தாலாட்டு
தாலாட்டு பாட்டு ஆராரோ ஆரிராரோ-என் ஆனந்தமே ஆராரோ ஆடிவரும் பூங்காற்றோ _ எம்மை ஆளவந்த மகராசரோ ஆராரோ ஆராரோ _ என் ஆனந்தமே ஆராரோ பாட்டி மடியினிலே பஞ்சு மெத்தை தொட்டினிலே தாத்தா வருமுன்னே தங்கமே நீ கண்ணுறங்கு! முத்தமிழே செங்கரும்பே மூடி வைத்த நறுந்தேனே செல்லமே என் சிங்கராசாவே சிணுங்காமல் நீயுறங்கு! அன்னமே என் அழகு ரதமே அம்புலியே அதிசயமே அம்மான் தந்த தொட்டிலிலே செம்மாந்து நீயுறங்கு! ஆராரோ ஆராரோ_ என் ஆனந்தமே ஆராரோ ஆடிவரும் பூங்காற்றோ_ எம்மை ஆள வந்த மகராசரோ ஆராரோ ஆராரோ _என் ஆனந்தமே ஆராரோ அம்மா வரும் வரையில் ஆச்சி துணை இருந்திடுவேன் ஆடிவரும் தூலிகையில் அரசன்போல் நீயுறங்கு! புட்டிப்பால் தருவாரோ போக்குக் காட்டி வைப்பாரோ பொழுதுமட்டும் கலங்காமல் பொன்மகனே நீ கண்ணுறங்கு! அம்மா குரல் கேட்க அலைபேசி அருகில் வைப்பேன் அன்னமே என் அழகு ரதமே அது கேட்டு நீயுறங்கு! ஆராரோ ஆராரோ_என் ஆனந்தமே ஆராரோ ஆடி வரும் பூங்காற்றோ_ எம்மை ஆள வந்த மகராசரோ ஆராரோ ஆராரோ _ என் ஆனந்தமே ஆராரோ கலையே என் காவியமே _ உன்னைக் கன்னமிட்டுச் செல்லாமல் கண்ணுக்குள்ளே வைத்திருப்பேன் கனவு கண்டு நீயுறங்...