யானைகள் எத்தனை?
யானைகள் எத்தனை? நானும் என் தம்பியும் ஓய்வு நாளை மகிழ்ச்சியாகக் களிப்பதற்காக காட்டிற்குச் சென்றோம். போகும் வழி எங்கும் உள்ள காட்சிகளைப் படம் பிடித்தபடி நடந்தோம். தொலைவில் யானைகள் கூட்டமாக வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அப்படியே கிலிபிடித்தபடி என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டான் என் தம்பி. ஒருபோதும் இத்தனை யானைகள் கூட்டமாக வருவதை நானும் பார்த்ததில்லை. எனக்கும் உள்ளுக்குள் உதறல் எடுத்தது. என்ன செய்வது? இருவரும் ஓடி விடலாமா என்று ஒரு கணம் நினைத்தோம். இருந்தாலும் காட்டைச் சுற்றிப் பார்க்காமல் அப்படியே திரும்பிச் செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று ஒரு அசட்டுத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, "தம்பி வா! இந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொள்வோம். யானைகளால் மரம் ஏற முடியாது. அதனால் பத்திரமாக யானைகள் கடந்து போகும் வரை நாம் மரத்தின் மேல் இருந்து கொள்ளலாம். .அதோடு மரத்தில் இருந்தபடி யானைகள் எங்கே போகின்றன? என்ன விளையாட்டு காட்டுகின்றன என்பதையும் கண்டு மகிழலாம் "என்றேன். "உண்மையாகவே யானைக்கு மரம் ஏறத்தெரிய...