என்பவ...