Posts

Showing posts with the label கண்ணான கண்ணே-மகளிர் தின கவிதை

கண்ணான கண்ணே....

Image
கண்ணான கண்ணே.... கண்ணான கண்ணே ! கண்ணான கண்ணே! கண்ணில் வைத்து கொஞ்சிட வைத்தாய் கள்ளம் தவிர்த்து மெல்லச் சிரித்தாய்- பெண்ணே பேதை என்றழைக்க வைத்து பெருமிதம் தந்தாய்! வளர்ந்தாய் கால் தறித்திட மறுத்தாய்  விளையாட்டே உலகமென நினைத்தாய்  விளையாட்டுக்காட்டி வீதிக்கு இழுத்தாய்- பெண்ணே பெதும்பையாய்ப் பேரன்பு செய்தாய்! உணர்ந்ததை உரையாய் உதிர்த்தாய் உன்னில் என்னைக் கட்டியே வைத்தாய் மமதையில் மனமதைக் கவர்ந்தாய்- பெண்ணே மடந்தையாய் எம் மனதினில் நிறைந்தாய்! மாசிமாத கொண்டலாய் வலம் வந்தாய் மாலை நேரத் தென்றலாய் இதம் தந்தாய்  மயங்கிட வைத்து மனமதை துவைத்தாய்- பெண்ணே மங்கையாகி மலர்ந்து மணம் தந்தாய்!  இல்லறம் புகுந்தாய் நல்லறம் வகுத்தாய் இமையாய் இருந்து எம்மைக் காத்தாய் இல்லமெங்கும் மகிழ்வால் நிறைத்தாய்- பெண்ணே அரிவையாகி அன்பால் எம்பால் கலந்தாய்!  உலக விழுமியம் சொல்லித் தந்தாய்  உன்னில் எம்மை கண்டிட வைத்தாய்-    உலகொடு உடன்  நடைபயின்றாய்- பெண்ணே  தெரிவை யானென்று  தெரிய வைத்தாய்! ஊராண்மையோடு வீட்டாளுமை செய்தாய் பேராண்மையில் பேருவகை கொண்டாய் போராளியாய்ப் ...