முயற்சியும் பயிற்சியும்
முயற்சியும் பயிற்சியும் முயற்சியும் பயிற்சியும் வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லும் இரு வண்டிச் சக்கரம் போன்றது. இரண்டும் சீராக இயங்க வேண்டும். அப்போதுதான் வண்டி நிர்ணயிக்கப்பட்ட இடத்தைச் சென்றடைய முடியும். முயற்சி செய்துவிட்டு பயிற்சி செய்யாமல் விட்டுவிட்டால் அதனால் பயனில்லை. பயிற்சி செய்துவிட்டு அதை நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்தால் தானாக எந்த முன்னேற்றமும் வீட்டுக் கதவை வந்து தட்டாது. நம்மில் பலர்செய்யும் பெரிய தப்புகளுள் ஒன்று இதுதான். ஒன்றைக் கையில் எடுத்து மாங்குமாங்கென்று உழைப்போம். இன்னொரு புறத்தை எட்டிப் பார்ப்பதே இல்லை. அதனால் நமக்கு வர இருந்த வாய்ப்பு வராமலே போய்விடும். எனக்குத் தெரிந்த ஒரு பெண் இருந்தாள். இரவு பகலாக படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாள். ஆனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வைத்துவிட்டு வேலை வரும் வரும் என்று காத்திருந்ததுதான் மிச்சம். வேலைக்காக வேறு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பத்தாண்டுகளுக்கு மேலாக வேலை கிடைக்கவில்லை. நன்றாக பயிற்சி செய்து வெற்றி கொண்டாள். அதற்கு மேற்பட்ட எந...