காளமேகத்தின் கணக்கு
காளமேகத்தின் கணக்கு இறைவனை தொழுவதற்கு உகந்த நேரம் எது? அதிகாலை நேரம். அதுதான் இறைவனைத் தொழுவதற்கு உகந்த நேரம் அமைதியான அந்தக் காலைப் பொழுதில்தான் மனதை ஒருமுகப்படுத்தி பிராத்தனையில் ஈடுபட முடியும் .வெளியுலக குறுக்கீடு எதுவும் இல்லாத அமைதியானச் சூழல் பிராத்தனைக்கு ஏற்ற நேரம். ஆனால் வேலை வேலை என்று சதா கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஓடுகிறவர்களுக்கு கடவுளைத் தொழ நேரம் கிடைப்பதே அரிதாக இருக்கிறது. இன்றைய அவசர உலகில் எதற்குமே நேரம் கிடைப்பதில்லை. ஆளுக்கொரு சாக்கு போக்குச் சொல்லி ஓடிக்கொண்டே இருக்கிறோம். இறைவனைத் தொழுவதற்கு கால நேரம் எதற்கு? எந்த நேரத்திலும் தொழலாம். எங்கும் தொழலாம். கிடக்கிற நேரத்தில் இருக்கிற இடத்திலிருந்து தொழலாம். ஆனால் எல்லோரும் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கான இடமுண்டு. சரியான நேரமும் உண்டு என்று நம்புகின்றனர்.அவர்கள் நம்பிக்கை சரியானதா? அதனால் இன்று இதற்குகான ஒரு தீர்வு கண்டே ஆக வேண்டும் என்று மனம் விரும்பியது. யாரிடம் போனால் இதற்குத் தீர்வு கிடைக்கும் ? ஔவையிடம் போனால் சரியான தீர்வை...