வாய்மை எனப்படுவது யாதெனின்....
வாய்மை எனப்படுவது யாதெனின்... " வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இல்லாத சொலல் " குறள் : 291 வாய்மை- உண்மை எனப்படுவது- என்று சொல்லப்படுவது யாதெனில்-எது என்றால் யாதொன்றும்- எதுவாயினும் தீமை- கெடுதல் இல்லாத -இல்லாதவற்றை சொலல்- சொல்லுதல் வாய்மை என்று சொல்லப்படுவது யாது என்றால் யாருக்கும் எந்த இடத்திலும் தீங்கு தராதவற்றைச் சொல்லுதலாகும். விளக்கம் : உண்மை யாரையும் காயப்படுத்தாது. உண்மை காலமறிந்து வெளிப்படும். .நமது சொல்லால் எந்த ஒரு உயிரும் காயப்பட்டு விடுமானால் நமது சொல்லில் மெய்ம்மை இல்லை என்று ஆகிவிடும். நாம் சொல்லும் சொற்கள் பிறர்க்குத் தீமை விளைவிக்காததாக இருந்தால் அதுதான் வாய்மை. உண்மை பேசுகிறேன் என்று சிலர் பேசும் சொற்கள் பிறரைக் காயப்படுத்தலாம்.இந்த சொற்கள் வாய்மை என்ற அகராதியில் வராது. தன் உள்ளம் அறிந்தவரை பிறர்க்குக் கேடில்லா மொழி. நன்மை பயக்கும் மொழி. எல்லா இடத்தும் எல்லா நேரங்களிலும் யாருக்கும் இடர் உண்டாக்காத மொழி. அதுவே வாய்மை எனப்படும் என்கிறார் வள்ளுவர். உள்ளதைச் சொ...