முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
முட்டுவேன் கொல் தாங்குவேன் கொல் காத்திருப்பதை மாதிரி கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது. காத்திருக்கும் போது ஒவ்வொரு வினாடி கழிவதும் ஒரு யுகம் கழிவது போல இருக்கும். சாதாரணமாக ஒரு பேருந்து நிலையத்தில் காத்திருக்கிறோம். ஒரு அரைமணி நேரம் பேருந்து வரவில்லையென்றால் போதும். ஒரு மாதிரியாக அங்குமிங்கும் நெளிய ஆரம்பித்துவிடுவோம். கூடவே இந்தப் பாழாய்ப் போன பேருந்து எங்கே போய் தொலைந்தது என்று பேருந்துக்கு அர்ச்சனை செய்யக் தொடங்கி விடுவோம். மணிக்கணக்கில் தொலைக்காட்சி முன் இருப்போம். ஆனால் எதிர்பார்ப்போடு யாரோ ஒருவருக்காகக் காத்திருக்கும்போதுதான் அது நடைபெறாமல் போய்விடுமோ ஏமாந்து போய்விடுவோமோ என்ற நினைப்பு வந்து எட்டிப்பார்த்து நம்மைப் புலம்ப வைக்கிறது. நாலு மணிக்கு வருகிறேன் என்று சொல்லிச்சென்ற கணவர் நாலரை வரை வரவில்லை என்றால் ஒருமாதிரி அலைமோதுவோமே அந்த அலைமோதல் புலம்பல் எல்லாம் பார்ப்பவர்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். அந்த வலியை உணர்ந்தவர்களுக்குத்தான் அந்த நேரத்தின் கொடுமை புரியும். மனம் தப்புத் தப்பாக கணக்குப்போடும். இதுக்குப் போய் இந்த அட்டு அலட்டுறாளே என்ற...