பூரணி
பூரணி எது வரைக்கும் இந்த நாடகம் ? ஒன்றுமே புரியவில்லை . இன்று முடிவுக்கு வரும் நாளை முடிவுக்கு வரும் என்று ஓரளவு நானும் சமாளித்துத்தான் பார்த்தேன். ஆனால் முடிவதாகத் தெரியவில்லை. போதும் போதும் என்றாகி விட்டது. இதற்கு மேலும் இப்படியே போய்க் கொண்டிருந்தால் .... இதற்கு என்னதான் வழி ? வீட்டிற்கு வந்தால் நிம்மதி இல்லாமல் தவிப்பது போன்ற உணர்வு. அலுவலகத்தில் இருக்கும்வரை வீட்டு நினைப்பே வராது. வீட்டிற்குப் புறப்படும்போது கூடவே பரபரப்பும் தேவை இல்லாத கவலைகளும் வந்து தொற்றிக் கொள்ளும். தேவை இல்லாத கவலையா... நான்தான் அதிகப்படியாக அதைப் பற்றிய சிந்தனைகளை மனதில் போட்டுக் கொண்டு என்னையே வருத்திக் கொண்டிருக்கிறேனா ? எனக்குள்ளேயே எப்போதும் ஒரு போராட்டம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். தீர்வுதான் கிடைத்தபாடில்லை. இன்றும் அப்படித்தான் காலையில் அலுவலகம் புறப்படும் முன்னர் வெளியில் வந்து பைக்கைத் துடைத்துக் கொண்டிருந்தேன். எதிர் வீட்டு அண்ணி அலுவலகத்திற்குச் செல்ல வீட்டைவிட்டு வெளியே வந்தவர்கள் என்னைப் பார்த்...