ஒத்த ரூபாயும் ஓமப்பொடியும்
ஒத்த ரூபாயும் ஓமப்பொடியும் அன்னக்கிளி அருணாச்சலத்தின் நாலாவது மகள். மூன்றும் பெண் பிள்ளைகளாகப் பிறந்ததால் நாலாவதாவது ஆண் பிள்ளையாக இருக்கும் என்று எதிர் பார்த்தார் அருணாச்சலம். நாலாவதும் பெண் பிள்ளையாக பிறந்ததால் அப்படியே நொடிந்து போய்விட்டார். இதனால் அன்னக்கிளி பிறந்த அன்று வீட்டை விட்டே ஓடி விட்டார்.மாதக்கணக்காக எங்கோ வெளி ஊரில் இருந்துவிட்டு வந்தவர் அன்னக்கிளி முகத்தைக்கூட பார்க்கவில்லை. தாய்க்கும் இவள் வந்த நேரத்தில் தன் கணவர் வீட்டை விட்டு சென்று விட்டாரே என்று ஒரு கவலை இருந்தது. அதனால் அன்னக்கிளிக்கு மற்ற பிள்ளைகளுக்கு கிடைக்கக் கூடிய அளவு அன்பு கிடைக்கவில்லை. அவளும் அது வேண்டும் ...இது வேண்டும் என்று அம்மாவிடம் எதுவும் கேட்பதில்லை. ஒருநாள் பக்கத்து வீட்டு லட்சுமி ஓமப்பொடி வாங்கி வைத்து சாப்பிட்டுக் ...