முதுமொழிக்காஞ்சி
முதுமொழிக்காஞ்சி முதுமொழிக் காஞ்சி என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருள் உடையது.. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும் குறிக்கும் சொல்.பல மணிகள் கோத்த காஞ்சி அணி போல முதுமொழிகள் பல கோத்த நூல் என்பதால் இது முதுமொழிக் காஞ்சி என அழைக்கப்படுகிறது. முதுமொழிக்காஞ்சியை இயற்றியவர் மதுரைக் கூடலூர் கிழார் என்பவராவார். கூடலூர் இவர் பிறந்த ஊராக இருக்கலாம். பின்னர் இவர் தமிழ் வளர்த்த மதுரையில் புகுந்து வாழ்ந்து வந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கூடலூர் கிழார் என்னும் குறிப்பினால் இவரை வேளாண் மரபினர் என்று சொல்கின்றனர். இந்நூல் பத்துப் பத்துக்களாக வகைப்படுத்தப்பட்டு மொத்தம் நூறு பாடல்கள் கொண்டதாக உள்ளது. ஒவ்வொரு பத்திலும் பத்து முதுமொழிகள் உள்ளன. ஒவ்வொரு செய்யுளின் முதல் அடியும், 'ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்' என்றே தொடங்குகிறது.. ஒவ்வொரு பத்துப் பாடல்களின் அடிகளிலும் பயின்று வரும் சொற் குறிப்பைக் கொண்டு அந்தப் பத்துப் பாடல்களும் தனித்தனியாக தலைப்பிடப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. அ...