Posts

Showing posts from April, 2021

ஆகாறு அளவிட்டி தாயினுங்....

  ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை... " ஆகாறு அளவிட்டி தாயினுங்  கேடில்லை போகாறு அகலாக் கடை "                    குறள்   :  478 ஆகாறு - பொருள் வருகின்ற வழி அளவு - அளவில் இட்டிது _ சிறியது ஆயினும் - இருந்தாலும் கேடு - துன்பம் இல்லை- வருவதில்லை போகாறு - பொருள் போகும் வழி அகலாக் கடை - பெரியதாக இல்லாதிருந்தால் பொருள் வரும் வழி சிறிதாக இருந்தாலும்  போகும் வழி விரிவுபடாமல் இருந்தால் அதனால் எந்தக் கேடும் வரப்போவதில்லை. விளக்கம் :  வரவுக்கு அதிகமாக செலவு செய்யக் கூடாது. ஈட்டும் பொருளைவிட செலவு அதிகமாக இருக்கக் கூடாது. அப்படி இருந்துவிட்டால்... வரவு எட்டணா செலவு பத்தணா ....கடைசியில் துண்டணா...துண்டணா என்ற கதையில் வந்து நிற்கும். இதைத்தான் ஔவையும்  ஆனமுதலில் அதிகம் செலவானால் மானமழிந்து மதிகெட்டு .........போக வேண்டியிருக்கும் என்றார். ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும். வருமானம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை. செலவு பெருகிவிடக் கூடாது. வருமானத்திற்குள் செலவு இருக்கும்படி திட்டமிட்டு செயல் பட்டால் ஒருநாளும...

களவு போன கனவு

          களவு போன கனவு வீட்டின் ஒரு மூலையில் கண்மூடி கிடந்தேன். ஏதேதோ நினைவுகள் வந்து என்னென்னவோ பேச ஆரம்பித்தன. வேண்டாம்....போதும்...போதும்.. என்று உரக்க கத்த வேண்டும் போல் இருந்தது. இனி உரக்க கத்தி என்ன பயன் ? கத்துவதற்கு வார்த்தைதான் வருமா ? எத்தனைமுறை அம்மாவையும் தங்கைகளையும் உரக்க பேசி வாயை மூட வைத்திருப்பேன். எதற்கெடுத்தாலும் எதிர்த்துப் பேசுவது... யார் என்ன சொன்னாலும் ஏற்பதில்லை.... தான் சொல்லுவது மட்டும்தான் சரி என்ற ஆணவப் போக்கு. அந்த பேச்சு ...ஆணவம்....எல்லாம் ஒரே நாளில் மொத்தமாய் அடங்கிப் போயிற்று.. வேலைக்குப் போகிறோம் என்று எவ்வளவு துள்ளலாக புறப்பட்டு வந்தேன். முதல்முறையாக தான் சுயமாக சம்பாதிக்கப் போகிறேன்....அப்பப்பா இனி ஒரு சேலை எடுப்பதற்கு அம்மாவிடம் கெஞ்ச வேண்டியதில்லை. நினைத்த நேரத்தில்... நினைத்த கலரில் வாங்கிக் கொள்ளலாம். யாரும் ஏன்? எதற்கு என்று கேட்க முடியாது. எத்தனை எத்தனை கற்பனைகள். எவ்வளவு எதிர்பார்ப்புகள்.... எல்லாம் பொசுக்கென்று தீயின் முன் இருக்கும் தாள் போல கருகி காணாமல் போனது. இப்படி ஒரு வேலை என்று ந...

எதுகை என்றால் என்ன?

  எதுகை என்றால் என்ன ?  கவிதைக்குப் பொய்யழகு என்று கேட்டிருக்கிறோம். அப்படியானால் பொய்யாக எழுதினால் மட்டும்தான் கவிதையாகுமா? என்ற ஒரு ஐயம் எழலாம். இது பாடலின் அழகுக்காக எழுதப்பட்ட வரி. பொய்யழகு என்பது இல்லாத ஒன்றை கற்பனையாகப் புனைந்து எழுதுவது. கவிதை அழகாக இருக்க வேண்டுமானால் பொய்யான கற்பனைகளைக் கூட்டி எழுத வேண்டும். பொய்யான கற்பனைகளை மட்டும் புகுத்திவிட்டால் கவிதை அழகாகி விடுமா?  இல்லை....இன்னும் சில அழகுபடுத்தும் உறுப்புகளைக் கவிதையில் புகுத்த வேண்டும். அவற்றுள் மிக முக்கியமான ஒன்று எதுகை. எதுகை இல்லாமலும் கவிதை எழுதலாம். தப்பில்லை. சொல்ல வந்த கருத்து புரிந்தால் போதுமானது. ஆனால் இன்னும் கூடுதல் கவனத்தைப் பெறுவதற்காக எதுகை, மோனை போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம்.கவிநயம் கூடுகிறது.   எதுகை என்றால் என்ன? ஒரு சீரில் இரண்டாவது எழுத்து ஒன்றி  வருவது எதுகை எனப்படும். எடுத்துக்காட்டாக , ப ஞ் சம் ம ஞ் சம் த ஞ் சம் வ ஞ் சம் எல்லா எழுத்துக்களிலும் இரண்டாவது எழுத்து ' ஞ்'   வந்துள்ளது இப்படி இரண்டாவது எழுத்து ஒன்றிவருவது எதுகையாகும். இப்போது நம் மனதில் இரண்டாவது எழ...

கொண்டானைக் கொல்லும் படை

கொண்டானைக் கொல்லும் படை மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள். இந்த வரம் எல்லோருக்கும் நினைத்தபடி வாய்த்திடுவதில்லை. மனைவி சரியாக  அமையாமல் தடுமாறும் குடும்பங்கள் ஏராளம். நித்தம் நித்தம் சண்டை . எதற்கெடுத்தாலும் கோபம். நான் எல்லாம் சமைக்க மாட்டேன். வேண்டும்  என்றால் கடையில் வாங்கி தின்போம். இப்படி வீட்டில் சமைக்காமல் கடையிலேயே வாங்கித் தின்று நாளையும் பொழுதையும் கழிக்கும் காலம். ஏட்டிக்குப் போட்டி பேசி மல்லுக்கட்டி நிற்கும் பெண்கள் அதிகமாகி வரும் காலம். பெண்ணுரிமை ...பெண்ணுரிமை என்று சொல்லி உரிமை எது ? கடமை எது என்பதுகூட பல நேரங்களில் புரியாமல் போய்விடுகிறது. உரிமைக்காக குரல் கொடுக்கிறோம் என்று சொல்லி நம் கடமைகளைச் செய்யாமல் விட்டு விடுகிறோம். கடமை தவறும்போது என்ன நிகழும் ?  கண்ட கண்ட பட்டங்கள்தான் வந்து சேரும். நாலடியாரில் ஒரு பாடல் வருகிறது.  அதில் பெண்ணைப் பார்த்து கூற்றம், பிணி, பேய் என்று கூறப்பட்டுள்ளது. பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள்...நான் பேயா...நான் பேயா... என்று நாலடியார் பாடலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்போல்  தோன்றுக...

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல்...

  இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல்...... " இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே  ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல் "                                 குறள் : 415 இழுக்கல் - வழுக்குதல் உடையுழி - ஏற்பட்டபோது ஊற்றுக்கோல் - ஊன்றுகோல் அற்றே - அது போன்றது ஒழுக்கம் - நன் நடத்தை உடையார்  - உடையவர் வாய்ச்சொல் - வாய்மொழி, சொல் வழுக்கும் தன்மை கொண்ட  சேற்று நிலத்தில் நடக்கும்போது ஊன்றுகோல்  உதவுவதுபோல  ஒழுக்கமுடைய சான்றோரின்  வாய்ச்சொல்  இடுக்கண் நேரும்  காலங்களில்  உதவியாக இருக்கும். விளக்கம் :  வழுக்குதல் உள்ள இடங்களில் கால் வைக்கும் போது கால் வழுக்கி நாம்  கீழே விழ நேரிடலாம். அத்தகைய நேரங்களில் கையில் ஒரு ஊன்றுகோல் இருக்குமானால் அது நம்மைக் கீழே விழுந்து விடாதபடி காப்பாற்றிக் கொள்ள உதவியாக இருக்கும். அதுபோல வாழ்க்கையில் சில  நெருக்கடியான காலங்களைக் கடந்து போக வேண்டியிருக்கும். இதனை நாம் எப்படி கடந்து போவது என்று அஞ்ச வேண்டாம். எந்த நெருக்கடியான காலங்களிலும் எப்படி ...

அம்மா சொன்ன அந்த வார்த்தை

அம்மா சொன்ன அந்த வார்த்தை காலையில் பள்ளிக்குச் செல்ல தயாராகும் நேரம். அம்மாக்கும் அப்பாவுக்கும் சண்டை. பெரிதாக சண்டைகள் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை. அப்பப்போ சீசனல் சண்டை வரும். நிலக்கடலை சீசனில் நிலக்கடலை மூட்டைகள் விற்ற பணம் எங்கே?  இப்படி ஒரு சண்டை கண்டிப்பாக இருக்கும். வற்றல் சீசனில் வற்றல் விற்ற  பணம் எங்க போச்சு ? இந்தப் பிள்ளைகளுக்கு ஏதாவது தங்கம் வாங்கி வருவீரா? இப்படியே தாறுமாறாக செலவழிச்சுட்டுதான் போவீரா? இப்படி ஒரு சண்டை நடக்கும். நாங்கள் யாரும் இந்தச் சண்டைகளை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அன்றும் அப்படி ஒரு பிரச்சனைதான் ஓடிக் கொண்டிருந்தது. பாட அட்டவணையைப் பார்த்துப் பார்த்து புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்ததால் வேறு எதிலும் என் கவனம் செல்லவில்லை. ஆனால் அம்மா சத்தம் இடையிடேயே ஓங்கி வந்து காதுகளில் விழுந்து கொண்டிருந்தது. அப்பா எப்போதுமே சன்னமாகத்தான் பேசுவார். அதனால் அப்பா சத்தம் வெளியில் கேட்கவில்லை. "நான் செத்துருவேன். ...அப்போ இந்தப் பிள்ளைகளை வச்சுகிட்டு என்ன பண்ணுகிறீருன்னு பார்ப்போம்." என்ற அம்மாவின் குரல் என் காதுகளில் வந்து விழுந்தது. நான் எ...

தெய்வம் தொழாஅள் கொழுநன்....

        தெய்வம் தொழாஅள் கொழுநன்.... " தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை "                       குறள் : 55 தெய்வம் - கடவுள் தொழாஅள் - தொழாதவள் கொழுநன் - கணவன் தொழுது - வணங்கி எழுவாள் -  எழுந்திருப்பவள் பெய் - பொழிவாயாக என - என்று சொல்ல பெய்யும் - பொழியும்  மழை - மழை வேறு எந்தத் தெய்வத்தையும் தொழாமல் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயில் எழுகிறவள் பெய் என்று கட்டளையிட்டால் மழை  பெய்யும். விளக்கம் : வள்ளுவர் எந்த தெய்வத்தையும் வணங்க வேண்டாம். கணவனை மட்டுமே தொழுதால் போதும் என்று சொல்லிவிட்டாரா ?  அது எப்படி திருவள்ளுவரால் சொல்லமுடியும் ?  கடவுள் வாழ்த்து எழுதும்போது வள்ளுவர், " கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை"  என்று சொல்லியிருக்கிறார்.  அதாவது கடவுளின் திருவடிகளை வணங்காத  தலைகள் உறுப்புகளை க் கொண்டிருப்பினும்  உணர்வில்லாதவையாகவே கருதப்படும்  என்று சொன்ன வள்ளுவர் எப்படி  கடவுளை வணங்க வேண்டாம் என்று  கூ...

வள்ளுவரும் வாசுகியும்

Image
          வள்ளுவரும் வாசுகியும் திருமண வீடுகளில் தவறாமல் உச்சரிக்கப்படும் பெயர் வாசுகி. வானும் நிலவும் போல... வள்ளுவரும் வாசுகியும் போல... உடலும் உயிரும் போல... என்று வாழ்த்து இல்லாமல் இருக்காது. வள்ளுவரும் வாசுகியும் போல என்பதால் வள்ளுவரின் மனைவி வாசுகி என்பது நமக்குத் தெரியும். அவர்களுக்குள் இருந்த உறவு எப்படிப்பட்டது என்பது  பள்ளிப்பருவத்தில் தமிழாசிரியர்கள் வாயிலாக கேட்டிருப்போம். ஒரு சிலவற்றை மறந்து போயிருப்போம். நினைவூட்டலுக்காக சில செய்திகள். அந்த வாசுகி எப்படிப்பட்டவர் ? ஏன் இந்த வாசுகிக்கு இத்தனை மதிப்பு?  வள்ளுவரின் மனைவி என்பதினாலா.? இல்லை நாம் கொண்டாடும் அளவுக்கு வேறு ஏதேனும் சிறப்பு குணநலன்கள் கொண்டவரா ? இப்படி எண்ணற்ற கேள்விகள நம் மனதில்  எழலாம். நம் கேள்விகள் அத்தனைக்கும்  விடையளிப்பதுபோல தொன்மக் கதைகள் பல வாசுகியைப்பற்றி உலா வந்து கொண்டிருக்கின்றன . கொங்கணச் சித்தர் என்று ஒரு சித்தர் உண்டு. அவர் தனது கடுந்தவத்தால் எல்லா வரமும் வாங்கி வைத்திருந்தார். ஆக்கும் வரமும் அழிக்கும் வரமும் கையில் இருப்பதால் மனிதனுக்கு ...

அடியிற்கினியாளே அன்புடையாளே ....

Image
    அடியிற்கினியாளே அன்புடையாளே.... திருவள்ளுவர் என்றதும் நம் கண்முன் வந்து நிற்பது ஒன்றே முக்கால் அடி கொண்ட திருக்குறள் . ஏழு சொற்கள் கொண்டது. எந்த இடத்திலும் குறள் வெண்பாவுக்கான இலக்கண மரபை உடைக்காத சொல்லாட்சித் திறன். பார்த்துப் பார்த்துச் செதுக்கப்பட்ட வரிகள். அதிகார அமைப்பிலும் பகுப்பிலும் கடைபிடிக்கப்பட்ட ஒரு கட்டுக்கோப்பான ஒழுங்கு. இப்படி வரம்புமீறாக் கவி படைத்துத் தந்த வள்ளுவர் தன் இலக்கண  வரம்பைக் கடந்து   நான்கு வரிகளில் ஒரு பாடல் எழுதி வைத்துள்ளார். திருவள்ளுவர் நான்கு வரிகளில் பாடல் எழுதியுள்ளாரா?  ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! அந்த நான்கு வரிகளும் யாருக்காக எழுதப்பட்டது என அறிந்தால்.... வியந்து போவீர்கள். தன் காதல் மனைவி வாசுகிக்காக எழுதியதுதான் இந்த நான்கு வரிகள் கொண்ட பாடல். வள்ளுவர் தன் மனைவி வாசுகி  இறந்ததும் மனம் உடைந்து போனார். நேற்றுவரை பார்த்து பார்த்து சமைத்துத் தந்தவள். ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசாதவள். தான் தூங்கும்வரை தூங்காமல் இருந்து, கண் விழிக்கும் முன்னர் முன் வந்து நின்று பணிவிடை செய்தவள். இல்லாள் அகத்திருக்க இல்...

இல்லதென் இல்லவள் மாண்பானால்.....

  இல்லதென் இல்லவள் மாண்பானால்.... " இல்லெதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை "                       குறள் : 52 இல்லது - இல்லாதது  என் -  யாது இல்லவள் - மனைவி மாண்பு - நற்குணங்கள் ஆனால் - கொண்டிருந்தால் உள்ளது - இருப்பது என் ,- என்ன இல்லவள் - மனைவி மாணாக்கடை - சிறப்பில்லாதபோது மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? மனைவி நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன ? விளக்கம் :  இரண்டு வினாக்கள் நம்முன்  வைக்கப்பட்டுள்ளன. இல்லாள் மாண்புடையவளானால் இல்லற வாழ்வில் இல்லாதது என்ன? இல்லாள் மாண்பில்லாதவளானால் அந்த வாழ்வில் உள்ளது என்ன ?  இரண்டு வினாக்களுக்குமான விடையை நாமே உய்த்துணர வேண்டும். ஒன்றுமில்லை என்ற ஒற்றைச் சொல்லே  அவற்றிற்கான பதிலாக இருக்கும். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். நற்பண்புள்ள மனைவி எல்லோருக்கும் வாய்த்திடாது. நற்குணங்கள் கொண்ட மனைவி வாய்த்து விட்டால்.... நீங்கள்தான் பேறு பெற்றவராக இருப்பீர்கள். உங்கள் வீட்டில் ஒன்றுமில்லை என்ற  சொல்லு...

பாராட்டுமடல்

                  பாராட்டு மடல் வீச்சும் பேச்சுமென எங்கும் கோலோச்சும் வாஞ்சிபுகழ் கோநகர் நெல்லை அகத்தாய் வஞ்சமில் நெஞ்சம்கொள் குலம் பிறந்தாய் கொஞ்சுதமிழ் மங்கைமலர்   விழிதிறந்தாய்!     இல்லறத்தில் அன்பரோடு இன்பம் தந்தாய்  நல்லற சாட்சியாய் நன்மக்கள் மூவர் கண்டாய் நல்லதோர் வீணையை நாளும் மீட்டி தலைமைக்கு உகந்த தகைமையாய் உயர்ந்தாய்! ஆறேழு பள்ளிகளில் அழகுதமிழ் நடைபயின்றாய் ஆழ்ந்த புலமைமிகு ஆசானெனப் பெயரெடுத்தாய் அலையாடு  மும்பைமொழி சொந்த மொழிபோல உரையாடும்  பெரும்பேறு வாய்க்கப் பெற்றாய் !          மலரன்ன மென்மை மனதில் கொண்டாய் இதழன்ன புன்முறுவல் இதழில் வைத்தாய் இன்னாரென்று பாராது எல்லோரையும் தொட்டாய் ஒன்னாரில்லை எனும்பேரோடு  எம்மை வென்றாய்! பருவம் வந்துவிட கனிந்திடும் கனிபோல பருவகால நிகழ்வு வந்தின்று ஓய்வுரைக்க நற்பருவம் வாய்ப்பாக வந்ததென்று  எப்பருவமும் வாழ்த்துரைக்க பணிநிறைவு பெற்றாய்! தொய்வில்லா அறப்பணி குமுகப்பணியாய் தொடர்பணி யாகி தொண்டாய்த் தொடர்ந்திட இறையருள் தங்கி  நல...

தேறான்தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்....

தேறான்தெளிவும் தெளிந்தான்கண்.... "தேறான்தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் "                                    குறள் : 510 தேறான் - ஆராயாது தெளிவும் - தேர்வு செய்தலும் தெளிந்தான்கண் - ஆராய்ந்து தேர்வு செய்தவன் மாட்டு ஐயுறவும் -  ஐயப்படுதலும் தீராத - நீங்காத இடும்பை - துன்பம் தரும் - கொடுக்கும் ஒருவனை ஆராயாமல் தேர்வு செய்தலும் ஆராய்ந்து தேர்வு செய்தவன் மாட்டு ஐயப்படுதலும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். விளக்கம் : ஒருவனைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளாமல் நம்புதல் கூடாது. ஒருவன் எப்படிப்பட்டவன் என்பதை முழுமையாக தெரியாமல் நம்பி ஒரு செயலைச் செய்யச் சொல்லுதல் தீமையில்தான் முடியும். ஒருவனைப் பணிக்குத் தேர்வு செய்யும் போதோ அல்லது நண்பனாகத் தேர்வு செய்யும் போதோ அவனைப்பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்தப் பணிக்குப்  பொருத்தமானவனா அல்லது நண்பனாகத் தொடர ஏற்றவனா என்பது புரியும். நன்கு ஆராய்ந்து அதன் பின்னரே  சேர்த்துக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா  என ம...

ஈஸ்டர் முட்டையின் வரலாறு

Image
  ஈஸ்டர் முட்டையின் வரலாறு ஈஸ்டர் என்றதும்    இறைமகன் ஏசு உயிர்த்தார்   என்பதுதான் நினைவுக்கு வரும். கிறிஸ்துமஸ் என்றதும் நினைவுக்கு வருவது கிறிஸ்துவின் பிறப்பு. கூடவே கிறிஸ்துமஸ் தாத்தாவும்  நினைவுக்கு வருவார். கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுப் பொருட்கள் கொண்டு வருவார் என்று குழந்தைகள் தூங்காமல் காத்திருப்பர். அதுமட்டுமா....கிறிஸ்துமஸ் என்றால்   கேக் இல்லாமலா...என்ற கேள்வியும் எழும். வகைவகையான கேக் தயாரித்து  உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வதில்தான் பண்டிகை கால மகிழ்ச்சியே இருக்கிறது.  கிறிஸ்துமஸ் என்றால் கேக் என்பதுபோல  ஈஸ்டர் என்றதும் நினைவுக்கு வருவது முட்டை.   ஆனால் இந்த முட்டைகளைக் கொடுத்து "இயேசு உயிர்த்தெழுந்தார் "என்று வாழ்த்துச் சொல்லியிருக்கிறோமா என்றால்... இல்லை என்பதுதான் பலரின் பதிலாக இருக்கும்.  ஏன் முட்டையைக் கொடுத்து வாழ்த்துச் சொல்ல  வேண்டும் என்கிறீர்களா?  ஈஸ்டர் நாளின் சிறப்பே  முட்டையில்தாங்க இருக்கிறது.  இந்த ஈஸ்டர் முட்டையில் பெரிய வரலாறே  அடங்கியிரு...

செல்லாமை உண்டேல் எனக்குஉரை....

செல்லாமை உண்டேல் எனக்குஉரை... " செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை "                               குறள் :           1151 செல்லாமை _  செல்லாதிருத்தல் உண்டேல் -      இருப்பதானால் எனக்கு -          என்னிடத்தில் உரை   -           சொல் மற்று   -          அவ்வாறன்றி நின்   -              உனது வல்          - விரைவாக வரவு    -   வருகையை வாழ்வார்க்கு -  உயிர் வாழ்பவர்க்கு உரை -         சொல் பிரிந்து செல்லாதிருப்பாயானால் என்னிடம் சொல். பிரிந்து சென்று விரைந்து வருவேன் என்று கூறுவாயானால் அதுவரை உயிர்வாழ  வல்லவருக்குச் சொல். விளக்கம் :  புதிதாக இல்லறத்தில் ஈடுபட்ட தலைவனும் தலைவியும் முதன்முதலாக பிரிந்து செல்லும்போது இருக்கும...

நெல்லுக்கு இறைத்த நீர்....

Image
நெல்லுக்கு இறைத்த நீர்..... தீயவர்கள் மிகுந்துள்ள ஓர் வழியாக ஒரு விவசாயி வந்து கொண்டிருக்கிறார். ஊரில் நல்ல மழை பெய்திருந்தது. வயல்களில் எல்லாம் பயிர்கள் செழித்து வளர்ந்திருந்தன. அமோக  விளைச்சல். இந்த ஊரின் செழிப்பான சூழல் அந்த விவசாயியை ஆச்சரியப்பட வைத்தது. அக்கம்பக்கத்தில் எல்லாம் அடாவடிக்காரர்கள் நிறைந்த ஊர் என்று பெயர் எடுத்து வைத்திருக்கும் ஊர். அடிபிடி, வெட்டு குத்துக்குப் பஞ்சம் இல்லாத ஊர். இந்தக் கொடுமைக்காரர்கள் வசிக்கும் ஊர் இவ்வளவு செழிப்பாக இருக்கிறதே. கடவுளுக்கு கண்ணே இல்லையா? என்று சொல்லி ஒரு மரத்து நிழலில் உட்கார்ந்து புலம்ப ஆரம்பித்துவிட்டார் விவசாயி. "தம்பி...." குரல் கேட்டு நிமிர்ந்து பார்க்கிறார். ஏதிரே ஒரு  பாட்டி கையில் கம்போடு நின்று கொண்டிருந்தார். "என்ன..என்ன வேணும் ?" படபடவென்று பேசினார் விவசாயி. "கோபமாக இருக்கிறீர்களா....சரி பரவாயில்லை .நான் வேறு யாரிடமாவது கேட்டுக் கொள்கிறேன் "என்றபடி அங்கிருந்து கடக்க நினைத்தார் பாட்டி. "என்ன வேணும்.... சொல்லுங்க எங்கே போகணும் ?" மறுபடியும் ...